மார்ச் 24 முதல் SALE.. ரூ.2000 ஆபர்.. 7200mAh பேட்டரி IP69+ ரேட்டிங்.. பக்கா பட்ஜெட்டில் புது VIVO 5G போன்!
7200எம்ஏஎச் பேட்டரி உடன் இந்திய சந்தையில் அறிமுகமான விவோ (VIVO) நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆன விவோ டி5எக்ஸ் 5ஜி (VIVO T5x 5G) மாடலின் விற்பனை மார்ச் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. என்ன விலை? என்னென்ன ஆபர்? என்னென்ன அம்சங்கள்? யார் எல்லாம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்? இதோ விவரங்கள்:
விவோ டி5எக்ஸ் 5ஜி விலை விவரங்கள்: இந்தியாவில் விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கிறது. பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோவின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 24, 2026 முதல் பிளிப்கார்ட் (Flipkart), விவோ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் அனைத்து பார்ட்னர் ரீடெயில் கடைகளின் வழியாக சைபர் கிரீன் மற்றும் ஸ்டார் சில்வர் ஆகிய இரண்டு கலர்களில் வாங்க கிடைக்கும்.
விவோ டி5எக்ஸ் 5ஜி சேல் ஆபர்கள்: எச்டிஎப்சி (HDFC), ஆக்சிஸ் (Axis), எஸ்பிஐ (SBI) பேங்க் கார்டுகள் மற்றும் யுபிஐ (UPI) மூலம் வாங்கும்போது ரூ.2000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் மற்றும் இந்த ஸ்மார்ட்போன் 6 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ ஆப்ஷனின் கீழும் வாங்க கிடைக்கும்.
விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.76 இன்ச் (2408×1080 பிக்சல்கள்) ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது 4என்எம் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 டர்போ சிப்செட் சிப்செட் கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இது சோனி ஐஎம்எக்ஸ்852 சென்சார், எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் (எப்/2.4 அபெர்க்ஷர்) டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதன் கேமரா செட்டப்பில் எல்இடி பிளாஷ் மற்றும் 4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவும் உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி (எப்/2.45 அபெர்க்ஷர்; 4கே ரெக்கார்டிங்) செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை விவோ டி5எக்ஸ் 5ஜி ஆனது 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 7200எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது டூவயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒர்ஜின்ஓஎஸ் 6, யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் மிலிட்டரி கிரேட் டியூரபிலிட்டி, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 பிளஸ் ரேட்டிங் ஆகியவைகளை கொண்டுள்ளது.
விவோ டி5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை யாரெல்லாம் நம்பி வாங்கலாம்? விவோவின் இந்த ஸ்மார்ட்போன் "பகட்டான" அல்லது ஒரு "ஆடம்பரமான" ஸ்மார்ட்போன் அல்ல. மாறாக தினசரி யன்பாட்டுக்கு உகந்த, கடினமான ஸ்மார்ட்போனாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் பின்வரும் தேவைகளை கொண்டிருந்தால், இது ஸ்மார்ட்போன் உங்களுக்கான ஒரு சரியான தேர்வாக இருக்கும்
1. நீண்ட நேரம் ஸ்மார்ட்போனில் வேலை செய்பவர், அதிகம் பயணம் செய்பவர், மற்றும் பவர் பேங்கை நம்பி இருக்க முடியாதவர்.
2. கனமழை, கீழே விழுதல் மற்றும் தூசியை தாங்கக்கூடிய ஒரு ஸ்மார்ட்போனை விரும்புபவர்.
3. அதிக செயல்திறன் தேவைப்படும் மொபைல் கேம்களை விளையாடுபவர் மற்றும் அதிக வெப்பமடையாமல் நிலையான ஃபிரேம் ரேட்-ஐ தேவைப்படுபவர்.
4. வாங்கும் ஸ்மார்ட்போனை அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை வைத்திருக்க திட்டமிடுபவர் மற்றும் நீண்டகால சாஃப்ட்வேர் மற்றும் பேட்டரி லைஃப்பை விரும்புபவர்.


Click it and Unblock the Notifications








