Home
Mobile

அண்ணன் வந்துட்டார் வழி விடு.. 9000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 5ஜி உடன் இன்னொரு புது OnePlus போன்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் கூடிய விரைவில் (இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் வருகிற 2026 ஏப்ரல் மாத தொடக்கத்தில்) இந்தியாவில் அதன் ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி (OnePlus Nord 6 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ டீஸர் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

இருப்பினும் ஒன்பிளஸ் நோர்ட் 6 5ஜி மட்டுமே இந்தியாவிற்கு வரும் ஒரே ஒரு நோர்ட்-பிராண்டட் ஸ்மார்ட்போன் ஆக இருக்காது என்று தெரிகிறது. மாறாக ஒன்பிளஸ் நிறுவனம் அதன் நோர்ட் 6 சீரீஸை அறிமுகம் செய்யும் என்றும், அதன் கீழ் நோர்ட் 6 மாடலுடன் சேர்த்து ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி (OnePlus Nord CE 6) மாடலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 5ஜி உடன் இன்னொரு புது OnePlus போன்!

ஏனென்றால் CPH2805 என்கிற மாடல் நம்பரை கொண்ட ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவின் பிஐஎஸ் (BIS) அதிகாரசபையிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறும் ஸ்கிரீன்ஷாட் ஒன்று ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. வெளியான லிஸ்டிங் ஸ்மாட்போனின் மடல் பெயரை குறிப்பிடவில்லை. ஆனாலும் அது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 ஆக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

மேலும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் டர்போ 6வி (OnePlus Turbo 6V) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்க்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது இது ஒன்பிளஸ் நோர்ட் 6வி (OnePlus Nord 6V) என்கிற பெயரை பெறவும் வாய்ப்புள்ளது.

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 அல்லது நோர்ட் 6வி மாடலானது நோர்ட் டர்போ 6வி ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டால், இது 1.5கே ரெசல்யூஷன், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொண்ட 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Qualcomm Snapdragon 7s Gen 4) சிப் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த சிப்செட் LPDDR5x ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை இது 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 2-மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 100W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் ஒரு பெரிய 9,000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். கடைசியாக இது இரட்டை ஸ்பீக்கர்ஸ், IP68/IP69 ரேட்டிங் உடனும் வரலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட் உடன் வரலாம். இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 9000mAh பேட்டரியை பேக் செய்யலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட்6 ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பிளாட் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை இது 50MP LYT-600 OIS ப்ரைமரி கேமரா + 8MP அல்ட்ராவைட் ஆங்கிள் கேமராக்களுடன் வரலாம். தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 ரேட்டிங் உடன் வரலாம். கடைசியாக இது 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம். தற்போது வரை, ஒன்பிளஸ் நோர்ட் 6 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் சரியான இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. அதுகுறித்த தகவல் வெளியானதும், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
One more New 9000mAh Battery Phone For India OnePlus Nord CE 6 5G Launching Soon What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X