தாயை போல் தண்ணி குடிக்க சொல்லும் Fire Boltt Ninja Pro Plus ஸ்மார்ட் வாட்ச்! ரொம்ப கம்மி விலை.!

|

Fire Boltt நிறுவனம் தற்போது நிஞ்சா காலிங் ப்ரோ ப்ளஸ் வாட்ச்சை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்ச் ஆனது ப்ளூடூத் காலிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பிளாக், ப்ளூ, க்ரீன், கோல்ட் பிளாக், பிங்க், சில்வர் மற்றும் டார்க் க்ரே வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. Ninja Pro Plus ஆனது 240*260 பிக்சல்கள் தீர்மானத்துடனான பெரிய டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது.

தாயை போல் தண்ணி குடிக்க சொல்லும் Fire Boltt ஸ்மார்ட் வாட்ச்!

ப்ளூடூத் அழைப்பு அம்சத்துடன் கூடிய மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்சை நீங்கள் வாங்க விரும்பினால், ஃபயர் போல்ட் உங்களுக்கு பல விருப்பங்களை வழங்குகிறது. ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச்களின் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த நிறுவனத்தின் எந்த ஸ்மார்ட்வாட்சும் உச்ச விலை கொண்டது கிடையாது.

120 விளையாட்டு முறைகள்

ஸ்மார்ட்வாட்ச் போர்ட்ஃபோலியோவை விரிவுப்புடுத்தும் விதமாக ஃபயர் போல்ட் தற்போது நிஞ்சா காலிங் ப்ரோ பிளஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடரில் உள்ள பிற நிஞ்சா ஸ்மார்ட்வாட்ச்களை போன்றே இந்த வாட்ச் ப்ளூடூத் அழைப்பு அம்ச ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த வாட்ச் ஆனது 120 விளையாட்டு முறைகளுக்கான அணுகலை கொண்டிருக்கிறது.

Fire Boltt Ninja Pro Plus அறிமுகம்

Fire Boltt Ninja Pro Plus அறிமுகம் குறித்து ஃபயர் போல்ட்டின் இணை நிறுவனர்களான ஆயுஷி மற்றும் அர்னவ் கிஷோர் கூறுகையில், "எங்கள் நுகர்வோருக்கு இந்த சமீபத்திய தொழில்நுட்பத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். நிஞ்ஜா தொடரின் ஒரு பகுதியாக, நிஞ்ஜா காலிங் ப்ரோ பிளஸ் பாக்கெட் விலைக்கு ஏற்றதாக இருக்கும். இந்த விலையில் கற்பனை செய்து பார்க்க முடியாத பெரும்பாலான அம்சங்களை வழங்கும். இதில் சமீபத்திய அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட சுகாதார தொகுப்பு ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. சரியான விலை கொண்ட இந்த தயாரிப்பு புதிய மற்றும் இளைய நுகர்வோரை சென்றையும் என நாங்கள் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

தாயை போல் தண்ணி குடிக்க சொல்லும் Fire Boltt ஸ்மார்ட் வாட்ச்!

Fire Boltt Ninja Pro Plus விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Fire Boltt Ninja Pro Plus விலை ஆனது ரூ.1,799 என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது பிளாக், ப்ளூ, க்ரீன், கோல்ட் பிளாக், பிங்க், சில்வர் மற்றும் டார்க் க்ரே வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. நிஞ்சா ப்ரோ ப்ளஸ் ஆனது அமேசானில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

Fire Boltt Ninja Pro Plus சிறப்பம்சங்கள்

Fire Boltt Ninja Pro Plus சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 240*260 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட பெரிய 1.83 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆதரவுக்கு என ஸ்மார்ட்வாட்ச் IP67 வாட்டர் ரெசிஸ்டென்ட் அம்சத்தைக் கொண்டுள்ளது. வாட்டர் மற்றும் தூசியில் இருந்து இந்த ஸ்மார்ட் வாட்ச் பாதுகாக்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த வாட்ச்சில் வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வாட்ச் பயனர்களை நினைவூட்டல் அமைக்கவும், பயணத்தின் போது பலவற்றை செய்யவும் அனுமதிக்கிறது.

தாயை போல் தண்ணி குடிக்க சொல்லும் Fire Boltt ஸ்மார்ட் வாட்ச்!

பல ஆரோக்கிய கண்காணிப்பு அம்சம்

இந்த ஸ்மார்ட்வாட்ச் இல் Spo2 கண்காணிப்பு, இதயத் துடிப்பு கண்காணிப்பு, ஸ்லீப்பிங் கண்காணிப்பு போன்ற பல ஆரோக்கிய கண்காணிப்பு அம்சங்கள் இருக்கிறது. இது தொடர்ந்து கண்காணிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இந்த டைம் பீஸில் கேமரா கட்டுப்பாடு, இசை கட்டுப்பாடு மற்றும் வானிலை புதுப்பிப்புகள் என பல ஆதரவுகளை வழங்குகிறது.

தண்ணீர் குடிக்கச் சொல்லும்

இந்த வாட்ச் இல் உள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இது பயனர்கள் சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதையும் நினைவூட்டுகிறது. அதேபோல் பயனர்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால் அவர்களை நடக்கும்படியும் அறிவுறுத்துகிறது.

அனைத்துக்கும் மேலாக நிஞ்சா ப்ரோ ப்ளஸ் ப்ளூடூத் காலிங் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. விரைவான அனுகலுக்கான டயல் பேட், காலிங் ஹிஸ்டரி போன்ற பல அம்ச ஆதரவுகளும் இதில் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Fire Boltt Ninja Pro Plus smart watch that tells you to drink water like a mother: Rs.1799 Only

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X