அம்பானி சார்.. தில்லு இருந்தா? BSNL-ஐ போல வெறும் ரூ.329-க்கு இப்படி ஒரு ரீசார்ஜை அறிமுகம் செய்ங்க பார்க்கலாம்!

|

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தால் மட்டுமல்ல, பார்தி ஏர்டெல் (Bharthi Airtel) நிறுவனத்தால் கூட.. வெறும் ரூ.329 க்கு இப்படி ஒரு ரீசார்ஜை அறிமுகம் செய்ய முடியாது; வழங்க முடியாது!

மேலோட்டமாக பார்த்தால்.. இது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை பற்றிய ஓவர் பில்ட்-அப் கட்டுரையை போலவே தெரியும்!

அதுவே வெறும் ரூ.329-க்கும் மற்றும் ரூ.500-க்குள்ளும், பிஎஸ்என்எல் நிறுவனமானது என்னென்ன நன்மைகளை கொடுக்கிறது என்பதை பற்றி அறிந்தால்.. இது ஓவர் பில்ட்-அப் அல்ல, உண்மை என்று புரிந்து கொள்வீர்கள்!

சந்தேகமே வேண்டாம்!

சந்தேகமே வேண்டாம்!

4G, 5G சேவைகள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், ஃபிக்ஸட் பிராட்பேண்ட் இண்டர்நெட் சேவைகள் (Fixed Broadband Internet Services) என்று வந்து விட்டால் - சந்தேகமே வேண்டாம் - பிஎஸ்என்எல் நிறுவனத்தை அடித்துக்கொள்ள ஆளே இல்லை; ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் உட்பட!

ஏனென்றால், ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் ஆனது, தங்களது வாடிக்கையாளர்களுக்கு சரியாக என்ன தேவை என்பதை விட, ஒன்றுக்கு ஒன்று மோதிக்கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன.

நினைவூட்டும் வண்ணம், ஜியோவின் பிராட்பேண்ட் சேவைகள் (Jio Broadband Plans) ஆனது ரூ.399 முதல் தொடங்குகிறது; மறுகையில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைகள் (Airtel Broadband Plans) ஆனது ரூ.499 முதல் தொடங்குகிறது!

வேலையை காட்டிய BSNL.. ஜனவரி 1 முதல் சைலன்ட் ஆக அமல் ஆன புதிய மாற்றம்! இனிமே இப்படி தான்!வேலையை காட்டிய BSNL.. ஜனவரி 1 முதல் சைலன்ட் ஆக அமல் ஆன புதிய மாற்றம்! இனிமே இப்படி தான்!

ஆனால் BSNL அப்படி இல்லை!

ஆனால் BSNL அப்படி இல்லை!

BSNL நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகள் மற்றும் அதற்கேற்ற விலை நிர்ணயங்களை பூர்த்தி செய்யும் வண்ணம் பல்வேறு வகையான பிராட்பேண்ட் திட்டங்களை கொண்டுள்ளது.

இந்நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டங்கள் (BSNL Broadband Plans) ஆனது வெறும் ரூ.329 முதல் தொடங்குகிறது. ரூ.329 ஆனது மிகவும் கவனிக்கப்படும் பிராட்பேண்ட் திட்டங்களில் ஒன்றாகும்!

ஏனென்றால் ரூ.500 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மற்ற 4 பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்களில், இதுதான் பேஸிக் ரீசார்ஜ் (Basic Recharge) ஆகும்

சரி வாருங்கள்! பிஎஸ்என்எல்-ன் ரூ.329 பிராட்பேண்ட் திட்டத்துடன் சேர்த்து ரூ.500 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 4 திட்டங்களை பற்றியும், அவைகளின் நன்மைகளை பற்றியும் விரிவாக பார்க்கலாம்!

ரூ.329-க்கு என்னென்ன கிடைக்கும்?

ரூ.329-க்கு என்னென்ன கிடைக்கும்?

பிஎஸ்என்எல்-ன் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.329 திட்டமானது 20எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீட்டை வழங்கும் ஒரு பேஸிக் பிராட்பேண்ட் பிளான் ஆகும்.

இதன் கீழ் மொத்தம் 1000ஜிபி என்கிற டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா வரம்பை மீறிய பிறகு, இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 4Mbps ஆக குறைக்கப்படும். டேட்டா நன்மையை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையையும் அணுக கிடைக்கும்!

தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

பிஎஸ்என்எல் ரூ.399 திட்டத்தின் நன்மைகள் என்ன?

பிஎஸ்என்எல் ரூ.399 திட்டத்தின் நன்மைகள் என்ன?

ரூ.399 திட்டமும் கூட அதே 1000ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்கும். ஆனால் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 30எம்பிபிஎஸ் ஆகும். அதாவது இந்த பிராட்பேண்ட் பிளானின் டவுன்லோட் ஸ்பீட் ஆனது 30Mbps ஆகும்.

ஆனாலும் கூட 1000ஜிபி என்கிற டேட்டா வரம்பை அடைந்த, ரூ.329-ஐ போலவே இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீடும் கூட 4எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். மேலும் ரூ.329-ஐ போலவே இதுவும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) வழங்கும்.

ரூ.449 பிளானை ரீசார்ஜ் செய்தால் என்னென்ன கிடைக்கும்?

ரூ.449 பிளானை ரீசார்ஜ் செய்தால் என்னென்ன கிடைக்கும்?

ரூ.399-ஐ போலவே BSNL-ன் ரூ.449 பிராட்பேண்ட் திட்டமும் கூட 30Mbps என்கிற இண்டர்நெட் ஸ்பீடையே வழங்குகிறது. ஆனால் 1000ஜிபிக்கு பதிலாக இது மொத்தம் 3300GB என்கிற அளவிலான டேட்டாவை வழங்கும்.

வழக்கம் போல, 3.3டிபி என்கிற டேட்டா வரம்பை அடைந்த பிறகு - இந்த பிளானின் - இண்டர்நெட் ஸ்பீட்டும் கூட 4Mbps ஆக குறைக்கப்படும். மறுபடியும் - இந்த திட்டமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மைகளை வழங்கும்.

நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசு! BSNL-ஐ நக்கல் அடிச்சவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க?நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசு! BSNL-ஐ நக்கல் அடிச்சவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க?

பிஎஸ்என்எல் ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்:

பிஎஸ்என்எல் ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்:

இந்த பட்டியலில், கடைசியாக உள்ள ரூ.499 ஆனது, ரூ.449 திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதே நன்மைகளை தான் வழங்கும்.

அதாவது 3300GB டேட்டா, டேட்டா வரம்பை மீறிய பின்னர் 4Mbps என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் போன்றவைகளை வழங்கும். ஆனால் 3.3ஜிபி டேட்டாவிற்கான இதன் இன்டர்நெட் ஸ்பீட் சற்றே அதிகமாகும் - அது 40Mbps ஆகும்!

Best Mobiles in India

English summary
Even Reliance Jio and Airtel Cannot Give This Kind Of Broadband Plans For Just Rs 329 like BSNL

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X