கதை முடிஞ்சது.. Twitter-ஐ மறந்துடுங்க மக்களே.. Elon Musk-ன் 3 புதிய அறிவிப்புகள்!

|

ட்விட்டர் (Twitter) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டர் தளத்தின் "பழைய கதைகளை முடிக்கும் படியான" 3 புதிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட மாற்றங்கள் எப்போது முதல் அமலாகும் என்கிற விவரங்களையும் வழங்கி உள்ளார். அதென்ன மாற்றங்கள்? இதோ விவரங்கள்:

ட்விட்டரை மறந்து விடுங்கள்!

ட்விட்டரை மறந்து விடுங்கள்!

அடுத்தடுத்த வாரங்களில் நடக்கவில்லை மாற்றங்களை பற்றி கேள்விப்பட்டால்.. ஒரு காலத்தில் ட்விட்டர் வலைத்தளம் எப்படி இருந்தது என்பதையே நீங்கள் அடியோடு மறந்து விடுவீர்கள்!

ஏனென்றால், ட்விட்டர் (Twitter) வலைத்தளத்தின் சர்ஃபிங் (Surfing) அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்தின் கீழ், ட்விட்டர் வலைதளத்தின் யூஸர் இன்டர்ஃபேஸில் (User Interface) கைவைத்துள்ளார் எலான் மஸ்க்!

எலான் மஸ்க்கின் சமீபத்திய ட்வீட் ஒன்று, ட்விட்டரின் யூஸர் இன்டர்பேஸில் (UI) வரவுள்ள 3 முக்கியமான மாற்றங்களை பட்டியலிடுகிறது.

தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?

அதென்ன மாற்றங்கள்?

அதென்ன மாற்றங்கள்?

முதலில் ட்விட்டர் தளத்தில் ரைட் மற்றும் லெஃப்ட் ஸ்வைப் (Right / Left Swipe) அறிமுகம் செய்யப்படும்.

இது ரெக்கமென்டெட் (Recommended) ட்வீட்ஸ் மற்றும் ஃபாலோவ்டு (Followed) ட்வீட்ஸ்களுக்கு இடையே மாறுவதற்கான ஒரு எளிமையான வழியாக இருக்கும். இந்த மாற்றம், இந்த வார இறுதியில் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையிலாக, ட்விட்டர் பயனர்கள் மேல் இடதுபுறத்தில் உள்ள த்ரீ ஸ்டார்களை (Three Stars) கிளிக் செய்வதன் வழியாகவே இரண்டு வகையான ஃபீட்களுக்கு (Feed) இடையில் மாற முடியும். இந்த வழிமுறை கூடிய விரைவில் மாற உள்ளது.

ட்விட்டருக்கு வரும் இரண்டாவது மாற்றம்!

ட்விட்டருக்கு வரும் இரண்டாவது மாற்றம்!

ரைட் மற்றும் லெஃப்ட் ஸ்வைப்பை தொடர்ந்து ட்விட்டர் டீட்டெயில்ஸில் (Twitter Details) புக்மார்க் பட்டன் (Bookmark Button) அறிமுகமாகும். இந்த பட்டன், ஒரு வாரம் கழித்து வெளியிடப்படும்.

ட்விட்டருக்கு வரும் புக்மார்க் பட்டன் வழியாக, பயனர்கள் தங்களுக்கு பிடித்த அல்லது தாங்கள் சேமித்து வைத்துக்கொள்ள விரும்பும் ட்வீட்களை புக்மார்க் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

மூன்றாவது மற்றும் முக்கியமான மாற்றம்!

மூன்றாவது மற்றும் முக்கியமான மாற்றம்!

எலான் மஸ்க்கின் கூற்றுப்படி, வருகிற பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் லாங் ஃபார்ம் ட்வீட்ஸ் (Long Form Tweets) அறிமுகமாகும். அதாவது வார்த்தை கட்டுப்பாடுகள் இல்லாத நீண்ட வடிவிலான ட்வீட்களை பதிவு செய்ய வழிவகுக்கும் ஆதரவு அறிமுகமாகும்.

நினைவூட்டும் வண்ணம், லாங் ஃபார்மெட் ட்வீட் ஆனது நேற்றோ, இன்றோ அறிவிக்கப்படும் புதிய மாற்றம் அல்ல. ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய சிறிது நேரத்திலேயே எலான் மஸ்க் அறிவித்த முதல் மாற்றமே - இதுதான்!

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

பெரும்பாலான பயனர்கள் லாங் ஃபார்மெட் ட்வீட்களை ஆதரிக்கவில்லை என்றாலும் கூட, சிலர் இதை பெரிதும் வரவேற்கின்றனர்.

லாங் ஃபார்மெட் ட்வீட்களோடு சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ள மற்ற மாற்றங்களும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாற்றங்களும் வேலைக்கு ஆகுமா.. ஆகுதா? - காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

தம்பி Elon Musk.. சிஇஓ சீட்ல இருந்து கொஞ்சம் எழுந்திரு.. நான் உட்காரணும்.. அமெரிக்காவில் மாஸ் காட்டும் தமிழர்!தம்பி Elon Musk.. சிஇஓ சீட்ல இருந்து கொஞ்சம் எழுந்திரு.. நான் உட்காரணும்.. அமெரிக்காவில் மாஸ் காட்டும் தமிழர்!

ஏற்கனவே வேறு என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன?

ஏற்கனவே வேறு என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன?

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் ஆன எலான் மஸ்க், இந்த தளம் செயல்படும் விதத்தையே மாற்ற விரும்புகிறார். அதனொரு பகுதியாக வியூ கவுண்ட் (View count) மற்றும் ட்விட்டர் ப்ளூ (Twitter Blue) போன்ற சில மேம்படுத்தப்பட்ட அம்சங்களை அறிமுகம் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி ட்விட்டர் வழியாக பகிரப்படும் வீடியோக்களின் நீளமும் (Video Length) அதிகரிக்கப்பட்டுள்ளது; மேலும் அவைகளை ட்விட்டர் பிளாட்ஃபார்ம் வழியாகவே அப்லோட் செய்லாம்.

Best Mobiles in India

English summary
Elon Musk Announced 3 New Changes in Twitter User Interface Including Long Form Tweets

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X