டிக்டாக் செயலிக்கு தடை உத்தரவு பிறப்பிப்பு: காலக்கெடு விதித்த அதிபர் டிரம்ப்!

|

சீன செயலியான டிக்டாக் செயலி மீது தடை உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். காலக்கெடுவோடு இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் செயலி மீது தடை

டிக்டாக் செயலி மீது தடை

நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை கொள்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் காரணமாக சீன செயலிகளான டிக்டாக் செயலி மீது தடை உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட உத்தரவு

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட உத்தரவு

இந்தியாவை அடுத்து அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட உத்தரவை குறித்து பார்க்கலாம்.

அச்சுறுத்தல் காரணமாக தடை

அச்சுறுத்தல் காரணமாக தடை

அமெரிக்க மக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்றவைகள் செயலி மூலமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்ள முடியும். இதுபோன்ற அச்சுறுத்தல் காரணமாக சீன செயலியான டிக்டாக்கிற்கு தடை விதித்துள்ளதாக அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

45 நாளில் தடை உத்தரவு நடைமுறை

45 நாளில் தடை உத்தரவு நடைமுறை

இந்த உத்தரவின்படி 45 நாளில் இந்த தடையுத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்தஒரு நிறுவனமும் டிக்டாக் தாய் நிறுவனமான பைட் டான்ஸுடன் எவ்வித பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது.

59 சீன செயலிகளுக்கு தடை

59 சீன செயலிகளுக்கு தடை

டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. டிக்டாக் செயலி உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவின் முன்னணி நிறுவனமான பைட்டான்ஸ் (Bytedance) நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஆனது அதிகளவு பதிவிறக்கங்களை பெற்றுள்ளது, மேலும் இந்தியாவிலும் பிரபலமான செயலிகளுள் இதில் இடம்பெற்றது.

2021 ஜூலை வரை வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி: பேஸ்புக் அறிவிப்பு2021 ஜூலை வரை வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு அனுமதி: பேஸ்புக் அறிவிப்பு

46 மில்லியன் பயனாளர்கள்

46 மில்லியன் பயனாளர்கள்

அமெரிக்காவிலும் 46 மில்லியன் பயனாளர்கள் இந்தியாவில் மட்டுமின்றி இந்த செயலி அமெரிக்காவிலும் 46 மில்லியன் பயனாளர்களை கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டிக் டாக் உட்பட சமூகவலைதளங்களில் பிரபலமாக இருக்கும் சீன ஆப்களை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருதாக வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ சமீபத்தில் தெரிவித்தார்.

டிக் டாக் செயலிக்கு தடை

டிக் டாக் செயலிக்கு தடை

இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். இதுகுறித்து பிளோரிடா மாகாணத்தில் செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய அவர், டிக்டாக்தடை தொடர்பான ஆணையில் நாளை கையெழுத்திட போவதாக தெரிவித்திருந்தார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை

மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை

இதற்கிடையே , டிக் டாக் செயலியை வாங்குவதற்கு அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன் வந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதில், மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையின் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் டிக்டாக் செயலி குறித்து வெளியாகும் செய்திகள், வதந்திகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என டிக்டாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

file image

Best Mobiles in India

English summary
Donald Trump Issued order to Ban Chinese app TikTok

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X