பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!

|

பிப்ரவரி 7 ஆம் தேதி Could 11 நிகழ்வு நடத்தப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் OnePlus நிறுவனம் பல கேட்ஜெட்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதை நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

பிப்ரவரி 7 வரை காத்திருங்கள்

பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற இருக்கும் Cloud 11 வெளியீட்டு நிகழ்வில் OnePlus பல்வேறு புதிய கேட்ஜெட்களை அறிமுகம் செய்ய தயாராகி உள்ளது. இந்த லிஸ்ட்டில் OnePlus 11 5G ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன், OnePlus TV 65 Q2 Pro, OnePlus Buds 2 Pro ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் என பல கேட்ஜெட்கள் அறிமுகம் செய்ய இருக்கிறது.

பிப்.,7 ரகரகமா வரும் புது OnePlus போன், டிவி! வெயிட் பண்ணுங்க!

அறிமுகமாகும் ஒன்பிளஸ் 11ஆர்

இதில் கவனிக்கத்தக்க மற்றொரு கேட்ஜெட் ஒன்பிளஸ் பேட் ஆகும். ஒன்பிளஸ் பேட் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 7 ஆம் தேதி நடக்கும் நிகழ்வில் நிறுவனம், ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தமா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்தது. இதை தற்போது நிறுவனம் தெளிவுப்படுத்தி உள்ளது. ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 7 ஆம் தேதி அறிமுகமாகும் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்

ஒன்பிளஸ் 11 தொடரில் இடம்பெறும் OnePlus 11R ஆனது உயர் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்த்த காரணத்தால் பலரும் இந்த போனின் மீது கவனம் செலுத்தினர். இந்த நிலையில் ஒன்பிளஸ் 11ஆர் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.

சியோமி, விவோ, ஒப்போ, சாம்சங்

நிறுவனம் ட்விட்டரில் OnePlus 11R அம்சம் குறித்து டீஸ் செய்துள்ளது. இதில் சிப்செட் குறித்த தகவலை தவிர வேறு எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் முன்னதாகவே இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த போன் சியோமி, விவோ, ஒப்போ, சாம்சங் போன்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்.,7 ரகரகமா வரும் புது OnePlus போன், டிவி! வெயிட் பண்ணுங்க!

OnePlus 11R 5G சிறப்பம்சங்கள்

OnePlus 11R சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் நேரடி புகைப்படம் கடந்த ஆண்டு ஆன்லைனில் வெளிவந்தன. தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் சில அம்சங்களும் கசிந்தது.

ஆன்லைனில் கசிந்த புகைப்படம்

ஒன்பிளஸ் 11 இன் விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே கசிந்தது. இதேபோல், OnePlus 11R இன் நேரடி படங்கள் கடந்த ஆண்டு ஆன்லைனில் வெளிவந்தன. அதன்பிறகு, ஸ்மார்ட்போன்களின் கூறப்படும் விவரக்குறிப்புகள் கசிந்தன. OnePlus 11R ஆனது CPH2487 என்ற குறியீட்டுப்பெயர் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

சிறந்த டிஸ்ப்ளே மற்றும் செயல்திறன்

OnePlus 11R ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் விகிதத்துடன் கூடிய 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 2772 X 1240 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. OnePlus ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்ற தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

16ஜிபி ரேம், 512ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்

சிப்செட்டை வைத்தே கணித்துவிடலாம் இதன் விலை சற்று உயர்ந்ததாக இருக்கும் என்று. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம், 12 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் என்ற மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம். அதேபோல் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என 3 ஸ்டோரேஜ் விருப்பங்கள் வெளியாகலாம்.

பிப்.,7 ரகரகமா வரும் புது OnePlus போன், டிவி! வெயிட் பண்ணுங்க!

50MP பிரைமரி கேமரா

OnePlus 11R ஸ்மார்ட்போனில் 12 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா உடன் 50 எம்பி முதன்மை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறலாம் எனவும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேயில் 16 எம்பி செல்பி கேமரா இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

5000mAh பேட்டரி

இந்த OnePlus ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கும் எனவும் 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.1 மூலம் இது இயங்கும் எனவும் இது கூறப்படுகிறது. ஐகானிக் அலர்ட் ஸ்லைடர், ஐஆர் பிளாஸ்டர், இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் என பல்வேறு ஆதரவுகள் இதில் இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Don't Buy Any New Phone or TV till February 7: Oneplus 11R Will Also Launched Along With OnePlus TV 65 Q2 Pro

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X