Dunzo டிரோன்கள் பறக்கவிட DGCA ஒப்புதல்! எதற்கு இந்த டிரோன் தெரியுமா?

|

சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) சமீபத்தில் ஒரு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி ட்ரோன் தயாரிப்பாளரான த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் மற்றும் ஹைப்பர் டெலிவரி பிளாட்ஃபார்ம் தளமான டான்ஸோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் ட்ரோன்களின் சோதனை விமானங்களைச் சோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக DGCA ஒப்புதல் வழங்கியுள்ளது.

34 விண்ணப்பங்களிலிருந்து இந்த இரண்டு நிறுவனங்கள் தேர்வு

34 விண்ணப்பங்களிலிருந்து இந்த இரண்டு நிறுவனங்கள் தேர்வு

பியாண்டு விஷுவல் லைன் ஆஃப் சைட் (Beyond Visual Line of Sight - BVLOS) ட்ரோன் பரிசோதனையை நடத்துவதற்கு DGCA விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கச் சொன்னது. அதனைத் தொடர்ந்து இந்த பரிசோதனை முறைக்கு 34 முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளது. விண்ணப்பிக்கப்பட்ட 34 விண்ணப்பங்களிலிருந்து இந்த இரண்டு நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று DGCA மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

100 மணி நேரம் சோதனை ஓட்டம்

100 மணி நேரம் சோதனை ஓட்டம்

இந்த பரிசோதனை முறைக்கான சோதனை ஓட்டத்தைப் பாதுகாப்பாக நடத்த இரண்டு நிறுவனங்களுக்கும் பியாண்டு விஷுவல் லைன் ஆஃப் சைட் பரிசோதனை நேரமாக சுமார் 100 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கான சோதனை ஓட்ட அனுமதி அறிக்கையை DGCA வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

Google ceo சுந்தர் பிச்சை மன்னிப்பு கேட்டார்., மரியாதை தெரிஞ்ச மனிதர்: அமெரிக்க அதிபர் டிரம்ப்!Google ceo சுந்தர் பிச்சை மன்னிப்பு கேட்டார்., மரியாதை தெரிஞ்ச மனிதர்: அமெரிக்க அதிபர் டிரம்ப்!

 BVLOS ஒழுங்குமுறை

BVLOS ஒழுங்குமுறை

த்ரோட்டில் ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் மற்றும் டான்ஸோ ஆகிய இரண்டு நிறுவனங்களின் கருத்துகளின் ஆதாரத்தைச் சமர்ப்பித்த பிறகு, விமான ஒழுங்குமுறை BVLOS ஒழுங்குமுறையை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஏப்ரல் இறுதிக்குள் டிரோன் சோதனைகளை நடத்தத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டான்ஸோ ஒப்புதல்

டான்ஸோ ஒப்புதல்

கடந்த ஆண்டு மே மாதம் டி.ஜி.சி.ஏ இந்தியா, ரிமோட்லி பைலட்டேட் ஏர்கிராஃப்ட்ஸ் (remotely piloted aircraft - RPA) டிரோன் சேவைக்கான பி.வி.எல்.ஓ.எஸ் சோதனைகளை நடத்துவதற்கான விண்ணப்பங்களை அழைத்திருந்தது.இதில் டான்ஸோ நிறுவனமும் விண்ணப்பித்திருந்தது , இதற்கிடையில் எங்கள் நிறுவனம் சோதனையை நடத்துவதற்கு DGCA ஒப்புதல் கிடைத்துள்ளதென்று டன்ஸோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Whatsapp டெலீட் மெசேஜ்களை எப்படி மீண்டும் படிப்பது? ஆனால் ரிஸ்க் உங்களுடையது!Whatsapp டெலீட் மெசேஜ்களை எப்படி மீண்டும் படிப்பது? ஆனால் ரிஸ்க் உங்களுடையது!

ஏர் டாக்ஸிகள்

ஏர் டாக்ஸிகள்

DGCA-வின் இந்த நடவடிக்கை இந்தியாவில் ஏர் டாக்ஸிகள் மற்றும் விமான விநியோகங்களில் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதற்கு வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல் நாட்டில் தளவாட சேவைகளை மேம்படுத்துவதில் ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று பல தளவாட வல்லுநர்கள் நம்புகின்றனர்.

டிஜிட்டல் ஸ்கை வலைத்தளம்

டிஜிட்டல் ஸ்கை வலைத்தளம்

முன்னதாக,2018 டிசம்பரில் அரசாங்கம் ட்ரோன்கள் அல்லது ரிமோட்லி பைலட் விமான அமைப்பை சட்டப்பூர்வமாக்கியது. இதற்கான ட்ரோன் பதிவிற்காக 'டிஜிட்டல் ஸ்கை' என்ற ஆன்லைன் போர்ட்டலையும் அறிமுகம் செய்து வைத்தது. இந்த வலைத்தளத்தில் டிரோன் பதிவிற்கு டிரோன்களை 5 வகைகளாகப் பிரித்து அவற்றை நடைமுறைப்படுத்தியது.

5 வகை டிரோன் பிரிவு

5 வகை டிரோன் பிரிவு

அரசாங்கம் விதிப்படி புதிய ட்ரோன் கொள்கையின் கீழ் ஐந்து வெவ்வேறு வகைகளை வரையறுத்தது - நானோ: 250 கிராமுக்குக் குறைவாக அல்லது அதற்குச் சமமாக, மைக்ரோ: 250 கிராம் முதல் 2 கிலோ வரை, சிறியது: 2 கிலோ முதல் 25 கிலோ வரை, நடுத்தரம்: இருந்து 25 கிலோ முதல் 150 கிலோ மற்றும் பெரியது: 150 கிலோவுக்கு மேல் என்று பிரித்து. அதேபோல், 250 கிராமிற்குக் குறைவான எடையுள்ள நானோ ட்ரோன்களுக்கு பதிவு தேவையில்லை என்றும் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
DGCA Has Given Approval To Throttle Aerospace Systems and Dunzo For Drones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X