ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள், பறக்கும் புகார்கள்! கலங்கடிக்கும் உண்மை இதான்!

|

கொரோனா தோற்று நாடு முழுவதும் உயிர் அச்சத்தை மட்டுமின்றி, மக்களின் வாழ்கையிலும் பல அச்சத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாகப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல உலகளாவிய அளவில் வேலையிழப்பு நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது. இப்படி இருக்கையில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அதிரடி முடிவு பல ஊழியர்களைக் கலங்கடித்துள்ளது.

பெஞ் செய்யப்படும் ஊழியர்கள்

பெஞ் செய்யப்படும் ஊழியர்கள்

இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சில நிறுவனங்களில் சம்பளத்தில் புடிப்புகளும் செய்யப்படுகிறது. இன்னும் பல நிறுவனங்களில் சில ஊழியர்கள் 40 நாட்கள் வரை பெஞ் செய்யப்படுகிறார்கள். குறிப்பாக ஐடி நிறுவனங்கள் மற்றும் சில டிஜிட்டல் துறை நிறுவனங்கள் தனது ஊழியர்களைச் சத்தமின்றி பணிநீக்கம் செய்து வருகிறது. தொடர்ந்து இந்த செயல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது என்பது வேதனை.

சத்தமில்லாமல் வேலையிலிருந்து நீக்கம்

சத்தமில்லாமல் வேலையிலிருந்து நீக்கம்

இந்த நிலையில் காக்னிசண்ட் நிறுவனமும் அதன் ஊழியர்களில் சுமார் ஆயிரக்கணக்கான ஊழியரை பெஞ்ச் செய்துள்ளது. இப்பொழுது அடுத்த அடியாக பெஞ்ச் செய்த ஊழியர்களை இப்பொழுது சத்தமில்லாமல் வேலையிலிருந்து நீக்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காக்கினிசன்ட் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 18 ஆயிரம் ஊழியர்களை பெஞ்ச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம்! மெய்சிலிர்க்கும் உண்மை இது தான்!நம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம்! மெய்சிலிர்க்கும் உண்மை இது தான்!

ராஜினாமா செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தும் நிறுவனம்

ராஜினாமா செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தும் நிறுவனம்

தற்பொழுது இந்த நிறுவனம் பெஞ் செய்த ஊழியர்களைத் தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது. இப்படி அதிகளவிலான பணிநீக்கங்களை காக்னிசண்ட் செய்து வருவதாகச் சென்னை மற்றும் கர்நாடகா ஊழியர் சங்கங்களில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக இந்த சங்கங்கள் கானிசன்ட் நிறுவனத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்பியுள்ளது.

இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள்.! உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.!இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள்.! உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.!

பெரிய பாதிப்பில் ஊழியர்கள்

பெரிய பாதிப்பில் ஊழியர்கள்

சத்தமில்லாமல் ஊழியர்களை ராஜினாமா செய்ய கூறி ஐடி நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகிறது என்ற தகவல் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காக்கினிசன்ட் நிறுவனத்தில் மொத்தமாக 2.9 லட்சம் பணியாளர்கள் உள்ளனர், இதில் இந்தியாவில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். உலகமே சிரமப்பட்டு வரும் நிலையில் பணிநீக்கம் என்பது அனைவரின் மனதையும், வாழ்வாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Cognizant Laid Off Thousands Of Employees On Bench Across India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X