ஸ்டீவ் ஜாப்ஸ் கீழ் ஆப்பிளின் தலையெழுத்தை மாற்றிய 5 டாப் கேட்ஜெட்ஸ் இதானா?

|

ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) என்ற பெயரைக் கேட்டதும், உங்களின் கண்களுக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் லோகோ கட்டாயம் வந்து சென்றிருக்கும். உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தக்காரர் என்று இவரைப் பற்றி நம் அனைவருக்கும் சில பல விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆப்பிள் நிறுவனம் இவர் பொறுப்பிலிருந்த நேரத்தில், எண்ணில் அடங்காத பல சாதனங்களை அறிமுகம் செய்தது. இருப்பினும், ஆப்பிள் நிறுவனத்தின் தலையெழுத்தைப் புரட்டிப் போட்டு, ஆப்பிளை வேறு ஒரு லெவெலிற்கு அழைத்த சென்றதற்கு 5 முக்கிய கேட்ஜெட்ஸ்கள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

Steve Jobs பற்றிய மிகப்பெரிய அடையாளம் ஆப்பிள் தானா?

Steve Jobs பற்றிய மிகப்பெரிய அடையாளம் ஆப்பிள் தானா?

Steve Jobs என்று அழைக்கப்படும் இவருடைய முழு பெயர் ஸ்டீவன் பால் ஜாப்ஸ் ஆகும். இவர் பிப்ரவரி 24, 1955 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் உலகத்திற்குத் தெரிந்த மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர், அமெரிக்க தொழிலதிபர், புதிய தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பாளர், வணிக அதிபர், ஊடக உரிமையாளர், முதலீட்டாளர் என்று இவரின் பதவிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆனால், இதையெல்லாம் விட, இவர் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர், தலைவர் மற்றும் CEO என்பது தான் நம் அனைவரின் மனதிலும் பதிந்த மிகப் பெரிய அடையாளமாக இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றிய அந்த 5 கேட்ஜெட்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றிய அந்த 5 கேட்ஜெட்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ் உடல் நலக்குறைவால் அக்டோபர் 5, 2011 ஆம் ஆண்டில் காலமானார். இவரின் மரணத்தைத் தொடர்ந்து டிம் கூக் (Tim Cook) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார். டிம் கூக் தலைமையிலான ஆப்பிள் முன்னேற்றம், ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்த நேரத்தில் இருந்தது போல இல்லை என்பதே பலரின் கருத்து. ஸ்டீவ் ஜாப்ஸ் தலைவராக இருந்த நேரத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைந்த 5 முக்கியமான ஆப்பிள் கேட்ஜெட்களை வரலாறு இன்னும் மறக்கவில்லை.

அந்த கேட்ஜெட்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள உங்களுக்கும் ஆர்வமாக இருக்கிறதா? வாங்கப் பார்க்கலாம்.

27 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்ட Internet Explorer.. 90s கிட்ஸ் குமுறல்..2K கிட்ஸ் கேலி.. என்னாச்சு தெரியுமா?27 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்ட Internet Explorer.. 90s கிட்ஸ் குமுறல்..2K கிட்ஸ் கேலி.. என்னாச்சு தெரியுமா?

1. iMac (1998)

1. iMac (1998)

iMac G3 என்ற இந்த சாதனம் முதலில் iMac என வெளியிடப்பட்டது. ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் பதவிக்காலத்தில், ஆப்பிள் நிதி ரீதியாகச் சிக்கலில் தவித்த போது, ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளின் கீழ் உருவாக்கிய மேகிண்டோஷ் தனிப்பட்ட கம்பியூட்டர் சீரிஸ் இதுவாகும். இந்த iMac ஆனது USB போர்ட் கொண்ட முதல் ஹோம் கம்ப்யூட்டர் மாடலாக வெளிவந்தது. அதுமட்டுமின்றி, வழக்கமான டெஸ்க்டாப் பிசிக்களின் பிளாட்டிக் தோற்றத்தை மாற்றி, வண்ணமயமான நிறங்களில் டிரான்ஸ்பரென்ட் கேஸ் உடன் வெளிவந்து மார்க்ர்டில் பெரிய லாபத்தை ஏற்படுத்தியது.

2. iPod (2001)

2. iPod (2001)

ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட ஆப்பிள் சாதனங்களில் அதிக பிரபலமடைந்த சாதனம் என்றால் அது இந்த ஐபாட் சாதனங்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. காரணம், ஆப்பிள் நிறுவனம் 2022 ஆம் ஆண்டு வரை 450 மில்லியன் ஐபாட் தயாரிப்புகளை விற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மே 10, 2022 இல் ஆப்பிள் ஐபாட் தயாரிப்பு வரிசையை நிறுத்தியது. 20 ஆண்டுகளில், ஐபாட் பிராண்ட் ஆப்பிள் நிறுவனத்தால் நிறுத்தப்பட்ட மிகப் பழமையான சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 13 மீது நம்பமுடியாத எக்ஸ்சேன்ஜ் ஆபர்! வாங்கலாமா? இல்ல ஐபோன் 14 க்கு வெயிட் பண்ணலாமா?ஐபோன் 13 மீது நம்பமுடியாத எக்ஸ்சேன்ஜ் ஆபர்! வாங்கலாமா? இல்ல ஐபோன் 14 க்கு வெயிட் பண்ணலாமா?

3. MacBook (2006)

3. MacBook (2006)

மேக்புக் என்பது மேகிண்டோஷ் நோட்புக் கம்ப்யூட்டர்களின் வரிசையாகும். முதலில் நாம் பார்த்தது மேகிண்டோஷ் கம்பியூட்டர் சீரிஸ், இது நோட்புக் சீரிஸ் என்பதை கவனிக்கத்தக்கது. MacBook என்பது ஆப்பிள் நிறுவனத்தால் நோட்புக் வடிவத்தில், ஸ்லிம்மாக உருவாக்கப்பட்ட லேப்டாப் சாதனம் என்பது குறிப்பிடத்தக்கது. இது Apple Inc நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, தயாரித்து விற்கப்பட்டது. கம்பியூட்டர் கலாச்சாரத்தில் இருந்து லேப்டாப் காலத்திற்குள் ஆப்பிள் ரசிகர்கள் நுழைந்ததற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்த இந்த சாதனத்திற்கு ஒரு முக்கிய பங்குள்ளது.

4. iPhone (2007)

4. iPhone (2007)

'இந்தா வந்துட்டான்ல என் செல்லம்' என்று ஐபோன் பெயரைக் கேட்டதும் நம் மனதிற்குள் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி வந்திருக்கும். பெரும்பாலானோருக்குக் குறைந்தது ஒரு முறையாவது ஒரு ஆப்பிள் ஐபோனை வாங்கி பயன்படுத்திவிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால், ஐபோன் என்பது ஒரு மோகமாகவே மாறிவிட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையில் உலகைப் புரட்டிப் போட்டு, ஆப்பிள் நிறுவனத்தை அடுத்த லெவெலிற்கு எடுத்த சென்ற பெருமை கட்டாயம் இந்த ஐபோன் சாதனங்களுக்கு ஒரு முக்கிய பங்கிருக்கிறது.

இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!இது ரோபோவா? வாகனமா? ஆசால்ட்டா 100 கிலோ எடையை தூக்கி, கொம்புடன் ஓடுது, நடக்குது.. Kawasaki அசத்தல் - வீடியோ.!

5. iPad (2010)

5. iPad (2010)

அடுத்த தலைமுறை ஸ்மார்ட் கம்பியூட்டர் என்ற வார்த்தைக்குச் சரியான பிரதிபலிப்பு இந்த iPad சாதனம் தான். காரணம், லேப்டாப் கலாச்சாரத்தைச் சுருக்கி, நமது கைகளுக்கும் ஒட்டுமொத்த கம்பியூட்டர் அனுபவத்தையும் வெறும் 9.7" இன்ச் அளவு கொண்ட டச் டிஸ்பிளே அனுபவத்துடன் வழங்கி உலகை வியப்பில் ஆழ்த்திய முக்கியமான சாதனம் இது. ஆப்பிள் நிறுவனம், முதல் 80 நாட்களில், 3 மில்லியன் ஐபேட் சாதனங்களை விற்றுத் தீர்த்தது என்பது மறக்கமுடியாத வரலாறு.

ஆப்பிளின் தலையெழுத்தை மாற்றி அமைத்து பெருமை ஸ்டீவ் ஜாப்ஸிற்குரியது

ஆப்பிளின் தலையெழுத்தை மாற்றி அமைத்து பெருமை ஸ்டீவ் ஜாப்ஸிற்குரியது

ஆப்பிள் நிறுவனத்தின் தலையெழுத்தை இக்கட்டான சூழ்நிலையில் மாற்றி அமைத்து, நிறுவனத்திற்கு மிகப் பெரிய வளர்ச்சியை வழங்கிய பெருமை ஸ்டீவ் ஜாப்ஸிற்கு எப்படி சென்றடையுமோ. அதேபோல், அவர் தலைமையின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட இந்த 5 சிறப்பான கேட்ஜெட்களுக்கும் சென்றடையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்த 5 கேட்ஜெட்களில் உங்கள் மனதைக் கவர்ந்த கூலான கேட்ஜெட் எது என்பதை கமெண்ட் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
Check These 5 Best Apple Gadgets That Went Huge Hit Under Steve Jobs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X