குப்பை இங்க இருக்கு, குப்பைத்தொட்டி எங்க..?

Posted By:

கறி சோறு தின்னு வளர்ந்த நாய்க்கு தயிர் சோறு போட்டா திங்குமா..? மோந்து கூட பாக்காது. அது போல தான் நம்ம மக்கள் கிட்ட குப்பையை குப்பை தொட்டில போடுனு சொல்றதும், காதுல கூட வாங்க மாட்டாங்க.

குப்பை இங்க இருக்கு, குப்பைத்தொட்டி எங்க..?

நான் தெரியாம தான் கேட்கிறேன், குப்பையை குப்பை தொட்டியில் போடு, போடுனு சொல்றீங்களே.. "குப்பை இங்க இருக்கு.. குப்பை தொட்டி எங்க..?!". முதல்ல குப்பை தொட்டினு ஒன்னு இருந்தாதானே அதை யூஸ் பண்ணத் தோணும். முக்கியமா இப்படி ஒரு அட்டகாசமான குப்பைத்தொட்டி இருந்தால் கண்டிப்பா பயன் படுத்த தோணும், அதுதான் - ப்ரூனோ..!

குப்பை இங்க இருக்கு, குப்பைத்தொட்டி எங்க..?

ப்ரூனோ - பார்க்க பளபளனு இருக்கும் இது ஒரு நவீன தொழில்நுட்ப குப்பைத் தொட்டியாகும். இதன் அடி பாகத்தில் இருக்கும் துளை பகுதியின் அருகே தூசிகளை, அழுக்குகளை பெருக்கி கொண்டு போனால் போதும், உடனே அது அவைகளை உள் இழுத்துக் கொள்ளும், சிறு தூசியை கூட விட்டு வைக்காது.

கடைசி இடத்தில் உள்ள ஏ.ஆர்.ரகுமான்..!

இதற்கு உள்ளேயே குப்பை சேகரிக்கும் பை இருப்பதால் குப்பையை அகற்றுவதும் மிக சுலபம் தான். மாதத்திற்கு ஒரு முறை மட்டும் இதை சார்ஜ் செய்தால் போதும். இதனுள் இருக்கும் மோஷன் சென்சிடிவ் தொழில்நுட்பம் நாம் அருகில் வருவதை உணர்ந்து செயல்பட தொடங்கும், இதனால் ஒவ்வொரு முறையும் இதை தொட்டு 'ஆன்' செய்ய வேண்டிய அவசியமில்லை..!

குப்பை இங்க இருக்கு, குப்பைத்தொட்டி எங்க..?

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்தைக்கு வர இருக்கும் இதன் விலை, 159 டாலர் அல்லது அதை விட கொஞ்சம் அதிகம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Read more about:
English summary
Bruno - a smart dustin with an integrated vacuum to suck up any bits and pieces you sweep its way.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot