இது சினிமா காட்சி அல்ல.! பறக்கும் ஜெட் சூட்களை சோதனை செய்யும் பிரிட்டிஷ் கடற்படை.. வீடியோ உள்ளே..

|

நீங்கள் பார்க்கப்போகும் வீடியோ காட்சிகளை பார்த்ததும், இது ஏத்தி ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட காட்சி என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். அசல் தொழில்நுட்பத்துடன் ஒரிஜினலாக உருவாக்கப்பட்ட ஐயன் மேன் போன்ற ஜெட் சூட் தான் இந்த சாதனம். பிரிட்டிஷ் ராயல் கடற்படை வீரர்கள் எதிர்காலத்தில் இந்த ஜெட் சூட்களை பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்த தொழில்நுட்பம் எப்படிச் செயல்படும் என்பதைச் சோதனை செய்து பார்த்துள்ளது.

ஐயன் மேன் போன்ற சூட்டை சோதனை செய்யும் பிரிட்டிஷ்

ஐயன் மேன் போன்ற சூட்டை சோதனை செய்யும் பிரிட்டிஷ்

வீடியோவில் அதன் கடற்படை வீரர் நடுக்கடலில் வேகமாகப் பாய்ந்து சென்றுகொண்டிருக்கும் படகில் இருந்து ஈர்ப்பு விசையை மீறி காற்றில் பறந்து அருகில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் போர்ப்படை கப்பலில் அவர் தரையிறங்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐயன் மேன் போன்ற சூட்டை இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கியுள்ளது. இந்த புதிய வீடியோ, இந்த ஜெட் சூட் எப்படி செயல்படுகிறது என்பதைத் தெளிவாக காட்டியுள்ளது.

கடலுக்கு நடுவில் வானத்தில் பறந்த ராயல் மரைன் கமாண்டோ வீரர்

கடலுக்கு நடுவில் வானத்தில் பறந்த ராயல் மரைன் கமாண்டோ வீரர்

வீடியோவில் ஒரு ராயல் மரைன் கமாண்டோ வீரர் அதிவேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் படகில் இருந்து புறப்பட்டு, கடல்களுக்கு மேலே பறந்து, பின்னர் கடற்படையின் கடல் ரோந்து கப்பலான எச்.எம்.எஸ். மரைன் கப்பலின் மேல்தட்டில் தரை இறங்கி, அங்கிருந்து படகில் வரும் வீரர்களுக்காக ஏணியைக் கீழே வீசும் காட்சிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐயன் மேன் போன்ற சூட், ஒரு பெரிய ஷோல்டர் பேக் போன்ற பையை ஒத்த ஒரு இயந்திரத்தையும், அவரது இரு கைகளிலும் உருளையாக ஒரு ஜோடி பூஸ்டர் சிலிண்டர்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான கடல் பயணம்

இந்த இயந்திரங்கள் அவருக்குத் தேவையான உந்து வேகத்தைக் கொடுத்து, தண்ணீருக்கு மேலே பறக்கவும், அவர் வான்வழி மற்றும் தரையிறங்கும் போது அவரது இயக்கத்தைச் சமப்படுத்தவும் போதுமான உந்துதலை வழங்குகின்றது. அவர் எச்.எம்.எஸ் கப்பலில் வெற்றிகரமாகத் தரை இறங்கிய பிறகு, மீண்டும் தான் புறப்பட்டு வந்த படகிற்கு வேகமாக நொடியில் பறந்து சென்று, அந்த குறுகிய படகில் வெற்றிகரமாகத் தரையிறங்கிக் காட்டுகிறார். இது மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான கடல் பயணங்களில் ஒன்றாகும்.

இந்த தொழில்நுட்பத்தை பிரிட்டிஷ் வாங்கிவிட்டதா?

இந்த தொழில்நுட்பத்தை பிரிட்டிஷ் வாங்கிவிட்டதா?

கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பை மேற்கோள் காட்டி ஒரு பிசினஸ் இன்சைடர் அறிக்கை , 42 கமாண்டோ ராயல் மரைன்கள் இந்த பயிற்சியில் பங்கேற்றன, இது ஒரு சோதனையின் ஒரு பகுதி மூன்று நாட்கள் நீடித்தது. பாரம்பரிய கடல் போர்டிங் நடைமுறைகளுக்கு மாற்று வழிகளை அவர்கள் ஆராய்ந்தனர். இந்த தொழில்நுட்பத்தை வாங்கலாமா என்று பிரிட்டிஷ் இராணுவம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

மேம்பாடுகளை பெறுகிறது ஜெட் சூட்

பிரிட்டிஷ் கடற்படை அதிகாரியான அட்மிரல் டோனி ராடாகின், இந்த செய்தியை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்த வீடியோவுக்கு 548,000க்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. இங்கிலாந்தின் தொலைதூர மற்றும் கரடுமுரடான ஏரி மாவட்ட பிராந்தியத்தில் உள்ள துணை மருத்துவர்களும் முன்னர் ஜெட் சூட்டை பரிசோதித்தனர். இதைப் பயன்படுத்துவதன் மூலம், அவர்கள் சாலை வழியாகவோ அல்லது கால்நடையாகவோ பயணித்து எடுத்துக்கொள்ளும் நேரத்தை இது மிச்சப்படுத்தியுள்ளது. ஜெட் சூட் இன்னும் சில மேம்பாடுகளை வரும் காலத்தில் பெரும் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
British Navy Tests Iron Man Like Jet Suits for Commando Raids : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X