Home
News

ஜூலை 1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. UPI, ATM-க்கு அதிரடி மாற்றங்கள்!

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் 2026 ஜூலை 1 ஆம் தேதி முதல் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆனது புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வர இருக்கிறது. யுபிஐ பேமெண்ட், மொபைல் பேங்கிங் நெட் பேங்கிங் மற்றும் ஏடிஎம் கார்டு வழியாக செய்யப்படும் எல்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும். ஆகவே, பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் பரிவர்த்தனை:

கையில் காசு வைத்து செலவு செய்து வந்த காலம் மாறிவிட்டது. பேங்க் அக்கவுண்ட் ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். பெட்டி கடைக்கு சென்று யுபிஐ பரிவர்த்தனை செய்யலாம், சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை செய்யலாம். பெரிய தொகையை அனுப்ப வேண்டும் என்றால் மொபைல் பேங்கிங் அல்லது நெட் பேங்கிங் பயன்படுத்தலாம். இப்படி எல்லா பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் ஆக மாறி வருகின்றன.

ஜூலை 1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு ரூல்ஸ்!

இப்படி டிஜிட்டலாக அனுப்பப்படும் பணம் பாதுகாப்பாக சென்று சேரவும், மோசடியால் பெறப்பட்ட பணத்தை திரும்ப பெறவும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆனது பல்வேறு விதிகளை கொண்டு வருகிறது. இப்போது, யுபிஐ பேமெண்ட்கள், மொபைல் பேங்கிங் நெட் பேங்கிங் மற்றும் ஏடிஎம் கார்டு வழியாக செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இழப்பீடு வழங்கும் விதிகளை அமலுக்கு கொண்டுவர உள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

85 சதவீதம் வரையில் இழப்பீடு:

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும்போது, பணத்தை இழந்துவிட்டால், அந்த மொத்த தொகையில் இருந்து 85 சதவீதம் வரையில் பணத்தை திரும்பப் பெறுவதை இந்த விதிகள் உறுதி செய்ய இருக்கின்றன. ஆனால், இது பெரிய அளவிலான பணத்துக்கு பொருந்தாது. ரூ.50,000 வரையில் யுபிஐ பேமெண்ட்கள், மொபைல் பேங்கிங் நெட் பேங்கிங் மற்றும் ஏடிஎம் கார்டு வழியாக செய்யப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்துகிறது.

ஏனென்றால், பெரிய தொகைகளை அனுப்ப பான் கார்டு விவரங்கள், நெப்ட், ஆர்டிஜிஎஸ் போன்றவற்றில் பேங்க் அக்கவுண்ட்டை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இருக்கின்றன. ஆகவே, இதுபோன்ற பரிவர்த்தனைகளில் இழப்பீட்டுக்கான அவசியம் இருக்காது. ஆனால், யுபிஐ பேமெண்ட்கள், டெபிட் கார்டு பேமெண்ட்கள், மொபைல் பேங்கிங் போன்றவற்றில் சிறிய தொகைகளை உடனடியாக அனுப்பிவிட முடியும்.

இதனால், பணம் தவறாக அனுப்பவும், மோசடியால் பணத்தை இழக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனாலேயே ரிசர்வ் பேங்க் ஆப் இந்திய இந்த விதிகளை கொண்டுவர இருக்கிறது. ஆனால், இதுபோன்று பணத்தை திருப்ப பெறுவதில் சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டு உள்ளது. ஏனென்றால், இதுபோன்ற தவறாக பணம் பரிமாற்றம் செய்யப்படுவது அடிக்கடி ஏற்படாது. ஆகவே, இதற்கு வரம்புகளை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா விதித்துள்ளது.

இழப்பீடு பெற விதிமுறைகள்:

யுபிஐ, மொபைல் பேங்கிங், நெட்பேங்கிங் போன்ற எந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் இந்த இழப்பீடு விதிகள் பொருந்தும். ஆனால், ஒரு முறை மட்டுமே இப்படி பணம் திருப்பி வழங்கப்படும். இந்த தொகை ரூ.50,000 க்குள் இருக்க வேண்டும். இதில் 85 சதவீதம் வரையில் பெறலாம். ரூ.25,000 வரையில் நிச்சயம் பெறலாம். ஆனால், இப்படி பணத்தை இழந்தவுடன் உடனடியாக அது குறித்து சம்பந்தப்பட்ட பேங்குகள், சைபர் க்ரைம் ஆகியவற்றுக்கு புகார் தெரிவித்திருக்க வேண்டும்.

இந்த புகாரை 5 நாட்களுக்குள் கொடுத்திருக்க வேண்டும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய ஒடிபி, பின், டெபிட் கார்டு விவரங்கள் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆனது அங்கீகரிக்கத்துள்ளது. ஆகவே, இப்படி அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த இழப்பீட்டு விதிகள் பொருந்தும். இது பேங்க் கஸ்டமர்களுக்கு பொருந்தும் விதிகளாக இருக்கிறது.

பேங்குகளில் தவறுகள் நடந்தால் எப்படி?

பேங்குகளில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணங்களால் பணம் டெபிட் செய்யப்பட்டால், அதற்கு பேங்குகளே முழு பொறுப்பாக இருக்கிறது. ஆகவே, கஸ்டமர்களின் பணம் முழுவதும் ரீஃபண்ட் செய்யப்படும். இந்த விதிகளே ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. ரூ.50,000 தொகைக்குள் பணத்தை இழந்தால், அது குறித்து உடனடியாக புகார் தெரிவித்து பணத்தை பெற்று கொள்ளலாம்.

ரூ.40,000 பணத்தை இழந்தால், அதில் 85 சதவீதம் ரூ.34,000 பணத்தை அதிகபட்சமாக பெற்று கொள்ளலாம். இல்லையென்றால், ரூ.25,000 பணம் கட்டாயமாக ரீஃபண்ட் செய்யப்பட்டுவிடும். இது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தலையீட்டால் வழங்கப்படுவதால், பணத்தை திரும்பப் பெறுவதில் சிக்கல் இருக்காது. இருப்பினும், டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும்போது, கவனமுடன் இருக்க வேண்டியது அசியமாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules Effective July 1 For UPI Payments Mobile Banking Net Banking ATM Cards Transactions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X