இதுவும் போச்சா.. பலரும் ரீசார்ஜ் செய்யும் முக்கிய திட்டத்தை சத்தம் போடாமல் நீக்கிய BSNL! இனிமேல்?

|

விலை உயர்ந்த ரீசார்ஜ் திட்டங்களை விட மலிவான ரீசார்ஜ் திட்டங்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!

அப்படியாக இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) மிகவும் பிரபலமான அதே சமயம் மிகவும் மலிவான ரீசார்ஜ் திட்டமொன்றை "இரவோடு இரவாக" நீக்கி உள்ளது.

அதாவது, குறிப்பிட்ட திட்டத்தை இனிமேல் ரீசார்ஜ் செய்ய முடியாது என்று அர்த்தம். அதென்ன திட்டம்? அந்த திட்டத்திற்கு ஏதேனும் மாற்று திட்டங்கள் (Alternative Plans) உள்ளதா? இதோ விவரங்கள்:

இதுவும் போச்சா!

இதுவும் போச்சா!

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம், தனது பிராட்பேண்ட் (Boradband) தொகுப்பில் இருந்து ரூ.329 திட்டத்தை நீக்கி உள்ளது.

ரூ.329 திட்டமானது மிகவும் மலிவான பிராட்பேண்ட் திட்டமாக இருந்ததால், இது பலராலும் ரீசார்ஜ் செய்யப்பட்ட ஒரு திட்டமாக திகழ்ந்தது. இருப்பினும் இந்த திட்டம் நிறுவனத்தின் பிராட்பேண்ட் தொகுப்பின் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளின் அறிமுகம் "மீண்டும் மீண்டும்" ஒத்திவைக்கப்படும் நிலையில், ரூ.329 திட்டத்தின் நீக்கமானது, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் மத்தியில் "இதுவும் போச்சா!" என்கிற மனநிலையை ஏற்படுத்தி உள்ளது!

ரூ.329-க்கு மாற்றாக வேறு ஏதேனும் ரீசார்ஜ் உள்ளதா?

ரூ.329-க்கு மாற்றாக வேறு ஏதேனும் ரீசார்ஜ் உள்ளதா?

நினைவூட்டும் வண்ணம், ரூ.329 ஆனது 20எம்பிபிஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ், மொத்தம் 1டிபி அளவிலான டேட்டாவை, அதாவது 1000ஜிபி டேட்டாவை வழங்கியது.

குறிப்பிட்ட டேட்டா லிமிட்-ஐ எட்டியதும் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 2எம்பிபிஸ் ஆக குறைக்கப்படும்.

தற்போது ​இந்த திட்டம் இந்தியாவின் எந்த வட்டத்திலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கவில்லை. எனவே மலிவு விலையிலான பிராட்பேண்ட் திட்டத்தை தேடும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் அடுத்த ஆப்ஷன் - ரூ 399 திட்டம் தான்!

ரூ.399-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ரூ.399-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

பிஎஸ்என்எல்-ன் ரூ.399 திட்டமானது, ரூ.329-ஐ போலவே 1டிபி டேட்டாவுடன் வருகிறது. ஆனால் இதன் இண்டர்நெட் ஸ்பீட் 30எம்பிபிஸ் ஆகும்.

1டிபி அதாவது 1000ஜிபி என்கிற டேட்டா வரம்பை மீறிய பின்னர் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 4எம்பிபிஸ் ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையும் அணுக கிடைக்கும்.

ஒருவேளை ரூ.399-ன் நன்மைகள் உங்களை திருப்திபடுத்தும்படி இல்லை என்றால், ரூ.399க்கு அடுத்தபடியாக உள்ள ரூ.449-ஐ ரீசார்ஜ் செய்யலாம்.

ரூ.449-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ரூ.449-ன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ரூ.399 திட்டத்தின் இன்டர்நெட் ஸ்பீட் ஆனது ரூ.449 திட்டத்துடன் ஒற்றுப்போகும். அதாவது இது அதே 30எம்பிபிஎஸ் என்கிற வேகத்தையே வழங்கும். ஆனால் இதன் கீழ் மொத்தம் 3.3டிபி டேட்டா கிடைக்கும்; அதாவது 3300ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் இன்னும் வேகமான பிராட்பேண்ட் பிளானை தேடுகிறீர்கள் என்றால் ரூ.499 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இது 3.3டிபி என்கிற மொத்த டேட்டாவை 40எம்பிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் வழங்குகிறது.

ஓடிடி நன்மைகளுடன் வரும் பிஎஸ்என்எல் திட்டங்கள் எதுவும் இல்லையா?

ஓடிடி நன்மைகளுடன் வரும் பிஎஸ்என்எல் திட்டங்கள் எதுவும் இல்லையா?

இருக்கிறது! பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.799 மற்றும் ரூ.999 திட்டங்களின் கீழ் பலவகையான ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல் கிடைக்கும்.

இந்த திட்டங்களின் கீழ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஜீ5 (Zee5), மற்றும் சோனிலைவ் (SonyLIV) போன்ற தளங்களுக்கான இலவச அணுகல் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி, வருகிற மார்ச் 31, 2023 வரையிலாக பாரத் ஃபைபர் (Bharath Fibre) கனெக்ஷனை இலவசமாக இன்ஸ்டால் (Free Installation) செய்து கொள்ளலாம் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

ஏர்டெல்-ஐ பின்தள்ளி.. ஜியோவுடன் சமன் செய்த பிஎஸ்என்எல்!

ஏர்டெல்-ஐ பின்தள்ளி.. ஜியோவுடன் சமன் செய்த பிஎஸ்என்எல்!

பிஎஸ்என்எல் தனது ரூ.329 ரீசார்ஜை நீக்கியதன் மூலம், ரிலையன்ஸ் ​​ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய இரண்டு நிறுவனங்களின் பேஸிக் பிராட்பேண்ட் ரீசார்ஜ்களின் விலையும் ரூ.399 ஆக மாறி உள்ளது!

மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானது, ரூ.499 என்கிற திட்டத்தையே தனது பேஸிக் பிராட்பேண்ட் ரீசார்ஜ் ஆக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் விலை சற்றே அதிகம் என்றாலும் கூட, ஒப்பீட்டளவில் இது அதிக இண்டர்நெட் ஸ்பீட்-ஐ வழங்குகிறது!

Best Mobiles in India

English summary
Bad News For BSNL Users Cheapest Broadband Plan Rs 329 Removed Rs 399 is Affordable Recharge Now

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X