வாழ்க்கை காக்க வந்த Apple.. 16 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றி அசத்தல்! சரியான சம்பவம்.!

|

Apple Watch அவசரகால SOS உள்ளிட்ட பல உயிர்காக்கும் அம்சங்களை கொண்டிருக்கிறது. உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச், ஐபோன் என பல செய்திகளை கேள்விப்பட்டிருப்போம். அதன்படியான ஒரு நிகழ்வு தற்போது மீண்டும் அரங்கேறி இருக்கிறது.

ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் வாட்ச்

Apple Watch இல் இதயத் துடிப்பு, இசிஜி உள்ளிட்ட பல ஆரோக்கியம் தொடர்பான சென்சார்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த சென்சார்களை பயன்படுத்தி பயனர்களின் ஆரோக்கியத்தில் உள்ள அசாதாரணங்கள் கண்டறியப்பட்டு அதுகுறித்த விழிப்பூட்டல்களையும் ஆப்பிள் சாதனங்கள் ஏற்படுத்துகிறது. அதன்படி ஆப்பிள் வாட்ச் தற்போது 16 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.

16 வயது மகன் உடல்நிலை

16 வயது மகன் உடல்நிலை

இதுகுறித்து CBS 8 இல் வெளியான அறிக்கை குறித்து பார்க்கையில், மார்செல்லா லீ என்பவர் ஆப்பிள் வாட்ச் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதில் அவரது மகனை ஆப்பிள் வாட்ச் தான் காப்பாற்றியதாக குறிப்பிட்டார்.

தனது மகனின் இரத்த ஆக்ஸிஜன் அளவு குறைந்ததை ஆப்பிள் வாட்ச் கண்டறிய உதவியதாக தெரிவித்தார்.

பனிச்சறுக்கு பயணத்தின் போது, அவரது 16 வயது மகனின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை உணர்ந்ததாகவும் இரவு நேரத்தில் உதடு மற்றும் விரல் நுனிகளில் சற்று நீலமாக இருப்பதை கவனித்ததாகவும் தெரிவித்தார்.

கைக்கொடுத்த ஆப்பிள் வாட்ச்

கைக்கொடுத்த ஆப்பிள் வாட்ச்

இதையடுத்து தனது ஆப்பிள் வாட்ச்சை எடுத்து அவரது மகனின் மணிக்கட்டில் கட்டி உள்ளார். சில வினாடிகளுக்கு பிறகு கடிகாரத்தில் இரத்த ஆக்ஸிஜன் அளவு 66 சதவீதம் என காட்டி இருக்கிறது.

இதுகுறித்து அவர் இணையதளத்தில் ஆராய்ந்திருக்கிறார், அதில் இரத்த ஆக்ஸிஜன் அளவு 88 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் உடனடி மருத்துவ கவனிப்பு தேவை என்பதை அறிந்திருக்கிறார். இதையடுத்து தனது மகனை உள்ளூர் ERக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

உரிய நேரத்தில் மகன் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

உரிய நேரத்தில் மகன் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்

மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் ஆப்பிள் வாட்ச்சில் காட்டிய இரத்த ஆக்ஸிஜன் அளவு துல்லியமாக காட்டி இருக்கிறது.

மருத்துவமனையில் அவரது மகனின் இரத்த ஆக்ஸிஜன் அளவு 67 சதவீதம் என காட்டி இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்திருந்தால் அவரது மகன் கோமா நிலைக்கு சென்றிருக்கலாம் என மருத்துவர்தள் தெரிவித்துள்ளனர். நல்ல நேரமாக உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அந்த சிறுவனும் நலமாக இருக்கிறார்.

லீ மேலும் இதுகுறித்து கூறுகையில், தனது மகனுக்கு ஹை ஆல்டிடியூட் நுரையீரல் வீக்கம் (HAPE) இருப்பது கண்டறியப்பட்டது. கொலராடோ பகுதியில் 10,000 பனிச்சறுக்கு வீரர்களில் ஒருவர் HAPE ஆல் பாதிக்கப்படுகின்றனர். உரிய நேரத்தில் தனது மகனை காப்பாற்ற ஆப்பிள் வாட்ச் உதவியது என தெரிவித்தார்.

உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு

உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதற்கு தகுந்தபடி இந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாதனங்களை தயார் செய்கிறது. ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய மென்பொருள் மற்றும் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது.

உயிர் காப்பாற்றிய மற்றொரு சம்பவம்

உயிர் காப்பாற்றிய மற்றொரு சம்பவம்

ஆப்பிள் வாட்ச் உயிரை காப்பாற்றிய மற்றொரு நிகழ்வு குறித்து பார்க்கலாம். சிங்கப்பூரை சேர்ந்தவர் முகமது ஃபிட்ரி. இவரு இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென அவர் மீது வேன் மோதி விபத்துக்கு உள்ளாகி கீழே விழுந்துள்ளார்.

விபத்துக்கு உள்ளாகி நிலை தடுமாறி கீழே விழுந்த முகமது ஃபிட்ரி சுயநினைவை மறந்து மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் அவரது உயிரை காப்பாற்றியது என்றால் ஆச்சரியமாக உள்ளத அல்லவா.

தக்க நேரத்தில் செயல்பட்ட ஆப்பிள் வாட்ச்

தக்க நேரத்தில் செயல்பட்ட ஆப்பிள் வாட்ச்

விபத்துக்குள்ளாகி சுயநினைவை இழந்து மயக்க நிலைக்கு சென்ற முகமது கையில் ஆப்பிள் வாட்ச் இருந்துள்ளது. முகமது கீழே விழுந்த வேகத்தில் ஆப்பிள் வாட்ச் மூலம் அவசர உதவி எண்ணுக்கு தகவல் சென்றிருக்கிறது. அதே நேரத்தில் அவர் இருக்கும் இருப்பிட விவரமும் பகிரப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பவ இடத்துக்கு வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

அவசரகால SOS அம்சம்

அவசரகால SOS அம்சம்

ஆப்பிள் வாட்ச்சில் இருந்து எப்படி தாமாக அவசர உதவி எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டது என்ற கேள்வி வரலாம். அது அதில் இருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். இந்த அம்சத்தின் பெயர் SOS ஆகும்.

ஆப்பிள் வாட்ச் அணிந்திருப்பவர்கள் ஏதாவது பிரச்சனையை எதிர்கொள்ளும் போது இதில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் தாமாகவே அவசர உதவி எண்ணுக்கு தகவல் அனுப்பப்படும்.

முகமது விழுந்த வேகத்தில் எப்படி இந்த தகவல் அனுப்பப்பட்டது என்ற கேள்விகள் இருக்கும் பட்சத்தில், பட்டனை அழுத்தாமல் அதிக அதிர்வுகள் இருக்கும்பட்சத்தில் இந்த அம்சம் ஆக்டிவேட் ஆகி அவசர எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.

Best Mobiles in India

English summary
Apple Watch Saved the Life of a 16 Year Old Life Who Affect High Altitude Pulmonary Edema

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X