பொங்கி எழுந்த Nokia: ரூ.10,500க்கு நின்னு விளையாடக் கூடிய தரமான ஸ்மார்ட்போன் அறிமுகம்!

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனுக்கு என தனி வரவேற்பு இருக்கிறது. இதை ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. அதன்படி, ஒவ்வொரு நிறுவனமும் என்னதான் ப்ரீமியம் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தாலும் அவ்வப்போது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் கவனத்தை தக்க வைத்து வருகிறது.

Nokia C12 அறிமுகம்

Nokia C12 அறிமுகம்

அதன்படி பட்ஜெட் ஸ்மார்ட்போனுக்கு என்றே புகழ் பெற்ற நோக்கியா நிறுவனம், Nokia C12 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் அம்சங்களை வைத்தே கணித்துவிடலாம் இது பக்கா நுழைவு நிலை ஸ்மார்ட்போன் என்று. ரூ.10,000 விலைப்பிரிவில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 5ஜி ஆதரவை வழங்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் நிலையில், நோக்கியாவின் இந்த ஸ்மார்ட்போன் மிக அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

3000 எம்ஏஎச் பேட்டரி

3000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியாவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் சி தொடரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2021 இல் அறிமுகம் செய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நோக்கியா சி10 இன் தொடர்ச்சியாக இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Nokia C12 ஸ்மார்ட்போனானது 6.3 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது ஒற்றை வேரியண்ட் விருப்பத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 3000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. வாட்டர் டிராப் வசதியுடன் செல்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது.

3டி வடிவமைப்பு, கூடுதல் பாதுகாப்பு

3டி வடிவமைப்பு, கூடுதல் பாதுகாப்பு

ஸ்மார்ட்போனை பிடித்து பயன்படுத்துவதற்கு வசதியாக, இதன் பின்புற பேனல் 3டி வடிவமைப்புடன் கூடிய உலோக பேனல் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பிற நோக்கியா சி சீரிஸ் மாடல்கள் உடன் ஒப்பிடுகையில் இதில் டஸ்ட், ஈரப்பதம் மற்றும் எதார்த்தமாக கீழே விழுதல் போன்றவைகளில் இருந்து பாதுகாப்பை வழங்கும் தன்மை கொண்டிருக்கிறது.

நோக்கியா சி12 விலை

நோக்கியா சி12 விலை

நோக்கியா சி12 ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது EUR 119 (தோராயமாக ரூ.10,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போனானது சார்கோல், டார்க் சியான் மற்றும் லைட் மின்ட் வண்ண விருப்பத்தில் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

நோக்கியா சி12 ஸ்மார்ட்போனானது ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது கிடைக்கும் என்பது தொடர்பான அறிவிப்பை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

நோக்கியா சி12 சிறப்பம்சங்கள்

நோக்கியா சி12 சிறப்பம்சங்கள்

நோக்கியா சி12 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.3 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. octa-core Unisoc 9863A1 SoC மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் நோக்கியா சி12 இயக்கப்படுகிறது. சமீபத்திய பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. 2 வருடத்திற்கான பாதுகாப்பு புதுப்பிப்பை இந்த ஸ்மார்ட்போன் பெறும் என நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

8 எம்பி ஃபோகஸ் ரியர் கேமரா

8 எம்பி ஃபோகஸ் ரியர் கேமரா

இந்த நோக்கியா சி12 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் எல்இடி ஃப்ளாஷ் உடன் 8 எம்பி ஃபோகஸ் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என 5 எம்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது. நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், ஆட்டோ எச்டிஆர் மற்றும் டைம்லேப்ஸ் என அம்சங்கள் இந்த கேமராவில் உள்ளது.

இந்தியாவில் சந்தேகம் தான்..

இந்தியாவில் சந்தேகம் தான்..

இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அப்படியே இந்தியாவில் இது வெளியானாலும் அந்தளவிற்கு வரவேற்பை பெறுமா என்பது சந்தேகம் தான். முன்னதாகவே குறிப்பிட்டது போல் ரூ.10,000 விலை பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடுகையில் ஏணைய மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் பல ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Another Entry Level Smartphone: Nokia C12 Launched at Rs.10,000 Price Range With HD+ Display and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X