ஆண்ட்ராய்டு 10, 11, 12, 12L பயனர்களே உஷார்.! விஷயம் ரொம்ப சீரியஸ்.. உடனே அப்டேட் செய்யணும் கூகிள் எச்சரிக்கை..

|

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயனர்களே, கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் சில குறிப்பிட்ட வெர்ஷன் பதிப்புகளில், பயனர்களின் தரவிற்கு பங்கம் விளைவிக்கும் புதிய பாதுகாப்பு சிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிக்கலில் இருந்து உங்களையும், உங்கள் ஸ்மார்ட் போனையும் பாதுகாத்துக்கொள்ள உடனே கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றும் படி கூகிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

Android 10, 11, 12, 12L பயனர்களே உஷார்

Android 10, 11, 12, 12L பயனர்களே உஷார்

சமீபத்தில் வெளியான தகவலின் படி, Android 10, Android 11, Android 12 மற்றும் Android 12L ஆகிய இயங்குதளங்களில் இந்த புதிய பாதுகாப்பு சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலைச் சரிசெய்யக் கூடிய Google செக்யூரிட்டி பேட்ச் என்று அழைக்கப்படும் பாதுகாப்பு இணைப்புகளை உருவாக்கியுள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் உடனடியாக அவர்களின் ஸ்மார்ட்போன்களைச் சரிபார்க்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் வெளியிட்ட எச்சரிக்கை

இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் வெளியிட்ட எச்சரிக்கை

கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தலமான 10, 11, 12 மற்றும் 12L ஆகிய நான்கு வெர்ஷன்களில் பல பாதுகாப்பு சிக்கலைக் கண்டறிந்துள்ளதாக இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (Indian Computer Emergency Response Team - CERT-In) கண்டறிந்துள்ளது. முதல் மூன்று ஆண்ட்ராய்டு பாதிப்புகள் ஸ்மார்ட்போனிற்கான இயங்குதளங்கள் ஆகும். அதேபோல், ஆண்ட்ராய்டு 12L என்பது டேப்லெட்டுகள் மற்றும் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களுக்காக வடிவமைக்கப்பட்ட இயங்குதளம் ஆகும்.

ஸ்டீவ் ஜாப்ஸ் கீழ் ஆப்பிளின் தலையெழுத்தை மாற்றிய 5 டாப் கேட்ஜெட்ஸ் இதானா?ஸ்டீவ் ஜாப்ஸ் கீழ் ஆப்பிளின் தலையெழுத்தை மாற்றிய 5 டாப் கேட்ஜெட்ஸ் இதானா?

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களை இயக்குபவர்கள் கவனத்திற்கு

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களை இயக்குபவர்கள் கவனத்திற்கு

இந்த இயங்குதளங்களில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்களை இயக்குபவர்கள் கட்டாயம் இந்த பதிவை இறுதி வரை படிக்கவும். கண்டறியப்பட்ட இந்த புதிய சிக்கலைச் சரி செய்யக் கூடிய கூகிள் செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் இணைப்புகளின் வெளியீடு உற்பத்தியாளருக்கு உற்பத்தியாளருக்கு மாறுபடும் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இணையப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான CERT-In வெளியிட்ட அறிவிப்பு இது தான்.

ஆர்பிடரி கோட் விபரங்களை திருடும் ஆபத்து

ஆர்பிடரி கோட் விபரங்களை திருடும் ஆபத்து

மேலே குறிப்பிடப்பட்டுள்ள, இந்த இயங்குதளங்களில் இயக்கும் சாதனங்கள் தன்னிச்சையான குறியீட்டைச் செயல்படுத்த அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆர்பிடரி கோட் விபரங்களைப் பயனரின் அதிகாரம் இல்லாமல் உருவாக்க அனுமதிக்கிறது. இது ஆபத்தானது. அதேபோல், உங்கள் போனில் உள்ள உயர்ந்த மற்றும் தனிப்பட்ட தகவலை அணுகவும் இந்த பிழை அனுமதிக்கிறது. இதன் மூலம் ஹேக்கர்களால் உங்கள் தகவல்கள் எளிதாக "சுரண்டப்படும் " அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சாதனத்தின் உரிமையாளருக்கே அனுமதி கிடைக்காதா?

சாதனத்தின் உரிமையாளருக்கே அனுமதி கிடைக்காதா?

அதேபோல், மிக முக்கியமான தகவல் மற்றும் சேவைகளை மறுப்பது (DoS)" போன்ற சிக்கலையும் பயனர்கள் இந்த சிக்கலால் சந்திக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. DoS என்பது ransomware தாக்குதலைப் போன்றது, இதில் சாதனத்தின் உரிமையாளர் அல்லது பயனருக்கான அணுகலை வழங்காமல், மற்றொருவரின் கட்டுப்பாட்டிற்குள் உங்களின் சாதனத்தைச் சிறைபிடிக்க வைக்கும் அளவிற்கு ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

எதனால் இந்த சிக்கல் உருவானது?

எதனால் இந்த சிக்கல் உருவானது?

இந்த சிக்கலைக் கூகிள் இதுவரை கண்டறியவில்லையா? எதனால் இந்த சிக்கல் உருவானது? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு CERT-In ஆலோசகர் பதில் அளித்துள்ளார். இந்த பாதிப்புகள் சிஸ்டம் மட்டத்தில் தவறான முறையில் குறியீடு செயல்படுத்தப்படுவதாலும், மீடியாடெக் மற்றும் குவால்காம் செமிகண்டக்டர் நிறுவனங்களால் வழங்கப்பட்ட கூறுகளில் உள்ள சிக்கல்களாலும் ஏற்பட்டதாக்க அவர் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். சிக்கலை ஆராய்ந்து அதற்கான செக்யூரிட்டி பேட்ச் புதுப்பிப்பையும் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐபோன் 13 மீது நம்பமுடியாத எக்ஸ்சேன்ஜ் ஆபர்! வாங்கலாமா? இல்ல ஐபோன் 14 க்கு வெயிட் பண்ணலாமா?ஐபோன் 13 மீது நம்பமுடியாத எக்ஸ்சேன்ஜ் ஆபர்! வாங்கலாமா? இல்ல ஐபோன் 14 க்கு வெயிட் பண்ணலாமா?

புதிய செக்யூரிட்டி பேட்ச்-ஐ பயனர்கள் எப்படி இன்ஸ்டால் செய்வது?

புதிய செக்யூரிட்டி பேட்ச்-ஐ பயனர்கள் எப்படி இன்ஸ்டால் செய்வது?

இந்த பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக Google பாதுகாப்பு செக்யூரிட்டி பேட்ச்-ஐ பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை எப்படிச் சரிபார்த்து, அப்டேட் செய்வது என்று இப்போது பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 10,11,12 மற்றும் 12L பதிப்புகளில் சாதனைகளை இயக்கம் பயனர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள செயல்முறையைச் சரியாகப் பின்பற்றுங்கள்.

உங்கள் ஆண்ட்ராய்டு வெர்ஷனின் பதிப்பைச் சரிபார்த்து அப்டேட் செய்வது எப்படி?

உங்கள் ஆண்ட்ராய்டு வெர்ஷனின் பதிப்பைச் சரிபார்த்து அப்டேட் செய்வது எப்படி?

  • உங்கள் மொபைல் செட்டிங்ஸ் கிளிக் செய்யவும்.
  • மெனுவில் கீழ் பகுதில் உள்ள About phone கிளிக் செய்து >> Android version என்பதை கிளிக் செய்யவும்.
  • இங்கே, Android version, Android security update, Build number ஆகியவற்றைக் காண்பீர்கள்.
  • அப்டேட் செய்ய, Settings என்பதன் கீழ் உள்ள, Security என்பதை கிளிக் செய்யவும்.
  • புதிய செக்யூரிட்டி அப்டேட் உள்ளதா என்பதைச் சரிபார்க்க, Google Security checkup என்பதை கிளிக் செய்யவும்.
  • ​​சிஸ்டம் அலெர்ட் எச்சரிக்கை செய்தியை கவனியுங்கள்

    ​​சிஸ்டம் அலெர்ட் எச்சரிக்கை செய்தியை கவனியுங்கள்

    ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடையே இந்த அப்டேட்டிற்கான வெளியீட்டு அட்டவணை மாறுபடுவதால், கூகிள் அவற்றை வெளியிட்ட தருணத்தில் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் அதற்கான புதிய செக்யூரிட்டி அப்டேட்களைப் பெற்றிருக்காது என்பதை நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த புதிய செக்யூரிட்டி அப்டேட் பதிவிறக்குவதற்குத் தயாராக இருக்கும் புதுப்பிப்பு உங்களிடம் இருக்கும்போது, ​​சிஸ்டம் அலெர்ட் எச்சரிக்கை செய்தியைப் பெறுவீர்கள்.

Best Mobiles in India

English summary
Android Users Alert Cybersecurity Watchdog Flags Severe Vulnerabilities In Four Versions Of Android 10 11 12 and 12L : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X