கோலியை விட வேகமாக 100 அடித்த அம்பானி: உற்சாக வெள்ளத்தில் மிதக்கும் Jio பயனர்கள்!

|

இந்தியா முழுவதும் டிசம்பர் 2023க்குள் ரிலையன்ஸ் Jio 5G சேவை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. ஜியோ வெலகம் ஆஃபர் அடிப்படையில் 5ஜி சேவைகளை வழங்குகிறது. இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவை வழங்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை

ரிலையன்ஸ் ஜியோ 2023 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த இலக்கை அடைவதற்கு என விடாமுயற்சியோடு செயல்பட்டு வருகிறது ஜியோ நிறுவனம். அதன்படி தற்போது 100க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்கி வருகிறது. தற்போது ஜியோ சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை விரவுப்படுத்தி இருக்கிறது.

ஜியோ ட்ரூ 5ஜி

ஜியோ ட்ரூ 5ஜி

ஜியோ ட்ரூ 5ஜி என அழைக்கப்படும் இந்த சேவையானது ஜியோ வெல்கம் ஆஃபர் இன் கீழ் கிடைக்கிறது. சமீபத்திய தகவலின்படி, ரிலையன்ஸ் ஜியோ சத்தீஷ்கர், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து கர்நாடகா, ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தனது சேவையை விரிவுப்புடுத்தி உள்ளது.

100க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை

100க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை

முகேஷ் அம்பானி தலைமையிலான தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவையை அக்டோபர் 2022 முதல் தொடங்கியது. கிட்டத்தட்ட 3 மாநிலங்களில் ஜியோவின் 5ஜி சேவையானது 100க்கும் மேற்பட்ட நகரங்களில் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

ஜியோ 5ஜி பயன்முறை தற்போது பீட்டா பதிப்பில் இருக்கிறது. ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் அனைத்து பயனர்களும் நேரடி அணுகலை பெற மாட்டார்கள். ஜியோ பயனர்கள் தங்கள் பகுதியில் நெட்வொர்க் பயன்படுத்த தயாராக இருக்கும் போது ஒரு வரவேற்பை அழைப்பை பெறுவார்கள் என்பது கவனிக்கத்தக்க விஷயம். அதன்பிறகே அனைவருக்கும் இந்த அணுகல் கிடைக்கும்.

ஜியோ வெல்கம் ஆஃபர் என்றால் என்ன?

ஜியோ வெல்கம் ஆஃபர் என்றால் என்ன?

ஜியோ 5ஜி சேவையை பயன்படுத்த 5ஜி போன் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் உங்கள் மொபைல் சமீபத்திய சிஸ்டம் அப்டேட் இல் இயங்குகிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். அதேபோல் பயனர்கள் ஜியோ 5ஜி சேவையை பெறுவதற்கு ரூ.239க்கு மேல் உள்ள திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ஜியோ 5ஜி ரீசார்ஜ் திட்டம்

ஜியோ 5ஜி ரீசார்ஜ் திட்டம்

சமீபத்தில் ஜியோ 5ஜி டேட்டாவுக்கு என ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்தது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.61 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் 6ஜிபி 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் உங்கள் ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவு ஸ்மார்ட்போனாக இருக்க வேண்டும், அதேபோல் உங்கள் ஸ்மார்ட்போன் நிறுவனத்திடம் இருந்து 5ஜி ஆதரவு புதுப்பிப்பை பெற வேண்டும். உங்கள் மொபைல் செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்கு சென்று 5ஜி அமைப்பை இயக்க வேண்டும். MyJio செயலியில் 5G ஆதரவு விருப்பத்தை நீங்கள் சரி பார்க்கலாம்.

100 அடித்த முகேஷ் அம்பானி

100 அடித்த முகேஷ் அம்பானி

ஜியோ மற்றும் ஏர்டெல் கடந்த ஆண்டு தங்கள் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியது. அறிமுகமான நாளில் இருந்து 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக விரிவடைந்து வருகிறது. அதன்படி 100 இந்திய நகரங்களில் முகேஷ் அம்பானி தலைமையிலான Jio 5G சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 5ஜி சேவை

இந்தியா முழுவதும் 5ஜி சேவை

2023 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும் என ஜியோ மற்றும் ஏர்டெல் உறுதி அளித்துள்ளது.

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் தங்கள் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை வேகமாக விரிவுப்படுத்தி வருகிறது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் இதுவரை 100 இந்திய நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

5ஜி ஸ்மார்ட்போன்களில் மட்டுமே 5ஜி சேவை

5ஜி ஸ்மார்ட்போன்களில் மட்டுமே 5ஜி சேவை

5ஜி ஸ்மார்ட்போன்களில் மட்டுமே 5ஜி சேவையை பயன்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. பெரும்பாலான 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஜியோ 5ஜி சேவைக்கான அப்டேட் வழங்கத் தொடங்கப்பட்டுள்ளது. ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் உள்ளவர்கள் மட்டும் தான் ஜியோ ட்ரூ 5ஜி சேவையை அனுபவிக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Ambani Hits fastest 100: Jio 5G service Now available More than 100 cities

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X