சிந்தாம சிதறாம 30 நாட்களை முழுசா அள்ளுங்க: ரூ.109 முதல் ஆரம்பமாகும் Airtel ரீசார்ஜ் திட்டம்!

|

டிராய் அறிவுறுத்தலின் படி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் முழுமையாக 30 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை தங்களது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி Airtel நிறுவனமும் பயனர்களுக்கு முழுமையான 30 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை வழங்கி வருகிறது.

30 நாட்களை முழுசா அள்ளுங்க: ரூ.109 முதல் ஆரம்பமாகும் Airtel பிளான்!

பாரதி ஏர்டெல் ரூ.109 விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி திட்டத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 200 எம்பி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ரூ.99 மதிப்புள்ள டாக்டைம் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்கும். அழைப்புகளுக்கு 2.5 பைசா/வினாடிக்கு வசூலிக்கப்படும். அதேபோல் லோக்கல் எஸ்எம்எஸ்களுக்கு 1 ருபாயும், எஸ்டிடி எஸ்எம்எஸ்களுக்கு ரூ.1.5 பைசாவும் வசூலிக்கப்படுகிறது.

ஜியோ Vs ஏர்டெல்

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் சமீப காலமாக முதல் இடத்தில் இருக்கும் ஜியோவுக்கு கடுமையான போட்டியை வழங்கி வருகிறது. குறிப்பாக 5ஜி செயலாக்கத்தில் ஜியோவுக்கு நெருக்கமான போட்டியை வழங்கி வருகிறது. பாரதி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டங்களில் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.

30 நாட்கள் வேலிடிட்டி

பாரதி ஏர்டெல் 30 நாட்கள் செல்லுபடி காலத்துடன் வழங்கும் நான்கு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை குறித்து பார்க்கையில், இவை ரூ.296, ரூ.199, ரூ.109 மற்றும் ரூ.181 விலையில் கிடைக்கிறது. இதில் ரூ.181 திட்டம் என்பது டேட்டா மட்டும் வழங்கும் திட்டமாகும். பிற அனைத்து திட்டங்களும் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை பயனர்களுக்கு வழங்குகிறது.

பாரதி ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. Apollo 24|7 Circle, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music ஆகிய அணுகலும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. Airtel Thanks நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

பாரதி ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கையில், இந்த திட்டத்தில் பயனர்களுக்கு மொத்தம் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, 30 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஏர்டெல் தேங்க்ஸ், விங்க் மியூசிக் மற்றும் Hellotunes நன்மைகள் வழங்கப்படுகிறது.

30 நாட்களை முழுசா அள்ளுங்க: ரூ.109 முதல் ஆரம்பமாகும் Airtel பிளான்!

பாரதி ஏர்டெல் ரூ.109 திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ.109 திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டமானது 30 நாட்கள் வேலிடிட்டி சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 200 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் பயனர்களுக்கு ரூ.99 மதிப்புள்ள டாக்டைம் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகல் கிடைக்கிறது. குரல் அழைப்புகளுக்கு 2.5 பைசா/வினாடிக்கும் லோக்கல் எஸ்எம்எஸ்களுக்கு 1 ருபாயும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் எஸ்டிடி எஸ்எம்எஸ்க்கு ரூ.1.5 வசூலிக்கப்படுகிறது.

பாரதி ஏர்டெல் ரூ.181 திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ.181 திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டமானது டேட்டா வவுச்சர் பிளான் ஆகும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டா என மொத்தம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. உங்கள் அடிப்படை திட்டத்தில் உள்ள டேட்டா போதுமானதாக இல்லை என்றால் இந்த பூஸ்டர் திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Airtel recharge plan starting from Rs.109 with 30 days validity: Daily 1GB Data, Voice Call and SMS Benefits

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X