மீண்டும் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த ஏர்டெல் நிறுவனம்.!

|

ஏர்டெல் நிறுவனம் மீண்டும் சிறப்பு சலுகையை வழங்க தொடங்கிவிட்டது, அதன்படி இந்நிறுவனம் பிரபலமான ரூ.98 டேட்டா ஆட்-ஆன் பேக்கில் டபுள் டேட்டா அறபிவித்துள்ளது. இந்த பேக்கில் முன்னதாக 6ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்போது 12ஜிபி டேட்டா கிடைக்கும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.98-பேக்கின்

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.98-பேக்கின் டேட்டா நன்மையை அதிகரித்தபோதிலும், வேலிடிட்டி மீது எந்த மாற்றத்தையும்செய்யவில்லை. இந்த பேக் 28நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிராட்பேண்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் மற்றொரு ரூ.48 டேட்டா ஆட் ஆன் பேக்கின் மீது எந்த திருத்தமும் செய்யப்படவில்லை,பின்பு இது பயனர்களுக்கு 3ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை மொத்தம் 28நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ்
வழங்குகிறது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் சிறப்பான பிராட்பேண்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

Oneplus 8 ப்ரோ கேமரா ஆடைகள் மற்றும் திடப்பொருட்களின் உள் ஊடுருவி படம் எடுக்கிறதா?Oneplus 8 ப்ரோ கேமரா ஆடைகள் மற்றும் திடப்பொருட்களின் உள் ஊடுருவி படம் எடுக்கிறதா?

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ .799 - அடிப்படை திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ .799 - அடிப்படை திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் மலிவான திட்டம் ரூ.799 திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம், 150 ஜிபி டேட்டா நன்மையை 100 எம்.பி.பி.எஸ் வேகத்தில் பயன்படுத்தலாம். இத்துடன் வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் ஏர்டெல்எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தாவின் நன்மையையும் பெறுவீர்கள். ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் மூலம் நீங்கள் கூடுதல் நன்மைகளையும் பெறலாம். உங்கள் அதிவேக 150 ஜிபி தரவு தீர்ந்த பிறகு, வேகம் 1 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ 999 - என்டர்டைன்மெண்ட் திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ 999 - என்டர்டைன்மெண்ட் திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் இரண்டாவது திட்டம் இதுவாகும். இந்த திட்டத்தின் கீழ்
300 ஜிபி டேட்டா நன்மை 200 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன், வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ்
நன்மைகளான அமேசான் பிரைம் , ZEE5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவற்றின் சந்தாவும் கிடைக்கிறது.

 ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ.1,499 - பிரீமியம் திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ.1,499 - பிரீமியம் திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் மூன்றாவது திட்டம் ரூ.1,499 விலை கொண்ட பிரீமியம்
திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் 300 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 500 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் வரம்பற்ற அழைப்பு மற்றும்
ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளான அமேசான் பிரைம், ZEE5 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகிய இலவச சந்தாக்களும் கிடைக்கிறது.

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ 3,999 - விஐபி திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டம் ரூ 3,999 - விஐபி திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்டில் இறுதியான இந்த திட்டமே மிகவும் விலையுயர்ந்த திட்டமாகும். இந்த விஐபி திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 1 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது.

கூடுதல் விஐபி நன்மைகள்

இத்துடன் வரம்பற்ற அழைப்பு நன்மை மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளான அமேசான் பிரைம், ZEE5 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகிய இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வரம்பற்ற டேட்டா நன்மை என்பது 3.3TB டேட்டா அளவை குறிக்கிறது, அதற்குப் பிறகு உங்கள் வேகம் குறைக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Airtel Offers Double Data on Rs 98 Data Add-on Pack to Counter Jio and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X