Home
News

அள்ளி தரும் Jio.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா.. OTT.. எஸ்எம்எஸ்.. வாய்ஸ் கால்கள்.. மிஸ் பண்ணாதீங்க!

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட கம்மி பட்ஜெட்டில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அள்ளி தரும் Jio.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா..

ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid plan) நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும்.

குறிப்பாக மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா இந்த திட்டத்துக்குக் கொடுக்கப்படுகிறது. பின்பு ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்படுகிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்

அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது

ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1199 prepaid plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 3GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் குறைக்கப்படும்.

அதேபோல் இந்த திட்டத்திலும் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. மேலும் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவும் இதில் உள்ளது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 499 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஜியோ ரூ.499 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கொடுக்கப்படுகிறது.

அள்ளி தரும் Jio.. கம்மி பட்ஜெட்ல தினமும் 3ஜிபி டேட்டா..

மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா இந்த திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்படுகிறது. இதை 18 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தலாம். இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு இந்த ஜியோ ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio prepaid plans with unlimited benefits and 3GB daily data: Full list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X