Home
News

வச்சாரு பாரு அம்பானி ஜி.. வெறும் ரூ.189-க்கு 28 நாட்கள்.. வாய்ஸ் கால்கள்.. 2ஜிபி டேட்டா.. மலிவு விலை ரீசார்ஜ்!

ஜியோ (Jio) நிறுவனத்தின் கட்டணங்கள் உயராமல் இருந்தாலும், சில திட்டங்களில் வேலிடிட்டி குறைக்கப்பட்டு வருகிறது. ஆகவே, இந்த நேரத்தில் ஆரம்ப விலை / மலிவு விலைக்கு கிடைக்கும் ஜியோ ரூ.189 திட்டத்தை (Jio Rs 189 Plan) பற்றி ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இதைவிட கம்மி விலைக்கு வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் கிடைக்காது.

ஒரு டெலிகாம் நிறுவனத்தில் குறைந்தபட்ச விலை கொண்ட திட்டம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இது எவ்வளவு மலிவாக கிடைக்கிறதோ அவ்வளவு வரவேற்பை பெறும். அதன்படி ஜியோ நிறுவனத்தின் குறைந்தபட்ச விலை கொண்ட திட்டமாக ரூ.189 திட்டம் இருக்கிறது. இதில் வேலிடிட்டி குறைப்பு அல்லது சலுகைகள் குறைப்பு போன்ற எந்த மாற்றமும் இதுவரை செய்யப்படவில்லை.

வச்சாரு பாரு அம்பானி ஜி.. வெறும் ரூ.189-க்கு 28 நாட்கள்.. வாய்ஸ்!

ஆகவே, அடுத்த டெலிகாம் கட்டணங்கள் உயர்வு வரையில் என்னென்ன சலுகைகளை இதில் பெற்று கொள்ளலாம் என்பதை பார்க்க வேண்டும். இதில் தினசரி டேட்டா கிடைக்காது. ஏனென்றால், ஆரம்ப விலை திட்டங்களில் லம்ப்-சம் டேட்டா சலுகை மட்டுமே கொடுக்கப்படும். சிம் ஆக்டிவ் திட்டங்களாகவும் இவை இருப்பதால், குறைவான டேட்டாவை கொடுக்கிறது.

அதேபோல எஸ்எம்எஸ்களும் தினசரிக்கு கொடுக்கப்படாது. மொத்தமாக கொடுக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும்படி கிடைக்கும். அதே நேரத்தில் வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் இல்லாமல், வேலிடிட்டி நாட்கள் வரையில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களாக (Roaming Voice Calls) கொடுக்கப்படும்.

ஜியோ ரூ. 189 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 189 Prepaid Plan): குறைந்தபட்ச விலை கொண்ட திட்டமாக இருந்தாலும், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) கிடைக்கிறது. ஆகவே, டெலிகாம் நிறுவனங்களின் கணக்கின்படி ஒரு மாதத்துக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் சிம் ஆக்டிவ் (SIM Active) கொடுக்கப்படும்.

2 ஜிபி டேட்டா சலுகையை இந்த ஆரம்ப விலை திட்டம் கொடுத்து உள்ளது. 28 நாட்களுக்கும் இந்த 2 ஜிபி லம்ப்-சம் டேட்டா மட்டுமே கிடைக்கும். மேலும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும். இந்த போஸ்ட் டேட்டாவானது, 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு கிடைக்கும். 300 எஸ்எம்எஸ்களை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது.

இந்த எஸ்எம்எஸ்களை வேலிடிட்டி முன்பாக முடித்துவிட்டால், கூடுதல் கட்டணம் செலுத்தி அவுட்கோயிங் எஸ்எம்எஸ்களை அனுப்ப வேண்டி இருக்கும். ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளை மட்டுமே பெற்று கொள்ள முடியும். குறைந்தபட்ச திட்டத்துக்கு குறைந்தபட்ச சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

இதற்கு அடுத்த மலிவு விலை திட்டமாக ஜியோ ரூ.209 திட்டம் (Jio Rs 209 Plan) இருக்கிறது. இதில் லம்ப்-சம் டேட்டாவுக்கு பதிலாக தினசரி டேட்டா கிடைக்கும். அதேபோல தினசரி எஸ்எம்எஸ் சலுகையும் கிடைக்கும். ஆனால், வேலிடிட்டி குறைவாக இருக்கும். ஆகவே, தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் மலிவு விலை திட்டமாக இது இருக்கிறது.

ஜியோ ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 209 Prepaid Plan): 22 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 22 ஜிபி டேட்டா கிடைக்கும். 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள், ஜியோடிவி, ஜியோஏஐ கிளவுட் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 189 Prepaid Plan 28 Days Validity Every Jio Customers Need To Know This Cheapest Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X