60 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடபோனுக்கு மாறினர்.!

ஏர்செல் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 87 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருந்தனர், குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 1கோடியே வாடிக்கையாளர்கள் இருந்தனர்.

|

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ சேவை வந்ததும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தது, மேலும் ஜியோ சேவை வந்தது முதல் ஏர்செல் நிறுவனத்திற்கு அதிகமான நஷ்டம் ஏற்பட்டது. குறிப்பாக ஏர்செல் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

60 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடபோனுக்கு மாறினர்.!

ஜியோ வருகையால் ஏர்செல் சேவையை தொடர்ந்து நடத்த முடியாமல் திணறினார்கள், அதன்பின்பு ஏர்செல் நிறுவனத்தினர் கடன் வாங்கி நிதி நெருக்கடியைசமாளிக்க முயன்றனர், ஆனால் ஜியோ ஆதிக்கம் இருந்ததால், ஏர்செல் அதிகமான நஷ்டத்தை சந்தித்தது.

ஏர்செல் நிறுவனம் தமிழ்நாட்டில் மட்டும் தனியார் கட்டிடங்களில் 950-க்கும் மேற்பட்ட சிக்னல் கோபுரங்கள் கொண்டுள்ளது, இதற்கு சரியான வாடகை கொடுக்க முடியவில்லை என்று ஏர்செல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் நாடு முழுவதும் உள்ள இந்நிறுவனத்தின் சிக்னல் கோபுரங்களுக்கு வாடகை கொடுக்க முடியாததால் இதன் சேவை துண்டிக்கப்பட்டது.

மேலும் கடனை தீர்க்க முடியாததால் ஏர்செல் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதன்பின்பு செல்போன் சேவை துண்டிக்கப்பட்டதால் தமிழக மக்கள் மிகுந்த அவதிப்பட்டனர்.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)

ஏர்செல் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 87 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருந்தனர், குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 1கோடியே வாடிக்கையாளர்கள் இருந்தனர். ஏர்செல் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் அனைவரும் மற்ற தொலைதொடர்பு சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

தற்சமயம் வந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் மட்டும் 60 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனத்துக்கு மாறி விட்டனர். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்க 8லட்சம் வாடிக்கையாளர்கள் சென்று உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடபோனுக்கு மாறினர்.!

தொலைதொடர்பு துறை உயர் அதிகாரி தெரிவித்தது என்னவென்றால், ஏர்செல் சேவை துண்டிக்கப்பட்டதால் கடந்த 3நாட்களில் மட்டும் தமிழகத்தில் 70 ஆயிரம் மக்கள் பிஎஸ்என்எல் சேவை கேட்டு விண்ணப்பித்துள்ளனர், என்று தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
60 lakh Aircel customers migrate to Airtel Vodafone; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X