புதுசு புதுசா கிளம்புறாங்க.! 1 வருடத்தில் மட்டும் 60,620 சைபர் கிரைம்கள்.. உஷார்: டிஜிபி சைலேந்திரபாபு

|

கையில் காசு வைத்திருந்தால் செலவாகிவிடும் என்று வங்கிக் கணக்கில் பணம் போட்டு வைத்திருந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. இப்போதெல்லாம் கையில் காசு வைத்திருந்தால் கூட சேமிப்பாக தான் இருக்கிறது இந்த டிஜிட்டல் யுகத்தில் வங்கிக் கணக்கில் காசு வைத்திருந்தால் தான் வேகமாக செலவாகிவிடுகிறது. அதேசமயத்தில் பாதுகாப்பும் குறைவாக இருக்கிறது. சிறு தொழில் முதல் பெரு தொழில் வரை அனைத்து இடத்திலும் ஸ்கேன் போர்ட் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

அரங்கேறும் மோசடி கும்பல்

அரங்கேறும் மோசடி கும்பல்

திருட்டு சம்பவம், மோசடி நிகழ்வு என அனைத்தும் இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைனில் தான் அரங்கேறி வருகிறது. ஆன்லைன் மோசடிகளில் எச்சரிக்கையாக இருக்கும்படி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் ஆங்காங்க நூதன முறையில் மோசடி கும்பல் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றனர். அதன்படி தமிழகத்தில் கடந்த வருடம் மட்டும் 60,620 சைபர் கிரைம் வழக்குகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டிஜிபி சைலேந்திரபாபு

டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 60,320 சைபர் கிரைம் புகார்கள் பதிவாகி உள்ளதாகவும் பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தமிழக காவல்துறை டிஜிபி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்த வீடியோவை டிஜிபி சைலேந்திரபாபு தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். டிஜிபி சைலேந்திர பாபு பகிர்ந்துள்ள வீடியோவில் புதிய வகையான மோசடி அரங்கேறி வருவதாகவும் அதில் இருந்து கவனமாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.

எச்சரிக்கையாக இருப்பது அவசியம்

தவறான பார்சல் உங்க பேரில் வந்ததாகவும் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் உங்களிடம் பேசுவார் எனவும் குறிப்பிட்டு பின் பணத்தை கேட்டு மிரட்டுவார்கள் எனவும் இதுதொடர்பாக 70 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். புதிதாக மோசடிகள் நடந்து வருவதால் ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

டிஜிட்டில் இந்தியா

டிஜிட்டில் இந்தியா

மோசடி செயல்கள் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. ஒரு மோசடி செயல் நடந்தால் அது அங்கு தானே நடந்திருக்கிறது இங்கு வரவில்லையே என்றும் யாருக்கோ நடந்திருக்கிறது நமக்கெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றும் அலட்சியம் காட்ட வேண்டாம். டிஜிட்டில் இந்தியாவில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும்.

CERT-In ஆலோசனை

CERT-In ஆலோசனை

ஆன்லைன் மோசடிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி CERT-In ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் பொய்யான செய்திகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பண்டிகை ஆஃபர் என கூறி பரிசு இணைப்புகள் அனுப்பப்படுகிறது. இந்த இணைப்பை சக நண்பர்களிடம் பகிரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த இணைப்பை கிளிக் செய்வதன்மூலம் மோசடி செயல்கள் தொடங்குகிறது என CERT-In ஆலோசனையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மோசடி செயல்களில் கவனம் தேவை

மோசடி செயல்களில் கவனம் தேவை

எச்சரிக்கையாக இருப்பது அவசியம், நீங்கள் மோசடிகளை தவிர்க்க இணைப்புகளின் உண்மைத் தன்மையை அறிவது முக்கியம். அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பேரில் ஒரு லிங்க் அனுப்பப்படும் அதை கிளிக் செய்தால் அதிகாரப்பூர்வ தளம் போன்று வேறு தளத்துக்கு அனுப்பப்படுகிறீர்கள்.

அதிகாரப்பூர்வ தகவலை சோதிப்பு அவசியம்

அதில் மொத்த தகவலும் திருடப்படுகிறது. யோசித்து பாருங்கள், தேவையில்லாமல் அவர்கள் ஏன் உங்களுக்கு பரிசளிக்க வேண்டும். நியாயமற்ற முறையில் அதீத விலைக்குறைப்பு வழங்க என்ன காரணம் என்று. அதிகாரப்பூர்வ இணையதளத்தை நீங்களே டைப் செய்து அதற்குள் நுழைந்து சோதித்து பாருங்கள். நேரடியாக லிங்க்கிற்குள் நுழைவதை தவிர்க்கவும்.

எதையும் பகிர வேண்டாம்

எதையும் பகிர வேண்டாம்

எனவே எந்த ஒரு தகவலையும் லிங்க்கையும் உறுதி செய்வது அவசியம். டொமைன் பெயர்கள் சரிபார்க்கப்பட வேண்டும். எந்த ஒரு அதிகாரமற்ற தகவலையும் பகிர்ந்து நீங்கள் பாதிப்படைவதோடு பிறரையும் பாதிப்புக்கு உள்ளாக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
60,620 cybercrime complaints in 1 year.. Must be alert: DGP Sylendra Babu advise!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X