Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?

|

ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக பார்தி ஏர்டெல் (Airtel) நிறுவனம், அதன் 3 ப்ரீபெயிட் திட்டங்களில் ஒரு முக்கியமான கூடுதல் நன்மையை சேர்த்துள்ளது.

அதென்ன நன்மை? அந்த 3 திட்டங்களின் விலை என்ன? இது எப்படி ஜியோவிற்கு (Jio) எதிரான ஒரு நடவடிக்கையாக மாறும்? இதோ விவரங்கள்:

ஜியோவிடம் பூஜ்யம்!

ஜியோவிடம் பூஜ்யம்!

ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் எந்தவொரு ப்ரீபெய்ட் திட்டத்திலுமே இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) நன்மை கிடைக்காத நிலைப்பாட்டில், ஏர்டெல் நிறுவனம் அதன் 3 திட்டங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நன்மையை சேர்த்துள்ளது.

ஆக இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை எதிர்பார்க்கும் பயனர்களின் தேவையை பூர்த்தி செய்வதில், ஏர்டெல் நிறுவனம், ஜியோவை விட ஒருபடி முன்னே உள்ளது!

இதுவும் போச்சா.. பலரும் ரீசார்ஜ் செய்யும் முக்கிய திட்டத்தை சத்தம் போடாமல் நீக்கிய BSNL! இனிமேல்?இதுவும் போச்சா.. பலரும் ரீசார்ஜ் செய்யும் முக்கிய திட்டத்தை சத்தம் போடாமல் நீக்கிய BSNL! இனிமேல்?

நேற்றுவரை நான்கு.. இன்று முதல் ஏழு!

நேற்றுவரை நான்கு.. இன்று முதல் ஏழு!

நேற்று வரையிலாக 4 ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் மட்டுமே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை வழங்கி வந்த ஏர்டெல் நிறுவனம், தற்போது அந்த பட்டியலில் மேலும் 3 திட்டங்களை சேர்த்துள்ளது.

ஆக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவைக்கான இலவச அணுகலை வழங்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது!

அதென்ன திட்டங்கள்?

அதென்ன திட்டங்கள்?

முதலில், ஏர்டெல்லின் ரூ.499 மற்றும் ரூ.3359 ஆகிய இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் டிசம்பர் 22, 2022 அன்று, ஏர்டெல்லின் ரூ.399 மற்றும் ரூ.839 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டங்களிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நன்மை சேர்க்கப்பட்டது.

இப்போது, ​​ஏர்டெல்லின் ரூ.719, ரூ.779 மற்றும் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கொண்டு வரப்பட்டுள்ளது!

அடிச்சது அதிர்ஷ்டம்! திருப்பூரில் உள்ள Jio யூசர்களுக்கு இலவச 5G டேட்டா.. பெறுவது எப்படி?அடிச்சது அதிர்ஷ்டம்! திருப்பூரில் உள்ள Jio யூசர்களுக்கு இலவச 5G டேட்டா.. பெறுவது எப்படி?

இனிமேல் இந்த 3 திட்டங்களும் என்னென்ன நன்மைகளை வழங்கும்?

இனிமேல் இந்த 3 திட்டங்களும் என்னென்ன நன்மைகளை வழங்கும்?

ஏர்டெல்லின் ரூ.719 திட்டத்தை பொறுத்தவரை, இது 1.5ஜிபி டெய்லி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை மொத்தம் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் நன்மையும் சேர்க்கப்பட்டுள்ளது.

மற்ற நன்மைகளை பொறுத்தவரை, இது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப், ரிவார்ட்ஸ்மினி, அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹலோட்யூன்ஸ், இலவச வின்க் ம்யூசிக் மற்றும் ஃபாஸ்ட் டாக்கில் ரூ.100 கேஷ்பேக் போன்றவைகளை வழங்குகிறது!

இனி ரூ.779 திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்?

இனி ரூ.779 திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்?

ஏர்டெல் ரூ.779 திட்டமானது டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ்கள் என்கிற நன்மையை 90 நாட்களுக்கு வழங்கும்.

இந்த திட்டத்தின் கீழும் 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச அணுகல் சேர்க்கப்பட்டுள்ளது.

அது தவிர்த்து ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப், ரிவார்ட்ஸ்மினி, அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹலோட்யூன்ஸ், இலவச வின்க் ம்யூசிக் மற்றும் ஃபாஸ்ட் டாக்கில் ரூ.100 கேஷ்பேக் போன்ற நன்மைகளும் கிடைக்கும்.

ஆணியே புடுங்க வேணாம்! BSNL-ன் திடீர் அறிவிப்பு.. கடுப்பான கஸ்டமர்ஸ்.. வேற நெட்வொர்க்கிற்கு ஜம்ப்?ஆணியே புடுங்க வேணாம்! BSNL-ன் திடீர் அறிவிப்பு.. கடுப்பான கஸ்டமர்ஸ்.. வேற நெட்வொர்க்கிற்கு ஜம்ப்?

இனி ரூ.999 திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்?

இனி ரூ.999 திட்டத்தின் கீழ் என்னென்ன கிடைக்கும்?

இந்த பட்டியலில் கடைசியாக உள்ள ரூ.999 ப்ரீபெய்ட் திட்டமானது, டெய்லி 2.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், டெய்லி 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்கும்.

மேலே கண்ட இரண்டு திட்டங்களை போலவே, இதிலும் 3 மாதங்களுக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச அணுகல் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் (Amazon Prime) உடன் வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மீதமுள்ள நன்மைகள் வழக்கமானது தான். அதாவது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப், ரிவார்ட்ஸ்மினி, அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹலோட்யூன்ஸ், இலவச வின்க் ம்யூசிக் மற்றும் ஃபாஸ்ட் டாக்கில் ரூ.100 கேஷ்பேக் போன்றவைகள் கிடைக்கும்.

இதே திட்டங்கள் மற்றும் நன்மைகளை ஏர்டெல் 5ஜி-யின் கீழ் பெற முடியுமா?

இதே திட்டங்கள் மற்றும் நன்மைகளை ஏர்டெல் 5ஜி-யின் கீழ் பெற முடியுமா?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அளவிற்கு வேகமாக இல்லை என்றாலும் கூட, பார்தி ஏர்டெல், இந்தியா முழுவதும் தனது 5ஜி சேவைகளை வேகமாக அறிமுகம் செய்து வருகிறது.

ஒருவேளை நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பட்சத்தில், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து திட்டங்களில் மட்டுமின்றி, மேலும் பல ஏர்டெல் 4ஜி ரீசார்ஜ்களின் கீழ் கிடைக்கும் நன்மைகளை 5ஜி வேகத்தின் கீழ் அனுபவிக்கலாம்.

அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?அண்டார்டிகாவில் விழுந்த அபூர்வ விண்கல்.. 7 கிலோ பாறைக்குள் ஒளிந்திருக்கும் 7 பிறவிகள் பற்றிய ரகசியம்?

இதுவரை மொத்தம் எத்தனை நகரங்களில் ஏர்டெல் 5ஜி அறிமுகமாகி உள்ளது?

இதுவரை மொத்தம் எத்தனை நகரங்களில் ஏர்டெல் 5ஜி அறிமுகமாகி உள்ளது?

தற்போது வரையிலாக, இந்த டெலிகாம் நிறுவனத்தின் 5ஜி சேவைகள் ஆனது மொத்தம் 48 இந்திய நகரங்களுக்கு மேல் சென்றடைந்துள்ளது.

மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ 100-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் தனது 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துள்ளது!

Best Mobiles in India

English summary
3 More Airtel Prepaid Plans Now Offers Disney Plus Hotstar Mobile Subscription For Free Check The List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X