எழுதி வச்சிக்கோங்க! 2023-ல் இந்த 10 விஷயமும் கண்டிப்பா நடக்கும்! ஃபுல் டைம் WFH முதல் Elon Musk-ன் சரிவு வரை!

|

எலான் மஸ்க்கின் (Elon Musk) சரிவு முதல்.. முழு நேர வொர்க் ஃப்ரம் ஹோமிற்கு (Work From Home) மாறும் கம்பெனிகள் வரையிலாக.. இந்த 2023 ஆம் ஆண்டில் இந்த 10 விஷயங்களும் கண்டிப்பாக நடக்கும் என்கிற தனது அதிரடி கணிப்புகளை (2023 Predictions) வெளியிட்டுள்ளார், கார்ல் பெய்!

யார் இந்த கார்ல் பெய் (Carl Pei) என்பதை பற்றி கடைசியாக பார்ப்போம். முதலில் அவர் என்னென்ன கணிப்புகளை நிகழ்த்தி உள்ளார், இந்த 2023 ஆம் ஆண்டில் என்னென்ன நடக்க போகிறது? என்பதை பற்றி பார்த்து விடுவோம்:

கணிப்பு 01. சரியப்போகும் எலான் மஸ்க்!

கணிப்பு 01. சரியப்போகும் எலான் மஸ்க்!

எலான் மாஸ்க்கிற்கு (Elon Musk) பெரிய அளவிலான அறிமுகம் தேவை இல்லை, அதே போல அவர் ட்விட்டர் (Twitter) நிறுவனத்திற்கு மட்டுமல்ல, டெஸ்லா (Tesla) என்கிற கார் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சொந்தக்காரர் ஆவார் என்பதையும் உங்களில் பலர் அறிந்து இருக்கலாம்!

அந்நிறுவனம் ஒருவகையான "சரிவை" சந்திக்கும் என்று கார்ல் பெய் கணித்துள்ளார்.

அதாவது மற்ற பாரம்பரியமான கார் பிராண்டுகள் ஆனது லேட்டஸ்ட் டெக்னாலஜிகளையும், அது தொடர்புடைய டிரெண்டுகளையும் வேகமாக பழகிக்கொள்ளுமாம்; இதன் இதன் விளைவாக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனமானது ஒரு சாதாரண கார் பிராண்ட் (Car Brand) ஆக மாறும் என்கிறார் கார்ல் பெய்!

தம்பி Elon Musk.. சிஇஓ சீட்ல இருந்து கொஞ்சம் எழுந்திரு.. நான் உட்காரணும்.. அமெரிக்காவில் மாஸ் காட்டும் தமிழர்!தம்பி Elon Musk.. சிஇஓ சீட்ல இருந்து கொஞ்சம் எழுந்திரு.. நான் உட்காரணும்.. அமெரிக்காவில் மாஸ் காட்டும் தமிழர்!

கணிப்பு 02. Twitter-ன் நிலைமை என்ன ஆகும்?

கணிப்பு 02. Twitter-ன் நிலைமை என்ன ஆகும்?

டெஸ்லாவை "மொக்கை செய்த" கார்ல் பெய், ட்விட்டர் நிறுவனத்தை சற்றே புகழந்து உள்ளார்.

அதாவது, இந்த 2023 ஆம் ஆண்டில் ட்விட்டர் நிறுவனமானது மிகப்பெரிய உயரங்களை எட்டும். ஏனென்றால் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தில் தான் அதிக நேரம் செலவழிக்கிறார் என்று கார்ல் பெய் கணித்து உள்ளார்.

கணிப்பு 03.  இது வரை இல்லை.. ஆனால் இனிமேல் வரும்!

கணிப்பு 03. இது வரை இல்லை.. ஆனால் இனிமேல் வரும்!

கார்ல் பெய்யின் மூன்றாவது கணிப்பு ஆனது ஏஐ (AI) உடன் தொடர்புடையது. அதாவது ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) உடன் தொடர்புடையது.

இவரின் கூற்றுப்படி, இந்த 2023 ஆம் ஆண்டில் ஒரு ஏஐ கில்லர் ஆப் அறிமுகம் ஆகும். அதாவது இதுவரை இல்லாத அளவிலான ஒரு ஏஐ ஆப் (AI App) ஆனது இந்த 2023 ஆம் ஆண்டில் வெளிவரும் என்று கார்ல் பெய் கணித்து உள்ளார்.

நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசு! BSNL-ஐ நக்கல் அடிச்சவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க?நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசு! BSNL-ஐ நக்கல் அடிச்சவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க?

கணிப்பு 4. இன்னும் ரொம்ப தூரம் இருக்கு!

கணிப்பு 4. இன்னும் ரொம்ப தூரம் இருக்கு!

கார்ல் பெய்யின் நான்காவது கணிப்பு ஆனது மெட்டாவெர்ஸ் (Metaverse) உடன் தொடர்புடையது. கார்ல் பெய்யின் கூற்றுப்படி மெட்டாவெர்ஸ் ஆனது வெகுஜன தத்தெடுப்பிலிருந்து (Mass adoption) வெகு தொலைவில் உள்ளது.

அதாவது இந்த 2023 ஆம் ஆண்டில், மெட்டாவர்ஸின் வளர்ச்சி திட்டமிட்டபடி (அபாரமாக) இருக்காது என்று கார்ல் பெய் கணித்து உள்ளார்.

கணிப்பு 05. நம்ம மார்க்கின் வருங்காலம்?

கணிப்பு 05. நம்ம மார்க்கின் வருங்காலம்?

இந்த 2023 ஆம் ஆண்டானது மெட்டாவெர்ஸ்-க்கு வேண்டுமானால் சுமாராக இருக்கலாம். ஆனால் மெட்டா நிறுவனத்தின் சொந்தக்காரர் ஆன மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு, இது சூப்பரான ஆண்டாக இருக்க போகிறது.

ஏனென்றால் கார்ல் பெய்யின் கணிப்புப்படி, இந்த 2023 ஆம் ஆண்டில் மார்க் ஜுக்கர்பெர்க் நன்றாக செயல்படுவார், அதன் விளைவாக மெட்டாவில் உள்ள பலவகையான சிக்கல்கள் சரியாகும்!

பூமியின் கடைசி நொடி இப்படித்தான் இருக்கும்! விஞ்ஞானிகளின் விபரீதமான ஆய்வில் கிடைத்த திகிலூட்டும் ஆதாரம்!பூமியின் கடைசி நொடி இப்படித்தான் இருக்கும்! விஞ்ஞானிகளின் விபரீதமான ஆய்வில் கிடைத்த திகிலூட்டும் ஆதாரம்!

கணிப்பு நம்பர் 06. டாப் கியர் போட்டு தூக்கும் ஆப்பிள்!

கணிப்பு நம்பர் 06. டாப் கியர் போட்டு தூக்கும் ஆப்பிள்!

கார்ல் பெய்யின் 6வது கணிப்பானது ஆப்பிள் நிறுவனத்தை பற்றியது ஆகும். வழக்கம் போல இந்த 2023 ஆம் ஆண்டிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் உயரும் என்று கார்ல் பெய் கணித்து உள்ளார்.

ஏனெனல் ஆப்பிள் நிறுவனமானது மிகவும் உயர் தரமான ஒரு வணிகத்தை செய்து வருவதாக கார்ல் பெய் நம்புகிறார்.

கணிப்பு 07. ஆப்பிளுக்கு ஒரு ஆப்பும் காத்து இருக்கிறது!

கணிப்பு 07. ஆப்பிளுக்கு ஒரு ஆப்பும் காத்து இருக்கிறது!

இந்த 2023 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை பங்குகள் அதிகரிக்கும் அதே வேளையில், உலக அரசாங்கங்களானது ஆப்பிள் நிறுவனத்தின் மீதும், நுகர்வோர்களுக்கு எதிரான அதன் நடத்தைகள் மீதும் கடுமையான நகர்வுகளை மேற்கொள்ளும் என்றும் கார்ல் பெய் கணித்துள்ளார்.

எடுத்துக்காட்டிற்கு, ஐபோன்களில் கட்டாயம் டைப்-சி போர்ட் இடம்பெற வேண்டும் என்று உத்திரவிடப்பட்டுள்ளது!

Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!

கணிப்பு 08. இது தாறுமாறாக வலுவடையும்!

கணிப்பு 08. இது தாறுமாறாக வலுவடையும்!

ஆப்பிளை தொடர்ந்து ஆண்ட்ராய்டு மீதான தனது கணிப்பையும் கூட கார்ல் பெய் கட்டவிழ்த்து உள்ளார்.

இந்த 2023 ஆம் ஆண்டில் மென்பொருள் (Software) மற்றும் சேவைகளுக்கான (Services) மிக முக்கியமான விநியோக கருவியாக (Distribution tool) ஸ்மார்ட்போன்கள் வலுவடையும் என்று கார்ல் பெய் கணித்து உள்ளார்!

கணிப்பு 09. ஸ்மார்ட் வொர்க்கிற்கு அதிக வேலை இருக்காது!

கணிப்பு 09. ஸ்மார்ட் வொர்க்கிற்கு அதிக வேலை இருக்காது!

இந்த 2023 ஆம் ஆண்டில், மிகவும் கடுமையாக முயற்சி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே பணம் சம்பாதிக்கும் என்றும் கார்ல் பெய் கணித்து உள்ளார்.

அதாவது இந்த 2023 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் வொர்க்கிற்கு (Smart Work) அதிக வேலை இருக்காது; கடின உழைப்பு (Hard Work) மட்டுமே கைகொடுக்கும் என்கிறார் கார்ல் பெய்.

கணிப்பு 10. முழு நேர வொர்க் ஃப்ரம் ஹோம்!

கணிப்பு 10. முழு நேர வொர்க் ஃப்ரம் ஹோம்!

கடைசியாக, கார்ல் பெய்யின் கணிப்புப்படி, இந்த 2023 ஆம் ஆண்டில் ஹைபிரிட் (Hybrid) பாணியிலான வேலைகள், அதாவது வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்; தேவைப்படும் போது அலுவலகத்திற்கு வரலாம் என்கிற பாணி மெல்ல மெல்ல மங்கிவிடும்.

மாறாக, பெரும்பாலான நிறுவனங்கள் ஆனது முழு நேர வொர்க் ஃப்ரம்-ஐ (Full Time WFH) அல்லது முழு நேர ஆன்-சைட்டை (Full time On-site) தேர்வு செய்யும் என்கிறார் கார்ல் பெய்!

அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!அம்பானியே வந்து சொன்னாலும் கூட நம்பிடாதீங்க.. 5ஜி தொடர்பான 4 பச்சை பொய்கள்!

யார் இந்த கார்ல் பெய்?

யார் இந்த கார்ல் பெய்?

கார்ல் பெய், ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த செப்டம்பர் 2020-இல் இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

பின்னர் அதே ஆண்டில் (அக்டோபர் 2020) நத்திங் (Nothing) என்கிற நிறுவனத்தை உருவாக்கினார். இதுவரையிலாக, நத்திங் நிறுவனத்தின் கீழ் 2 TWS இயர்பட்ஸ்கள் மற்றும் ஒரு ஸ்மார்ட்போன் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; அது நத்திங் போன் 1 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனின் "வாரிசு", அதாவது நத்திங் போன் 2 ஆனது இந்த 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது!

Best Mobiles in India

English summary
2023 Predictions From Future of Elon Musk to Full Time WFH These 10 Things Will Happen in this year

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X