நியாயமான விலை; ஆப்பிளை மிரட்டும் அம்சங்கள்; அறிமுகமானது மி மிக்ஸ் 2எஸ்!

கடந்த ஆண்டு வெளியான அறிமுகமான மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் அப்டேட் பதிப்பான மி மிக்ஸ் 2எஸ் ஆனது, எதிர்பார்த்தபடியே ஒரு முன்னோடியான வடிவமைப்பை கொண்டுள்ளது.

|

ஒரு மாதத்திற்கும் மேலாக வெளியான பலவகையான லீக்ஸ் தகவல்கள் மற்றும் புகைப்படங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி, சியோமி நிறுவனத்தின் மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் இன்று சீனாவில் அதிகாபூர்வமாக அறிமுகமாகியுள்ளது.

நியாயமான விலை; ஆப்பிளை மிரட்டும் அம்சங்கள்; அறிமுகமானது மி மிக்ஸ் 2எஸ்

கடந்த ஆண்டு வெளியான அறிமுகமான மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் அப்டேட் பதிப்பான மி மிக்ஸ் 2எஸ் ஆனது, எதிர்பார்த்தபடியே ஒரு முன்னோடியான வடிவமைப்பை கொண்டுள்ளது.

நியாயமான விலை; ஆப்பிளை மிரட்டும் அம்சங்கள்; அறிமுகமானது மி மிக்ஸ் 2எஸ்

அதாவது பீங்கான் உடல், டிஸ்பிளேவின் கீழே உட்பொதிக்கப்ட்டுள்ள செல்பீ கேமரா மற்றும் ஒரு அதிர்ச்சியூட்டும் 18: 9 என்கிற திரை விகிதம் ஆகியவைகளை கொண்டுள்ளது.

இன்னும் சிறப்பான திறன்.!

இன்னும் சிறப்பான திறன்.!

பிரதான மேம்பாடுகள் எதுவென்று பார்த்தால், சில இன்டர்னெல் திறன்கள் மற்றும் கேமரா அமைப்பு மட்டும் தான் என்பது வெளிப்படை. சில செயற்கை நுண்ணறிவு அம்சங்களை செயல்படுத்துவதில் சியோமி நிறுவனம் மிகவும் கடினமாக உழைத்திருப்பதால், சியோமி மி மிக்ஸ் 2எஸ் கேமராவில் இன்னும் சிறப்பான திறன்களை எதிர்பார்க்கலாம்.

இரண்டு 12எம்பி சென்சார்கள்.!

இரண்டு 12எம்பி சென்சார்கள்.!

முதலாவதாக, மி மிக்ஸ் 2எஸ்-ன் மிகப்பெரிய சிறப்பம்சமான டூயல் கேமரா பற்றி பேசுவோம். இரண்டு 12எம்பி சென்சார்கள் கொண்டுள்ளது. ஒரு ஆர்ஜிபி முதன்மை சென்சார் மற்றும் ஓரு இரண்டாம்நிலை டெலிஃபோட்டோ லென்ஸ். இதன் முதன்மை சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவு கொண்டிருக்கும் மறுகையில் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆனது ஓஐஎஸ் (OIS) ஆதரவைக் கொண்டிருக்கவில்லை.

கூகுள் பிக்சல் 2-க்கு போட்டி.!

கூகுள் பிக்சல் 2-க்கு போட்டி.!

இருப்பினும் இதன் கேமராக்கள், மிக வேகமான போக்கஸை நிகழ்த்த உகவும் டூயல் பிடிஏஎப் (Probabilistic data association filter) ஆதரவுடன் வருகிறது. டிஎக்ஸ்ஓமார்க் (DxOMark) புகைப்பட சோதனையில், மி மிக்ஸ் 2எஸ் ஆனது 101 மதிப்பெண்களைப் பெற்றதும், மொத்தமாக 97 மதிப்பெண்களை பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது கிட்டத்தட்ட கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பெற்ற மதிப்பெண்களாகும்.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ.!

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ.!

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசிமூலம் இயக்கப்படும் சியோமி மிக்ஸ் 2எஸ் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்புடன் இணைந்து செயல்படுகிறது. ஒரு 6 அங்குல அமோஎல்இடி டிஸ்ப்ளே (18: 9 விகிதம்) கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு சிறப்பம்சம், மென்பொருள் ஆகும். மியூஐ 9 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டு இயங்குகிறது. நிறுவனத்தின் படி, மி மிக்ஸ் 2எஸ் கொண்டுள்ள செயற்கை நுண்ணறிவு அம்சங்களானது, ஸ்மார்ட்போனின் செயல்திறனை மூன்று மடங்கு அதிகரிக்கும்.

வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பம்.!

வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பம்.!

எதிர்பார்த்தபடியே சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஆனது வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தினை ஆதரிக்கிறது. அதற்கு நிறுவனத்தின் சியோமி குய் (Qi) வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பம் துணை புரிகிறது. சியோமியின் வயர்லெஸ் சார்ஜரின் விலை மட்டுமே ரூ.1020/0 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மி மிக்ஸ் 2எஸ் ஆனது மி மிக்ஸ் 2 ஆனது க்ளோபல் எல்டிஇ பேண்ட்களில் வெளி வருகிறது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
விலை மற்றும் ரேம் மாறுபாடுகள்.!

விலை மற்றும் ரேம் மாறுபாடுகள்.!

விலை நிர்ண்யத்தை பொறுத்தவரை, இதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மாடலானது சுமார் ரூ.33,800/-க்கும். 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாடலானது சுமார் ரூ.37,000/-க்கும், இறுதியாக, பிரீமியம் பதிப்பான 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு மாடலானது சுமார் ரூ.41.150/-க்கும் வெளியாகியுள்ளது.பிரீமியம் மாடல் ஸ்மார்ட்போனுடன் ,மட்டும் ஒரு இலவச வயர்லெஸ் சார்ஜர் ஷிப்பிங் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு மற்றும் விற்பனை பற்றிய எந்த வார்த்தையும் இல்லை.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Mix 2S Unveiled With Snapdragon 845 SoC and AI Dual Rear Cameras. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X