200MP கேமரா பவர்னா எப்படி இருக்கும் தெரியுமா? வரவிருக்கும் Samsung Galaxy S23 series பாருங்க!

|

Samsung நிறுவனம் அடுத்த ஜென் கேலக்ஸி எஸ்23 சீரிஸை பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறது. Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனானது 200 மெகாபிக்சல் ISOCELL HP2 சென்சார் கொண்டிருக்கும் எனவும் இதுவரை சாம்சங் போனில் இல்லாத அளவிற்கு மேம்பட்ட புகைப்பட அனுபவம் இதில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

200MP கேமரா பவர்னா எப்படி இருக்கும் தெரியுமா? Samsung Galaxy S23

200 megapixel ISOCELL HP2 கேமரா

பிப்ரவரி 1 ஆம் தேதி கேலக்ஸி எஸ்23 சீரிஸ் அறிமுகம் ஆக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் சாம்சங் அதிகாரப்பூர்வமாக 200 megapixel ISOCELL HP2 கேமரா சென்சாரை வெளியிட்டுள்ளது. எனவே வரவிருக்கும் ஸ்மார்ட்போனில் இந்த கேமரா சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் விதமாக சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேமரா சென்சார் "நாளைய பிரீமியம் ஸ்மார்ட்போன்களில்" இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளது.

இதே கேமரா சென்சார் சாம்சங் ஸ்மார்ட்போனின் அடுத்த ஜென் கேலக்ஸி இச்ட் ஃபோல்ட் ஸ்மார்ட்போனிலும் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

200 மெகாபிக்சல் ISOCELL HP1 சென்சார்

சாம்சங் நிறுவனம் முன்னதாகவே கடந்த ஆண்டு 200 மெகாபிக்சல் ISOCELL HP1 சென்சாரை அறிமுகம் செய்தது. இந்த சென்சார் தான் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ராவில் இடம்பெற்றது. சாம்சங் ISOCELL HP2 சென்சார், 200 மில்லியன் 0.6-மைக்ரோமீட்டர் பிக்சல்களை 1/1.3-இன்ச் ஆப்டிகல் வடிவத்தில் வழங்கும் என கூறப்படுகிறது. 108 எம்பி பிரைமரி கேமராக்களில் பயன்படுத்தப்படும் சென்சார் அளவு ஆகும்.

8கே வீடியோ தெளிவுத்திறன்

ISOCELL HP2 இல் சென்சார் அளவு குறைவாக இருக்கும் காரணத்தால் இதில் உயர் தெளிவுத்திறன் வழங்குவதற்கு ஏற்ற வகையில் பிற தொழில்நுட்பங்களை சாம்சங் வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முழுமையான 8கே வீடியோ தெளிவுத்திறன் ஆதரவு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Samsung Galaxy S23 series இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்பாக சாம்சங் இணையதளத்தில் இதன் அன்பேக் செய்யப்படும் தேதியை உறுதி செய்திருக்கிறது. எஸ்23 சீரிஸ் விரைவில் வெளியாகும் என வதந்தி தகவல்கள் வெளியாகி வந்த நேரத்தில் புதிய சீரிஸ் பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

வடிவமைப்பு குறித்த தகவல்

வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் எந்த வடிவமைப்பு குறித்த தகவலையும் நிறுவனம் பகிரவில்லை. ஆனால் வெளியாகி உள்ள டீசரில் மூன்று கேமராக்கள் காட்டப்பட்டிருக்கிறது. சாம்சங் இதன் வடிவமைப்பை முழுமையாக மறைத்திருந்தாலும், இதன் ரெண்டர்கள் இணையதளத்தில் பல முறை கசிந்திருக்கிறது. ரெண்டர்களுக்கும் அதிகாரப்பூர்வ வடிவமைப்புக்கும் பெரிய மாற்றங்கள் இருக்காது என கூறப்படுகிறது.

கேலக்ஸி எஸ்23 மற்றும் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா

SnoopyTech என்ற பெயரில் வெளியாகி உள்ள டிப்ஸ்டர் தகவலின்படி, கேலக்ஸி எஸ்23 சீரிஸ் இல் சாம்சங் கேலக்ஸி எஸ்23 மற்றும் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா ஆகிய மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது காட்டன் ஃப்ளவர், மிஸ்ட்லி லிலாக், பொட்டானிக் க்ரீன் மற்றும் பாண்டம் பிளாக் ஆகிய வண்ண விருப்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

200MP கேமரா பவர்னா எப்படி இருக்கும் தெரியுமா? Samsung Galaxy S23

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எஸ்23 குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நிறுவனம் பகிரவில்லை என்றாலும் இதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் ஆன்லைனில் கசிந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 200 எம்பி முதன்மை கேமரா இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரிஸ் இல் இடம்பெற்றுள்ள இரண்டு மாடல்களும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது TSMC ஆல் 4nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Wait until February 1: Samsung Galaxy S23 series Might Launching with 200MP ISOCELL HP2 camera

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X