ஆட விட்டு வேடிக்கை பார்த்த Vivo: பட்ஜெட் விலையில் பக்கா 5ஜி போனை களமிறக்கி சம்பவம்!

|

Vivo தனது சமீபத்திய Vivo Y35 5G ஸ்மார்ட்போனை அதன் Y-சீரிஸ் இன் கீழ் அறிமுகம் செய்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 2022 இல் அறிமுகம் செய்யப்பட்ட விவோ ஒய்35 4ஜி இன் வாரிசாக இந்த 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி இணைப்பு, மேம்பட்ட ஸ்மார்ட்போன் காட்சி மற்றும் சிறந்த கேமரா என பல்வேறு அம்சங்கள் உகந்ததாக இருக்கிறது.

Vivo Y35 5G

Vivo Y35 5G

Vivo Y35 5G ஸ்மார்ட்போனானது எச்டி+ தீர்மானம், 60Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய 6.51 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படை மாடலான Vivo Y35 4ஜி மாடலில் முழு எச்டி+ 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருந்தது. வாட்டர் டிராப் நாட்ச் வசதியுடன் கூடிய செல்பி கேமரா இந்த டிஸ்ப்ளேயில் இருக்கிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்

மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்

Vivo Y35 5G ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது 7nm ஃபேப்ரிகேஷன் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண கேமிங் விளையாடுவதற்கு இது சிறந்த செயலியாகும். மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலமாக தான் Poco M3 Pro 5G, Realme 8 5G, Realme Narzo 30 5G மற்றும் Lava Blaze 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் இயக்கப்படுகிறது. Vivo Y35 5G ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

டூயல் ரியர் கேமராக்கள்

டூயல் ரியர் கேமராக்கள்

Vivo Y35 5G ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனானது 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் மற்றும் 13 எம்பி இரண்டாம் நிலை கேமரா என டூயல் ரியர் கேமராக்கள் இருக்கிறது. அதேபோல் இதன் 4ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா இருக்கிறது. விவோ ஒய்35 5ஜி ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 5எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்

Vivo Y35 5G ஸ்மார்ட்போனின் இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இதில் 5ஜி டூயல் சிம், வைஃபை, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவை இருக்கிறது. ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. சார்ஜிங் ஆதரவுக்கு என 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான OriginOS ஓஷன் ஸ்கின் மூலம் இயக்கப்படுகிறது.

Vivo Y35 5G: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Vivo Y35 5G: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Vivo Y35 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை சீனாவில் CNY 1199 (தோராயமாக ரூ.14,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?

Vivo Y35 5G ஸ்மார்ட்போனானது ப்ளூ, ப்ளாக் மற்றும் கோல்ட் வண்ண விருப்பத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற தகவலை நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை.

பட்ஜெட் விலையில் 5ஜி போன்

பட்ஜெட் விலையில் 5ஜி போன்

இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் தற்போதே மலிவு விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை விவோ இந்தியாவில் அறிமுகம் செய்யும்பட்சத்தில் விவோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனமும் 5ஜி ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வெவ்வேறு அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டது. உங்கள் ஸ்மார்ட்போனை மேம்படுத்த விரும்பினால் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் தற்போதே ஏணைய ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y35 5G Launched at Budget Price with 5000mAh Battery, 8GB RAM and Android 13 OS Support

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X