நடை, உடை அனைத்தும் ஐபோன் போல்.. 1 வித்தியாசம் கூட சொல்ல முடியாது! ரூ.10,900க்கு சீன கம்பெனி லீலை.!

|

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் கொண்ட LeEco S1 Pro போனின் விலை தோராயமாக ரூ.10,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் லுக், வடிவமைப்பு, தோற்றம் என அனைத்தும் ஐபோன் 14 ப்ரோ போன்றே இருக்கிறது.

நடை, உடை அனைத்தும் ஐபோன் போல்.. ரூ.10,900க்கு சீன கம்பெனி லீலை.!

ஐபோன் என்றால் தனி மோகம்

ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் புதுப்புது ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வது வழக்கம். சராசரியாக ஐபோன் வெளியாகிறது என்று குறிப்பிட்டுவிட முடியாது. ஒவ்வொரு ஐபோன்களிலும் புதுமையான அம்சங்களை புகுத்தி மொபைல் துறையில் முன்னோடியாக விளங்கும் ஆப்பிள். என்னதான் ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தினாலும் அனைவருக்கும் ஐபோன் என்றால் தனி மோகம் இருக்கத் தான் செய்யும்.

வித்தியாசம் கண்டுபிடிப்பது மிக சிரமம்

ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருந்தாலும் அதன் விலை உயர்வாக இருப்பதால் பலருக்கும் இது எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த நிலையில் ஐபோன் போன்ற தோற்றம், வடிவமைப்பு, லுக் கொண்ட புது போனை சீன நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த போனுக்கும் ஐபோனுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது மிக சிரமம் என்பதாகும்.

ஆப்பிள் ஐபோன் 14 போன்றே தோற்றமளிக்கும் LeEco S1 Pro போன் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம். GSMArenaவில் வெளியாகி உள்ள தகவலின்படி, LeEco S1 Pro ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் சீனாவில் CNY 899 (தோராயமாக ரூ.10,900) என முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது. ஐபோன் 14 ப்ரோ மாடல் ஆனது ரூ.1,29,900 என விற்பனைக்கு கிடைக்கிறது. எனவே இந்த இரண்டுக்கும் ரூ.1.19 லட்சம் வித்தியாசம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

LeEco S1 Pro

LeEco S1 Pro ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. LeEco S1 Pro ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது HD+ (720x1600px) தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஐபோனில் 4கே தெளிவுத்திறன் உடன் கூடிய 4கே டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. LeEco S1 Pro ஸ்மார்ட்போனில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. ஐபோன் 14 ப்ரோ டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12nm Zhanrui T7510 சிப்செட் மூலம் இயங்குகிறது.

டிரிபிள் ரியர் கேமரா

LeEco S1 Pro ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமராக்கள் இருக்கிறது. இந்த மூன்று கேமராக்களும் ஐபோன் 14 ப்ரோவில் பொருத்தப்பட்டிருப்பது போன்றே பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புறத்தில் 13 எம்பி முதன்மை கேமரா மற்றும் முன்புறத்தில் 5 எம்பி ஸ்னாப்பர் இடம்பெற்றுள்ளது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றிருக்கிறது.

நடை, உடை அனைத்தும் ஐபோன் போல்.. ரூ.10,900க்கு சீன கம்பெனி லீலை.!

வடிவமைப்பு மற்றும் லுக்

LeEco S1 Pro ஸ்மார்ட்போனானது குறிப்பாக சீன சந்தைக்கு என வடிவமைக்கப்பட்டுள்ளதால், கூகுள் மொபைல் சேவைகளுக்கு பதிலாக Huawei இன் மொபைல் சேவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் அப்படி ஒன்றும் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை என்றாலும் இதன் வடிவமைப்பு மற்றும் லுக் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ விலை

Apple iPhone 14 Pro விலை குறித்து பார்க்கையில், இதன் விலை ரூ.1,29,900 முதல் தொடங்குகிறது. அதாவது 128 ஜிபி வேரியண்ட் ரூ.1,29,900 எனவும் 256 ஜிபி வேரியண்ட் ரூ.1,39,900 எனவும் 512 ஜிபி வேரியண்ட் ரூ.1,59,900 எனவும் 1 டிபி வேரியண்ட் ரூ.1,79,900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பேஸ் பிளாக், சில்வர், கோல்ட் மற்றும் டீப் பர்பில் என்ற வண்ண விருப்பங்களில் இந்த மாடல் கிடைக்கிறது.

Pic: Social Media

Best Mobiles in India

English summary
Style and Look are all like iPhone 14 Pro: LeEco S1 Pro Launched at Rs.10,900

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X