Samsung அறிமுகம் செய்த மிரட்டலான சாம்சங் கேலக்ஸி S20, கேலக்ஸி Z ஃபிலிப்,கேலக்ஸி பட்ஸ் பிளஸ் விபரம்!

|

சாம்சங் நிறுவனம் நேற்று அதன் சாம்சங் கேலக்ஸி அன்பேக் 2020 நிகழ்வை அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் ஸ்மார்ட்போன், சாம்சங் கேலக்ஸி S20, S20 +, S20 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி பட் பிளஸ் என்ற ட்ருலி வயர்லெஸ் இயர் பட்ஸ் மாடலுடன் அறிமுகம் செய்து, தொழில்நுட்பத்துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி அன்பேக் 2020 நிகழ்வு

சாம்சங் கேலக்ஸி அன்பேக் 2020 நிகழ்வு

சாம்சங் நிறுவனத்தின் இந்த நிகழ்வில், முதலாவதாக சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த தலைமுறைக்கான புதிய ட்ரெண்ட் இந்த ஸ்மார்ட்போன் என்று சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் மிரர் பர்ப்பிள், மிரர் பிளாக் மற்றும் மிரர் கோல்ட் ஆகிய நிறங்களில் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப்

சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப்

சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் ஸ்மார்ட் போன் 6.5' இன்ச் கொண்ட டிஸ்பிளே உடன் மடக்கு கூடிய அல்ட்ரா தின் சாதனத்துடன் இந்த ஸ்மார்ட்போன் சுமார் இரண்டு லட்சம் முறை மடக்க முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் உலகத்தின் முதல் போல்டபில் பன்சுஹோல் கேமிராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!

சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் ஸ்மார்ட்போனின் பிளக்ஸ் மோடு

சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் ஸ்மார்ட்போனின் பிளக்ஸ் மோடு

இந்த ஸ்மார்ட்போனின் பிளக்ஸ் மோடு உதவியுடன் பயனர்கள் டெஸ்க்டாப் போலவும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன்மூலம் சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் ஸ்மார்ட்போனை மடக்கி ஒரே நேரத்தில் இரண்டு டிஸ்பிளேகளாக பிரித்து யூடியூப் வீடியோ பார்த்துக்கொண்டே உங்களால் கமென்ட் செய்ய முடியும் என்று அறிமுகத்தை பொது நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் ஸ்மார்ட்போன் விலை

சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் ஸ்மார்ட்போன் விலை

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி Z ஃபிலிப் ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க ஸ்டோரேஜ் வசதியுடன், 3300 எம்.ஏ.எச் பேட்டரி உடன் கூடிய பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர் ஷேர் அம்சங்களுடன் 1380 அமெரிக்க டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை ரூ.98,500 ஆகும்.

உடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்! இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்!உடனே இந்த 9 அப்ஸ்களை டெலீட் செய்யுங்கள்! இல்லைனா உங்க அக்கௌன்ட் ஹேக் செய்யப்படும்!

சாம்சங் கேலக்ஸி S20 சீரிஸ் 100x  ஸ்பேஸ் ஜூம் கேமரா

சாம்சங் கேலக்ஸி S20 சீரிஸ் 100x ஸ்பேஸ் ஜூம் கேமரா

அதேபோல் சாம்சங் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் அதன் அடுத்த தலைமுறை 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி S20 சீரிஸ் வரிசையில் மூன்று புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை மிரட்டலான உலகத்தின் முதல் 100x ஸ்பேஸ் ஜூம் கேமரா அம்சத்துடன் சாம்சங்நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலைஅறிமுகம் செய்துள்ளது.

108 மெகா பிக்சல் 8K  வீடியோ ரெக்கார்டிங் கொண்ட கேமரா

108 மெகா பிக்சல் 8K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட கேமரா

சாம்சங் கேலக்ஸி S20, சாம்சங் கேலக்ஸி S20 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி S20 அல்ட்ரா ஆகிய அதிநவீன மிரட்டல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சாம்சங் கேலக்ஸி S20 அல்ட்ரா 108 மெகா பிக்சல் கொண்ட 8K வீடியோ ரெக்கார்டிங் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Jio ப்ரீபெய்ட்: தினமும் 1.5ஜிபி டேட்டா; ரூ.199 முதல் 365 நாட்கள் வரை! சிறப்பான திட்டங்கள் இதுதான்!Jio ப்ரீபெய்ட்: தினமும் 1.5ஜிபி டேட்டா; ரூ.199 முதல் 365 நாட்கள் வரை! சிறப்பான திட்டங்கள் இதுதான்!

சாம்சங் கேலக்ஸி S20, S20 பிளஸ், S20 அல்ட்ரா விலை

சாம்சங் கேலக்ஸி S20, S20 பிளஸ், S20 அல்ட்ரா விலை

சாம்சங் கேலக்ஸி S20 ஸ்மார்ட்போன், 999 அமெரிக்க டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் இந்திய விலை ரூ.72,000 ஆகும். சாம்சங் கேலக்ஸி S20 பிளஸ் ஸ்மார்ட்போன் 1,199 அமெரிக்க டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதன் இந்திய விலை ரூ.85,500 ஆகும் மற்றும் சாம்சங் கேலக்ஸி S20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 1399 அமெரிக்க டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதன் இந்திய விலை ரூ.1,00,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி பட் பிளஸ் ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ்

சாம்சங் கேலக்ஸி பட் பிளஸ் ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ்

அதேபோல் சாம்சங் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் தனது ஸ்மார்ட்போன் தயாரிப்புகளை மற்றும் அறிமுகம் செய்யாமல், இத்துடன் சாம்சங் நிறுவனத்தின், சாம்சங் கேலக்ஸி பட் பிளஸ் என்ற ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. அண்ட்ராய்டு மற்றும் iOS போன்களுடன் இயங்கும் இந்த இயர்பட்ஸ் 11 மணிநேரம் நீடித்து தொடர்ச்சியாக பிளேபேக் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை., யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி பட் பிளஸ் ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை

சாம்சங் கேலக்ஸி பட் பிளஸ் ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை

இதன் சார்ஜிங் கேஸ் 11 மணிநேரத்திற்கு சார்ஜ் வழங்குகிறது. 11 மணிநேர பிளேபேக் மற்றும் 11 மணிநேர சார்ஜிங் கேஸுடன் வரும் இந்த சாம்சங் கேலக்ஸி பட் பிளஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி பட் பிளஸ் ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.10,500 என்ற விலையில் வரும் 14 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Launches Galaxy S20, S20 Plus, S20 Ultra, Galaxy Z Flip And Galaxy Buds Plus Wireless Earbuds : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X