Home
Mobile

என்ன Apple-லு நல்லா இருக்கீயா.. வராத iPhone-க்கு வெடி வைத்த Samsung.. 0.5 மிமீ கேப்புல ஆப்பு!

சாம்சங் (Samsung) நிறுவனம் இந்த 2026 ஆம் ஆண்டிற்கான அதன் முதல் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை கடந்த பிப்ரவரியில் நடத்தி, கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய இருந்தது. இதற்கிடையில் - நாமெல்லாம் 2026 ஆண்டின் இரண்டாம் பாதியை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், சாம்சங் நிறுவனத்தின் இரண்டாவது கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு குறித்த வதந்திகள் இணையத்தில் வெளிவர தொடங்கியுள்ளன.

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங்கிடம் இருந்த, இந்த நிகழ்வு குறித்த அதிகாரப்பூர்வ டைம்லைன் குறித்து எந்த தகவலும் இல்லை, ஆனால் ஒரு புதிய லீக் அறிக்கை, இந்த நிகழ்வு 2026 ஜூலையில் நடைபெறக்கூடும் என்று தெரிவிக்கிறது. மேலும் இந்த நிகழ்வின் போது 3 புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

என்ன Apple-லு நல்லா இருக்கீயா.. வராத iPhone-க்கு வெடி வைத்த Samsung!

அது என்னென்ன ஸ்மார்ட்போன்கள்? சாம்சங்கின் அடுத்த வெளியீட்டு நிகழ்வில் - கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 8 மற்றும் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 8 உடன் சேர்ந்து கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 8 வைட் எனப்படும் ஒரு புதிய இன்னொரு புக்-ஸ்டைல் ​​ஸ்மார்ட்போன் என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த புதிய மாடலுக்காக சாம்சங் நிறுவனம் எஸ் பென் ஸ்டைலஸையம் கூட அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 22 அன்று நடைபெறலாம்: கொரியா எகனாமிக் டிவியின் ஒரு அறிக்கையின்படி, சாம்சங் தனது அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை ஜூலை 22, 2026 அன்று நடத்தும். இந்த அறிமுக நிகழ்வின் போது கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 8, கேலக்ஸி இஸட் ஃபிளிப் 8 மற்றும் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 8 வைட் ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்த பிராண்ட் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு இங்கிலாந்தின் லண்டனில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், சாம்சங் தனது முக்கிய ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வுகளை அமெரிக்காவிலோ அல்லது தென் கொரியாவிலோ தான் நடத்தியது. நினைவூட்டும் வண்ணம், கேலக்ஸி எஸ்26 சீரீஸை வெளியிடுவதற்கான கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. அதேசமயம் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 7 அறிமுகம் கடந்த ஆண்டு புரூக்ளினில் நடைபெற்றது.

லண்டன் - சாம்சங்கின் ஐரோப்பிய செயல்பாடுகளுக்கான ஒரு முக்கிய மையமாக உள்ளது என்றும், அதன் பிராந்திய தலைமையகம் சர்ரேயில் அமைந்துள்ளது என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இங்கிலாந்தில் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை நடத்துவதன் மூலம், இப்பகுதியில் தனது சந்தை நிலையை வலுப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக தெரிகிறது. இப்படி செய்வதன் மூலம் குறிப்பிட்ட சந்தையில், ஆப்பிளை விட ஒரு படி மேலே இருக்க அந்த பிராண்டிற்கு உதவக்கூடும்.

அம்சங்களை பொறுத்தவரை, வரவிருக்கும் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 8 வைட், ஒரு அகலமான டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும், ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் முதல் போல்டபிள் ஐபோனை போலவே 4:3 விகிதத்தை கொண்டிருக்கும் என்றும் வெளியான அறிக்கை கூறுகிறது.

இதன் மூலம் போல்டபிள் ஐபோனை விட சாம்சங்கின் கேலக்ஸி இஸட் 8 போல்ட் மாடல் ஆனது சுமார் 0.5 மிமீ ஸ்லிம் ஆன டிசைனை பெறும் என்றும் கூறப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி சாம்சங் இந்த ஆண்டு வைட் ஃபோல்டுடன் எஸ் பென்னை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. முந்தைய லீக்ஸ்களின் படி, கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 8 வைட் ஆனது 7.6-இன்ச் போல்டபிள் OLED டிஸ்பிளே மற்றும் 5.4-இன்ச் கவர் ஸ்கிரீனை கொண்டிருக்கும் என தெரியவந்தது. இது 25W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது (Photo Courtesy: @onleaksx@androidheadlineds)

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Next Galaxy Unpacked Event Tipped to Happen on July 22 Galaxy Z Fold 8 Wide Launch Expected
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X