பிச்சிக்குது விற்பனை.. ரூ.17099 க்கு AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. 6 ஜென் ஓஎஸ்.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி (Samsung Galaxy F36 5G) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. வீகன் லெதர் பேனல் மட்டுமல்லாமல், கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு கொடுக்கிறது. ஸ்லிம் ஸ்மார்ட்போன் பிரியர்கள் விரும்பும்படி 7.7 எம்எம் தடிமன் மட்டுமே கொடுத்துள்ளது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் பீச்சர்கள் மற்றும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஒன்யுஐ 7 (One UI 7) கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. மார்கெட்டில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் கிடைக்க இருக்கிறது. இந்த நேரத்தில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மட்டுமே இதில் கிடைக்கிறதா என்று தோன்றலாம். ஆனால், 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கிறது.

மேலும், 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது. வீகன் லெதர் பேனலை விரும்பும் பிரியர்களுக்கு ஏற்ப கோரல் ரெட் (Coral Red), லக்ஸ் வயலெட் (Luxe Violet) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. இப்போது, பிளிகார்ட் தளத்தில் 21 சதவீத தள்ளுபடி போக 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.
இந்த தள்ளுபடியுடன் ரூ.17,999 விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மாார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.900 தள்ளுபடி கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,099 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், ஈஎம்ஐ சலுகை மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போனில் இன்-ஹவுஸ் சிப்செட் மட்டுமே கிடைக்கிறது. மீடியாடெக் அல்லது குவால்காம் சிப்செட்டை எதிர்பார்க்க முடியது. இருப்பினும், பட்ஜெட்டில் பக்கா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட்டை கொடுத்துள்ளது. மாலி ஜி68 எம்பி5 ஜிபியு (Mali G68 MP5 GPU) கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F36 5G Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. மேலும், 2 எம்பி மெக்ரோ கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுத்துள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரியை கொடுத்து உள்ளது. 7.7 எம்எம் தடிமன் மட்டுமல்லாமல், 187 கிராம் எடை உள்ளது.
13 எம்பி செல்பீ கேமரா மற்றும் பஞ்ச் ஹோல்டு டிஸ்பிளே கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ உள்ளிட்ட பட்ஜெட் பீச்சர்களையும் கொடுத்து உள்ளது. ஏஐ பவர்டு எடிட் பீச்சர்கள் கிடைக்கின்றன. ஏஐ டெப்த் மேப் கொண்ட ஏஐ போர்ட்ராய்டு உள்ளிட்ட கேமரா பீச்சர்களையும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்36 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








