Samsung ஒரே போடு.. ரூ.3,000 ஆஃபரில் 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி ஏ37 (Samsung Galaxy A37) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 (Samsung Galaxy A57) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 50 எம்பி மெயின் கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த சாம்சங் மாடல்களின் விற்பனை விவரங்களை பார்க்கலாம்.
மார்ச் 26ஆம் தேதி வெளியாக இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை இன்று (ஏப்ரல் 10) அமேசான் தளத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் சாம்சங் கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போனுக்கு எந்த கிரெடிட் கார்டுகளும் இல்லாமல், ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போனுக்கு கிரெடிட் கார்டுகளுடன் ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ37 விலை (Samsung Galaxy A37 Price): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.41,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.47,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.52,999 ஆக இருக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் அறிமுக சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.38,999 விலைக்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டை ரூ.43,999 விலைக்கும் வாங்கி கொள்ளலாம். ரூ.40,500 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது.
அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு கூடுதலாக ரூ.1,318 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த வாங்கலாம். அவ்சம் லாவண்டர் (Awesome Lavender), அவ்சம் சார்கோல் (Awesome Charcoal) மற்றும் அவ்சம் கிரேகிரீன் (Awesome Graygreen) கலர்களில் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ57 விலை (Samsung Galaxy A57 Price): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.56,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.62,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட் பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கிறது.
ஆகவே, ரூ.53,999 ஆரம்ப விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.46,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. அவ்சம் நேவி (Awesome Navy), அவ்சம் ஐஸ்ப்ளூ (Awesome Icyblue) மற்றும் அவ்சம் லைலாக் (Awesome Lilac) கலர்களில் வாங்கி கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A37 5G Specifications): ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 (Octa Core Exynos 1480) சிப்செட் மற்றும் ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் சாம்சங் ஒன் யுஐ 8.5 கிடைக்கிறது.
6.7 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 50 எம்பி மெயின் ரேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A57 5G Specifications): ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1680 4என்எம் (Octa Core Exynos 1680 4nm) சிப்செட்டை இந்த கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சாம்சங் ஒன் யுஐ 8.5 (Samsung One UI 8.5) கிடைக்கிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.7 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. 12 எம்பி செல்பீ உள்ளது. 5000mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








