வாங்குனா இந்த Phone-ஐ வாங்கணும்! எதிர்பார்க்காத விலையில் புது 5G மாடலை இறக்கிவிட்ட Samsung.. ஜன.18-ல் விற்பனை!

|

யாருமே எதிர்பார்க்காத விலையில் சாம்சங் (Samsung) நிறுவனம் ஒரு புதிய 5ஜி போனை (5G Phone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

அதென்ன மாடல்? அதன் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

என்ன ஸ்மார்ட்போன்?

என்ன ஸ்மார்ட்போன்?

சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங்கின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி-க்கான ஆதரவில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. இது 90Hz டிஸ்ப்ளே, எக்ஸினோஸ் 1330 சிப்செட், 50MP டிரிபிள்-கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களையும் பேக் செய்கிறது.

வட ஆப்பிரிக்காவில் விழுந்த விண்கல்! உள்ளே என்ன இருக்கு? அடுத்தடுத்த ஆய்வில் காத்திருந்த அதிர்ச்சி!வட ஆப்பிரிக்காவில் விழுந்த விண்கல்! உள்ளே என்ன இருக்கு? அடுத்தடுத்த ஆய்வில் காத்திருந்த அதிர்ச்சி!

டிசைன் மற்றும் டிஸ்பிளே:

டிசைன் மற்றும் டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஆனது எச்டி+ ரெசல்யூஷன் உடனான 6.6 இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் லேசர் பேட்டர்ன் மற்றும் பிளாட் லீனியர் கேமரா ஹவுசிங் உடனான பாலிகார்பனேட் பேக் உள்ளது. மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் சிலவர், ஆரஞ்சு மற்றும் லைட் ப்ளூ என்கிற மூன்று கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்.

ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்:

ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்:

கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 1330 ஆக்டா-கோர் ப்ராசஸர் உள்ளது. இது 128GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4GB / 6GB / 8GB ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட சாம்சங் நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ கோர் 5 மூலம் இயங்குகிறது. மேலும் இது 2 வருட ஓஎஸ் அப்டேட்ஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!

ரியர் மற்றும் செல்பீ கேமரா:

ரியர் மற்றும் செல்பீ கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனில் ஓஐஸ் (OIS) ஆதரவை வழங்கும் 50MP மெயின் கேமரா உள்ளது. அதனுடன் ஒரு ஜோடி 2MP கேமராக்கள் உள்ளன; ஒன்று மேக்ரோ கேமரா ஆகும், மற்றொன்று டெப்த் சென்சார் ஆகும்.

முன்பக்கத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான 13MP கேமராவை கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் பாஸ்ட் சாஜிங்:

பேட்டரி மற்றும் பாஸ்ட் சாஜிங்:

சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போனில் 15W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரி உள்ளது.

இருப்பினும் கூட இந்த ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இடம்பெறவில்லை. அதாவது நீங்கள் உங்களுடைய பழைய சார்ஜரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லது தனியாக பணம் கொடுத்து சார்ஜர் வாங்க வேண்டும்.

ஏலியன்களை நெருங்கி விட்டோம்? 95% பூமியை போலவே இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்துள்ள NASA!ஏலியன்களை நெருங்கி விட்டோம்? 95% பூமியை போலவே இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்துள்ள NASA!

விலை விவரங்கள்:

விலை விவரங்கள்:

இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

அதாவது 4ஜிபி + 6 4ஜிபி, 6ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட்களில் வாங்க கிடைக்கும். அவைகள் முறையே ரூ.16,499, ரூ.18,999 மற்றும் ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன், சாம்சங் லைவ் (Samsung Live) வழியாக ஜனவரி 18 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும்.

மேலும் இது சாம்சங் நிறுவனத்தின் எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர்ஸ், சாம்சங்.காம் (Samsung.com) மற்றும் சாம்சங் நிறுவனத்தின் பார்ட்னர் ஸ்டோர்ஸ் வழியாக ஜனவரி 20 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Samsung Launched New 2023 Mid Range 5G Phone in India Galaxy A14 5G Sale Starts From January 18

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X