அவசரப்பட்டு இப்பவே புது போன் வாங்காதீங்க: இந்தியாவுக்கு வருது புதிய சாம்சங் 5G போன்: அறிமுக தேதி இதுதான்.!

|

சமீபத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா சந்தைகளில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இதே கேலக்ஸி ஏ15 ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. மேலும் இந்த போனின் அறிமுகம் செய்யப்படும் தேதி மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

 சாம்சங் கேலக்ஸி ஏ-சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ-சீரிஸ்

அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் 2023 ஜனவரி 18-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங் நிறுவனம். அண்மையில் இந்த அறிவிப்பை டீசரில் வெளியிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். அதன்படி கேலகஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

உள்ளே வராதே வெளியே போ! ரஷ்யாவை அசிங்கப்படுத்திய அமெரிக்கா! சொன்ன காரணம் தான் அல்டிமேட்!உள்ளே வராதே வெளியே போ! ரஷ்யாவை அசிங்கப்படுத்திய அமெரிக்கா! சொன்ன காரணம் தான் அல்டிமேட்!

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான iQOO 9 SE 5G ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டது: புதிய விலை இதுதான்.!தரமான iQOO 9 SE 5G ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டது: புதிய விலை இதுதான்.!

Dimensity 700 சிப்செட்

Dimensity 700 சிப்செட்

ஐரோப்பாவில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் Exynos 1330 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு அமெரிக்காவில் Dimensity 700 சிப்செட் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் OneUI 5.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த போன் இந்தியாவில் Dimensity 700 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

பட்ஜெட் விலையில் புதிய 5G போக்கோ போனை வாங்க ரெடியா? இன்னும் 2 வாரம் வெயிட் பண்ணுங்க.!பட்ஜெட் விலையில் புதிய 5G போக்கோ போனை வாங்க ரெடியா? இன்னும் 2 வாரம் வெயிட் பண்ணுங்க.!

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் அருமையான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்.

தாயை போல் தண்ணி குடிக்க சொல்லும் Fire Boltt Ninja Pro Plus ஸ்மார்ட் வாட்ச்! ரொம்ப கம்மி விலை.!தாயை போல் தண்ணி குடிக்க சொல்லும் Fire Boltt Ninja Pro Plus ஸ்மார்ட் வாட்ச்! ரொம்ப கம்மி விலை.!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே 5ஜி சேவைக்கு தகுந்தபடி சிறந்த பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

PhonePe, Google Pay, Paytm யூஸ் பண்றீங்களா? அப்போ இனிமேல் PhonePe, Google Pay, Paytm யூஸ் பண்றீங்களா? அப்போ இனிமேல் "இதை" கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.!

கனெக்டிவிட்டி..

கனெக்டிவிட்டி..

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை 5, ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் விலை

கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் விலை

4ஜிபி/6ஜி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் $200(இந்திய மதிப்பில் ரூ.16,500) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு ஐரோப்பாவில் இதன் விலை EUR 229 (இந்திய மதிப்பில் ரூ.20,100)ஆக உள்ளது. கருப்பு, வெள்ளி, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் இந்த கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் உடன் கேலக்ஸி ஏ54 5ஜி ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு நல்ல 5ஜி போனை வாங்க வேண்டும் என்றால் வரும் ஜனவரி 18-ம் தேதி வரை காத்திருக்கவும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A14 5G smartphone will be launched in India on January 18: check Price specifications: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X