மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!

|

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.10,000க்கு கீழ் விலையில் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது Infinix Note 12i ஸ்மார்ட்போனாகும். இதில் பல்வேறு அம்சங்கள் மேம்பட்டு இருந்தாலும். முக்கியமான ஒரு அம்சம் இல்லை என்பது வருத்தம் அளிக்கும் வகையில் இருக்கிறது.

ரூ.10,000க்கு கீழ் ஸ்மார்ட்போன்

Infinix Note 12i ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி ஜி85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா என பல அம்சங்கள் மேம்பட்டு இருக்கிறது. அதுமட்டுமில்லை இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அனைத்து அம்சங்களும் ஸ்மார்ட்போனின் விலை தான் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன்!

பட்ஜெட் விலையில் 4ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்

Infinix Note 12i ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி என்ற ஒற்றை வேரிண்ட் இல் அறிமுகமாகி இருக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.9999 ஆகும். இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது ஃபோர்ஸ் பிளாக், மெட்டாவெர்ஸ் ப்ளூ என இரண்டு வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது.

ஜனவரி 30 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனை

இந்தியாவில் Infinix Note 12i ஸ்மார்ட்போனின் விற்பனை ஜனவரி 30 முதல் தொடங்குகிறது. பிளிப்கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். ஆரம்பகால சலுகையும் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனை பிளிப்காரட் இல் ஆக்சிஸ் வங்கி கார்ட்கள் மூலம் வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன்!

Infinix Note 12i சிறப்பம்சங்கள்

Infinix Note 12i சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான நிறுவனத்தின் XOS 12.0 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. 6.7 இன்ச் ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1,080x2,400 பிக்சல்கள் தீர்மானத்துடன் 180 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் மற்றும் 1000 நிட்ஸ் உச்ச பிரகாச ஆதரவைக் கொண்டிருக்கிறது. கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. முன்னதாக குறிப்பிட்டது போல் 4 ஜிபி ரேம் ஆதரவுடன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி மூலம் இது இயக்கப்படுகிறது.

50எம்பி பிரைமரி கேமரா

Infinix Note 12i ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 50 எம்பி பிரைமரி லென்ஸ் ஆதரவுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 2 எம்பி இரண்டாம் நிலை கேமராவும், QVGA ரெசல்யூஷன் லென்ஸ் மூன்றாம் நிலை கேமராவாகவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என 8 எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது.

ரூ.9,999 விலையில் 5000mAh பேட்டரி

இந்த புதிய போனில் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருந்தாலும் பிரத்யேகமாக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவும் இருக்கிறது. இதன்மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இதை சார்ஜ் செய்வதற்கு 33வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது.

முக்கிய அம்சத்தை தவறவிட்ட இன்ஃபினிக்ஸ்

ரூ.9,999 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், இதில் 5ஜி ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்தியாவில் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக விரிவடைந்து வருகிறது. அதற்கேற்ப நிறுவனங்கள் மலிவு விலை போனில் கூட 5ஜி ஆதரவை வழங்கத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் இந்த புதிய இன்ஃபினிக்ஸ் போனில் 5ஜி ஆதரவு இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Rs.9999 Priced Infinix Note 12i Smartphone Launched in India: Sale Start in Flipkart on Jan 30 With Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X