சுத்தி வளைக்காமல் கே60 சீரிஸ் போன்களின் இந்திய விலையை சொன்ன Redmi.! எப்போது அறிமுகம்?

|

ரெட்மி நிறுவனம் நேற்று நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ரெட்மி கே60, ரெட்மி கே60 ப்ரோ மற்றும் ரெட்மி கே60இ ஆகிய போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள ரெட்மி நிறுவனம்.

ரெட்மி கே60 சீரிஸ் இந்திய விலை

ரெட்மி கே60 சீரிஸ் இந்திய விலை

குறிப்பாக ரெட்மி கே60, ரெட்மி கே60 ப்ரோ மற்றும் ரெட்மி கே60இ போன்கள் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனாலும் இந்த போன்களின் சரியான அறிமுக தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ரெட்மி கே60 சீரிஸ் இந்திய விலை பற்றி தகவலை வெளியிட்டுள்ளது ரெட்மி நிறுவனம்.

BSNL பயனர்களே மனச தேத்திக்கோங்க: 4G, 5G சேவை குறித்து உண்மையை அம்பலப்படுத்திய மத்திய மந்திரி.!BSNL பயனர்களே மனச தேத்திக்கோங்க: 4G, 5G சேவை குறித்து உண்மையை அம்பலப்படுத்திய மத்திய மந்திரி.!

 ரூ.30,000 விலை பிரிவில் அறிமுகமாகும்

அதாவது ரெட்மி கே60 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ.30,000 விலை பிரிவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரெட்மி கே60 மற்றும் ரெட்மி கே60 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.30,000, ரூ.40,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின்பு ரெட்மி கே60இ ஸ்மார்ட்போன் ரூ.26,000-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போன்களின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

அட்வான்ஸ் ஹேப்பி பொங்கல்! Flipkart-ல் திடீர் SALE.. அடுத்த 3 நாட்களுக்கு Phone, Laptop மீது ஆபர் மழை!அட்வான்ஸ் ஹேப்பி பொங்கல்! Flipkart-ல் திடீர் SALE.. அடுத்த 3 நாட்களுக்கு Phone, Laptop மீது ஆபர் மழை!

 ரெட்மி கே60 ப்ரோ 5ஜி அம்சங்கள்

ரெட்மி கே60 ப்ரோ 5ஜி அம்சங்கள்

ரெட்மி கே60 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 6.67-இன்ச் 2கே டிஸ்பிளே வசதி இதில் உள்ளது. இதுதவிர 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 5000 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

பணம் செலுத்தியும் ஸ்மார்ட்போனை சரியான நேரத்தில் டெலிவரி செய்யாத Flipkart-க்கு அபராதம்.! எவ்வளவு தெரியுமா?பணம் செலுத்தியும் ஸ்மார்ட்போனை சரியான நேரத்தில் டெலிவரி செய்யாத Flipkart-க்கு அபராதம்.! எவ்வளவு தெரியுமா?

 ரெட்மி கே60 ப்ரோ கேமரா

ரெட்மி கே60 ப்ரோ கேமரா

ரெட்மி கே60 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி Sony IMX800 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி tertiary சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஜெர்மன் கம்பெனினா சும்மாவா! ஆளுக்கு 2 வாங்கும் விலை! 48Hrs பிளே டைம்; Noise Cancellation உடன் கேமிங் இயர்பட்ஸ்ஜெர்மன் கம்பெனினா சும்மாவா! ஆளுக்கு 2 வாங்கும் விலை! 48Hrs பிளே டைம்; Noise Cancellation உடன் கேமிங் இயர்பட்ஸ்

ரெட்மி கே60 5ஜி அம்சங்கள்

ரெட்மி கே60 5ஜி அம்சங்கள்

ரெட்மி கே60 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் 6.67-இன்ச் 2கே டிஸ்பிளே வசதி இதில் உள்ளது. இதுதவிர 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 5500 எம்ஏஎச் பேட்டரி, 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.

ரெட்மி கே60 கேமரா

ரெட்மி கே60 கேமரா

ரெட்மி கே60 5ஜி ஸ்மாட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி macro சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

2023ம் ஆண்டின் முதல் 5G ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து மாஸ் காட்டிய Samsung.!2023ம் ஆண்டின் முதல் 5G ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து மாஸ் காட்டிய Samsung.!

ரெட்மி கே60இ அம்சங்கள்

ரெட்மி கே60இ அம்சங்கள்

ரெட்மி கே60இ ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 6.67-இன்ச் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே60இ ஸ்மார்ட்போன்.

ரெட்மி கே60இ ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடீயோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொணடுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Redmi K60 Series smartphones will be launched in India with a budget of Rs.30,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X