50எம்பி ரியர் கேமராவுடன் வெளிவந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்.!

|

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் சமீபத்தில் புதிய ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதாவது சிறப்பான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் சாதனம். அதேபோல் வரும் செப்டம்பர் 7-ம் தேதி இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படுத்தலாம். மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். கிட்டத்தட்ட பிரீமியம் ஸ்மார்ட்போனில் உள்ள அதே டிஸ்பிளே அம்சங்களைகொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. பின்பு Astral White, Bifrost White மற்றும் Phantom Black நிறங்களில் வெளிவந்துள்ளதுஇந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்.

Samsung Galaxy A52 விலை மீண்டும் அதிகரித்தது.. இப்போதுள்ள புதிய விலை என்ன தெரியுமா?Samsung Galaxy A52 விலை மீண்டும் அதிகரித்தது.. இப்போதுள்ள புதிய விலை என்ன தெரியுமா?

10 பிரைம் ஸ்மார்ட்போனின் கேம

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். அதாவது இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. எனவே இந்த கேமராக்கள் உதவியுடன் இரவு நேரங்களில் கூட மிகத் துல்லியமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

பிரைம் ஸ்மார்ட்போனில் 8எம்பி செ

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 13எம்பி அல்லது 16எம்பி செல்பீ கேமராக்கள் இடம்பெற்றிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். குறிப்பாக செல்பீ கேமரா அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ட்மி 10 பிரைம் சாதனத்தில்

அதேபோல் ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. இந்த சிப்செட் வசதி இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்.

ட்டர், ஆம்பியண்ட்

ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம். மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத்

குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்.. மேலும் இந்த சாதனத்தில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 9W வரை ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்.

 ஸ்மார்ட்போனின் விலைரூ.12,499-ஆக உள்ளது. பின்பு இதன்6ஜிபி ரேம்  மற்றும் 128ஜிபி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் விலைரூ.12,499-ஆக உள்ளது. பின்பு இதன்6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,499-விலையில் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்தசாதனத்தை அமேசான், Mi.com, Mi Home stores தளங்களில் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Redmi 10 Prime Review in Tamil: Camera, Battery, Price, Availability Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X