Just In
- 6 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- 6 hrs ago
44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!
- 7 hrs ago
விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!
- 8 hrs ago
அட்டகாசமான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 டர்போ இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!
Don't Miss
- News
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு குரங்கு அம்மை பரிசோதனை... விமான நிலையங்களுக்கு உத்தரவு
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Lifestyle
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்.! நம்பி வாங்கலாமா
சியோமி, விவோ நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது ரியல்மி நிறுவனம். குறிப்பாக ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக வரவேற்பை பெறுகின்றன. அதன்படி அண்மையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இனிவரும் நாட்களில் 5ஜி சாதனங்களுக்கு தான் நல்ல வரவேற்பு இருக்கும். இதை கவனத்தில் வைத்து தொடர்ந்து 5ஜி சாதனங்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது ரியல்மி நிறுவனம்.இப்போது மற்ற நிறுவனங்களை கம்மி விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம்செய்துள்ளது ரியல்மி நிறுவனம்.

அதாவது அண்மையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.13,999-விலையில் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம். அதேபோல் அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5ஜி சாதனத்தின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999-ஆக உள்ளது. இப்போது இந்த ரியல்மி 8 5ஜிசாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
அசத்தலான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் ரியல்மி ஜிடி நியோ பிளாஷ்.!

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதன்படி ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 nits பிரைட்னஸ் உட்பட பல்வேறு அருமையான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு திரைப்படம், கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு அருமையாக இருக்கும் இந்த புதிய ரியல்மி 8 5ஜி. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் தரமான டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்.

மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட்
அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கு இதயம் போன்றது சிப்செட், அதன்படி இந்த புதிய ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட் உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி2 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்மாடல். மேலும் நீண்ட வருடங்கள் தாங்கும்படி இந்த சிப்செட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அசத்தலான சிப்செட் வசதி கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு வேகமாக செயல்படும். குறிப்பாக Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான சிப்செட் வசதியைகக் கொண்டுள்ளது ரியல்மி 8 5ஜி மாடல்.

48எம்பி பிரைமரி சென்சார்
கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களில் உள்ள அதே கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8 5ஜி மாடல். அதாவது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள்அடக்கம். பின்பு நைட்ஸ்கேப், 48 எம் மோட், புரோ மோட், ஏஐ ஸ்கேன் மற்றும் சூப்பர் மேக்ரோ போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள். மேலும் இந்த சாதனத்தின் கேமராக்கள் உதவியுடன் இரவு நேரங்களில் கூட துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

5000 எம்ஏஎச் பேட்டரி
இந்த புதிய சாதனம் சரியான பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் குவிக் சார்ஜ் ஆதரவுடன் வெளிவந்துள்து இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதியஸ்மார்ட்போன்.
குறிப்பாக ஆப் பயன்பாடுகள், கேமிங்,திரைப்படம் போன்ற அனைத்தையும் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த சாதனம் மிகவும் உதவியாக இருக்கும். அதாவது நீண்ட நேரம் பேட்டரி ஆயுளை வழங்கும் இந்த ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். சூப்பர்சோனிக் பிளாக் மற்றும் சூப்பர்சோனிக் ப்ளூ போன்ற நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பட்ஜெட் விலையில் 5ஜி ஆதரவு, 48எம்பி கேமரா, ஒரு பெரிய டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, தனித்துவமான நிறங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது ரியல்மி 8 5ஜி சாதனம். பயனர்கள் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால் இது ஒரு நல்ல தேர்வாகும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999