எதிர்கால ஸ்மார்ட்போனை இப்போதே அறிமுகம் செய்த iQOO: யோசிக்காம இதை வாங்குங்க!

|

iQOO 11 ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்ட்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது 8 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் மாடல்கள் ஆகும். ஐக்யூ 11 ஸ்மார்ட்போனானது E6 AMOLED டிஸ்ப்ளே மற்றும் V2 இமேஜிங் சிப் ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. சமீபத்திய மேம்பட்ட சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிப்செட் தான் ஏணைய ப்ரீமியம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் பொருத்தப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

iQOO 11 ஸ்மார்ட்போன்

iQOO 11 ஸ்மார்ட்போன்

iQOO இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iQOO 11 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Vivo-sub பிராண்டான ஐக்யூ நிறுவனத்தின் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8 Gen 2 மூலம் இயக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் முதல் ஐக்யூ ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இது மாறி இருக்கிறது.

V2 இமேஜிங் சிப்

V2 இமேஜிங் சிப்

iQOO 11 ஆனது சுவாரஸ்யமான கேமரா அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இதில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 2K E6 AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. விவோவின் தனியுரிம V2 இமேஜிங் சிப் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

iQOO இந்தியா CEO

iQOO இந்தியா CEO

இந்த புதிய ஸ்மார்ட்போன் குறித்து iQOO இந்தியா CEO நிபுன் மரியா கூறுகையில், "iQOO, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய மொபைல் தொழில்நுட்பங்கள் மற்றும் உயர் செயல்திறன் அம்சங்களை கொண்டு வருவதே நோக்கமாகும். இந்த நோக்கம் பயனர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துகிறது. ப்ரீமியம் வடிவமைப்பு, முதன்மை சிறப்பம்சங்கள் மற்றும் சிறந்த செயல்திறனை வழங்கும் iQOO 11 ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் முதல் முதன்மை தயாரிப்பாக கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என தெரிவித்துள்ளனர்.

iQOO 11: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

iQOO 11: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

iQOO 11 விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.59,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.64,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை அதிகம் தான் என்றாலும் பிற நிறுவனங்கள் உடன் ஒப்பிடுகையில் இதில் விலையை மீறிய அம்சங்கள் நிறைய இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஆரம்பமே தள்ளுபடி

ஆரம்பமே தள்ளுபடி

இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. அதன்படி வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் ரூ.51,999 என 8 ஜிபி ரேம் வேரியண்ட்டையும் ரூ.56,999 என 12 ஜிபி ரேம் வேரியண்ட்டையும் வாங்கலாம்.

அமேசான் பிரைம் சந்தாதாரராக நீங்கள் இருந்தால், ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கும் பிரைம் எர்லி அணுகல் விற்பனையில் ரூ.1000 பிளாட் தள்ளுபடியை பெறலாம். பிற பயனர்கள் ஐக்யூ ஸ்டோர்களில் ஜனவரி 13 முதல் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

வண்ண விருப்பங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் லெஜண்ட் மற்றும் ஆல்பா ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

iQOO 11 சிறப்பம்சங்கள்

iQOO 11 சிறப்பம்சங்கள்

iQOO 11 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 2K E6 பேனலை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயங்குகிறது.

50 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎன்5 லென்ஸ்

50 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎன்5 லென்ஸ்

ஐக்யூ 11 கேமரா அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎன்5 லென்ஸ், 13 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் ஆகிய டிரிபிள் கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி ஸ்னாப்பர் இருக்கிறது. ஐக்யூ 11 ஆனது பிரத்யேக V2 இமேஜிங் சிப் ஆதரவைக் கொண்டிருக்கிறது. சிறந்த கேமிங் செயல்திறன் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டூயல் x-லீனியர் மோட்டார்

டூயல் x-லீனியர் மோட்டார்

V2 சிப் பிரேம் ஆதரவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. கேமிங் செயல்திறனை மேம்படுத்துவதற்கு என iQOO 11 ஆனது டூயல் x-லீனியர் மோட்டாரைக் கொண்டிருக்கிறது. பேட்டரி ஆதரவை பொறுத்தவரை, ஐக்யூ 11 ஸ்மார்ட்போனானது 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி அணுகலைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Qualcomm Snapdragon 8 Gen 2 Powered iQoo 11 Launched in india: Latest mobile Technologies and High-Performance Features!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X