சூப்பர் டிவிஸ்ட்! அதிக விலைக்கு வருமென்று நினைத்த Samsung Galaxy S23 போனின் வியப்பூட்டும் விலை நிர்ணயம்!

|

சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயத்தில் ஒரு சூப்பரான டிவிஸ்ட் காத்திருக்கிறது.

அதென்ன டிவிஸ்டு? சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரிஸ் (Samsung Galaxy S23 Series) மாடல்களின் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

எதிர்பார்ப்பதை விட குறைவான விலை!

சாம்சங் நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக சாம்சங் கேலக்சி எஸ்23 சீரீஸ் கூடிய விரைவில்.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்.. வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Samsung Galaxy S23 போன்களின் விலை நிர்ணயம் வெளியானது!

எஸ்23 சீரிஸ் பற்றி ஏற்கனவே நிறைய அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலைப்பாட்டில் எஸ்23 சீரீஸ் அறிமுகம் செய்யப்படவுள்ள பல்வேறு பிராந்தியங்களில் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது.

வாங்கிடாதீங்க.. அசல் விலையை விட ரூ.10,000 கம்மி விலைக்கு கிடைக்கும் இந்த போனை வாங்கிடாதீங்க! ஏன்?வாங்கிடாதீங்க.. அசல் விலையை விட ரூ.10,000 கம்மி விலைக்கு கிடைக்கும் இந்த போனை வாங்கிடாதீங்க! ஏன்?

முதலில் கேலக்சி எஸ்23 சீரீஸின் ஆஸ்திரேலிய விலை விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆனது. அதை தொடர்ந்து அமெரிக்க சந்தைக்கான விலை விவரங்களும் வெளியாகி உள்ளது.

அமெரிக்க விலை விவரங்களை வைத்து பார்க்கும்போது, புதிய எஸ்3 சீரிஸ் மாடல்கள் எதிர்பார்ப்பதை விட குறைவான விலைக்கே அறிமுகமாகும். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் - அமெரிக்க விலைகளும் இந்திய விலைகளும் ஒற்றுப்போகும் வாய்ப்புகளும் உள்ளன.

பேஸிக் வேரியண்ட் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்23 போனின் விலை நிர்ணயம் என்ன?

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, எஸ்23 சீரிஸின் கீழ் வெளியாகும் பேஸிக் வேரியண்ட் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்23 மாடலின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் சுமார் ரூ.64,950 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Samsung Galaxy S23 போன்களின் விலை நிர்ணயம் வெளியானது!

இதே வேரியண்ட்டின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்படும். ஆனால் அதன் விலை விவரம் பற்றிய தகவல் எதுவும் இல்லை.

மற்ற இரண்டு மாடல்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்?

சாம்சங் கேலக்ஸி எஸ்23 பிளஸ் (Samsung Galaxy S23 Plus) ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை சுமார் ரூ.81,150 ஆக இருக்கலாம். இது 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷனின் விலை நிர்ணயம் ஆகும். இதே வேரியண்ட்டின் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஆப்ஷன்களும் கூட அறிமுகம் செய்யப்படலாம்.

இதுவும் போச்சா.. பலரும் ரீசார்ஜ் செய்யும் முக்கிய திட்டத்தை சத்தம் போடாமல் நீக்கிய BSNL! இனிமேல்?இதுவும் போச்சா.. பலரும் ரீசார்ஜ் செய்யும் முக்கிய திட்டத்தை சத்தம் போடாமல் நீக்கிய BSNL! இனிமேல்?

சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவை (Samsung Galaxy S23 Ultra) பொறுத்தவரை, இது கேலக்சி எஸ்22 அல்ட்ராவின் விலையோடு ஒற்றுப்போகலாம். அதாவது சுமார் ரூ..97,350 என்கிற ஆரம்ப விலையின் கீழ் அறிமுகமாகலாம்.

Samsung Galaxy S23 போன்களின் விலை நிர்ணயம் வெளியானது!

வழக்கமாக ரூ.3000 அதிகமாக இருக்கும்.. ஆனால் இம்முறை?

வழக்கமாக புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் போது பழைய மாடல்களுக்கும், புதிய மாடல்களுக்கும் ரூ.3000 என்கிற விலை வித்தியாசம் இருக்கும். அதாவது புதிய மாடல்கள் ரூ.3000 என்கிற அதிக விலைக்கு வரும்.

சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!சாதனை! நாசாவால் கூட கண்டுபிடிக்க முடியாத செவ்வாய் கிரக மர்மம்.. அசால்ட் ஆக கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானிகள்!

ஆனால் இம்முறை, சம்சங் நிறுவனம் சில புதிய விலை நிர்ணய உத்திகளை பின்பற்றும் என்பது போல் தெரிகிறது. இந்த உத்திக்கு பின்னால் ஐபோன் 14 சீரிஸின் விலை நிர்ணயம் கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

ஏனென்றால், ஐபோன் 14 சீரிஸை விட சற்றே குறைவான விலைக்கு அறிமுகம் செய்தால் தான், கேலக்ஸி எஸ்23 மாடல்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும்.

கேலக்ஸி எஸ்23 சீரீஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

எஸ்23 சீரிஸின் கீழ் வரும் மூன்று மாடல்களுமே 5ஜி ஆதரவுடன் வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால், இந்த மூன்றுமே குவால்காம் நிறுவனத்தின் புதிய ப்ராசஸர் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Snapdragon 8 Gen 2) மூலம் இயக்கப்படும்.

தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?தெரியாமல் கூட.. இந்த வார்த்தையை Google Search-ல் டைப் பண்ணிடாதீங்க! ஒருவேளை பண்ணி இருந்தா?

அதுமட்டுமின்றி, கேலக்ஸி எஸ்23 சீரீஸின் கீழ் வெளியாகும் அனைத்து மாடல்களுக்குமே 4 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்ஸ் மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்கும்!

Best Mobiles in India

English summary
Price Details of Samsung Galaxy S23 Series Will Surprise You 3 New Phones Launching On February 1

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X