Poco F4 5G போன் வாங்கப் போறீங்களா? முதல்ல இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க.!

|

விவோ, ஒப்போ, ஒன்பிளஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக பல அசத்தலான ஸ்மர்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது போக்கோ நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் சமீபத்தில் போக்கோ எஃப்4 5ஜி ( Poco F4 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

நம்பி வாங்கலாமா

இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கிறது. ஆனால் விலைக்கு தகுந்த அம்சங்கள் உள்ளதா? மேலும் இதன்முழு அம்சங்கள் என்னென்ன? நம்பி வாங்கலாமா? வேண்டாமா? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

எதிர்பார்த்த சிப்செட் வசதி

எதிர்பார்த்த சிப்செட் வசதி

போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதியை முதலில் பார்ப்போம். அதாவது இந்த புதிய போக்கோ போன் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. இதே சிப்செட் வசதி ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போனில் கூட உள்ளது.

அதாவது ஸ்னாப்டிராகன் 888 போன்ற முதன்மை சிப்செட் அல்ல இந்த ஸ்னாப்டிராகன் 870 சிப்செட். ஆனாலும் பயன்படுத்த அருமையாக இருக்கும். குறிப்பாக Genshin Impact, Asphalt 9 கேம்களை இயக்க அருமையாக பயன்படுகிறது இந்த சிப்செட். எஃப்4 5ஜி ஸ்மார்ட்போனின்
விலைக்கு தகுந்த சிப்செட் இடம்பெற்றுள்ளது என்றே கூறலாம்.

Web Series-களை இவ்ளோ ஈஸியா Download செய்யலாமா? அட இது தெரியாம போச்சே!Web Series-களை இவ்ளோ ஈஸியா Download செய்யலாமா? அட இது தெரியாம போச்சே!

கேமிங் அனுபவம்?

கேமிங் அனுபவம்?

அதேபோல் கேமிங் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது. அதாவது சில போன்களில் சிறிது நேரம் கேம் விளையாடினால் போதும் உடனே சூடாவது போன்ற உணர்வு தரும். ஆனால் இந்த போன் நீண்ட நேரம் கேம் விளையாடியபோதும் அப்படி ஏதும் உணர்வை கொடுக்கவில்லை.

அதாவது போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் கேம் விளையாடியபோதும் குளிர்ச்சியாகவே இருந்துது. குறிப்பாக இந்த சிப்செட் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக உள்ளது என்றே கூறலாம். சிப்செட் விட டிஸ்பிளேவுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

தரமான சம்பவத்துக்கு தயாரான மோட்டோ: 200MP கேமரா, 125W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் புதிய ஸ்மார்ட்போன்!தரமான சம்பவத்துக்கு தயாரான மோட்டோ: 200MP கேமரா, 125W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் புதிய ஸ்மார்ட்போன்!

 டிஸ்பிளேவுக்கு தனி கவனம்

டிஸ்பிளேவுக்கு தனி கவனம்

6.67 இன்ச் ஃபுல் HD+ (1,080x2,400 பிக்சல்கள்) E4 AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய
போக்கோ ஸ்மார்ட்போன்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இதன் டிஸ்பிளேவுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம். அதாவதுஅமேசான் பிரைம் வீடியோவில் HDR10+ மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இல் டால்பி விஷன் ஆதரவை கொண்டுள்ளது இந்த சாதனம்.

SBI YONO ஆப்ஸ் மூலம் எப்படி புதிய Beneficiary-ஐ ஆட் செய்வது? இது ஏன் ரொம்ப யூஸ்ஃபுல் தெரியுமா?SBI YONO ஆப்ஸ் மூலம் எப்படி புதிய Beneficiary-ஐ ஆட் செய்வது? இது ஏன் ரொம்ப யூஸ்ஃபுல் தெரியுமா?

தெளிவான டிஸ்பிளே

தெளிவான டிஸ்பிளே

அதேபோல் இந்த போனை பயன்படுத்தி இரவு நேரத்தில் நெட்ஃபிளிக்ஸ் வீடியோக்களை பார்ப்பதற்கு மிக அருமையாக உள்ளது என்றே கூறலாம். குறிப்பாக ப்ரைட்னஸ்-ஐ குறைக்கவோ, அதிகப்படுத்தவோ தேவையே இருக்காது.

மேலும் சூரிய ஒளியில் இந்த போனை பயன்டுத்தியபோது கூட இதன் டிஸ்பிளே தெளிவாக தெரிகிறது. முன்பு கூறியபடி இதன் டிஸ்பிளேவுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம்.

கேமராவில் சொதப்பல்

கேமராவில் சொதப்பல்

போக்கோ எஃப்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. ஆனாலும் அதன் கேமராவில் சொதப்பி உள்ளது போக்கோ நிறுவனம்.

குறைந்த ஒளியில் எடுக்கும் படங்கள்

அதாவது வெளிப்புற இடங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களின் நிறங்கள் துல்லியமாக இருக்கிறது. ஆனால் குறைந்த ஒளியில் எடுக்கும் படங்கள்அவ்வளவு சிறப்பாக இல்லை. குறிப்பாக மேக்ரோ மற்றும் அல்ட்ரா-வைட் பற்றி பேசுவதற்கு அதிகம் இல்லை. ஏனெனில் அந்தளவு மொக்கையான கேமராக்கள்இதில் இடம்பெற்றுள்ளன.

Nothing Phone 1 இந்தியாவில் Reliance டிஜிட்டல் வழியாக விற்பனையா? இது சீன போனா? உண்மை இதோ!Nothing Phone 1 இந்தியாவில் Reliance டிஜிட்டல் வழியாக விற்பனையா? இது சீன போனா? உண்மை இதோ!

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன். ஆனால் இதை விட 32எம்பி கேமரா இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். அதாவது இப்போது ரூ.15,000-க்கு வெளிவரும் சில போன்கள் கூட 32எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது.

இயங்குதளம் மற்றும் பேட்டரி

இயங்குதளம் மற்றும் பேட்டரி

MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த போக்கோ எஃப்4 5ஜி போன். எனவே டிஸ்பிளேவில் ஆப்ஸ்களை வேகமாக இயக்க முடியும். குறிப்பாக இந்த இயங்குதளம் புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

மேலும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ போன். எனவே ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்ய முடியும். ஆனால் 4500 பேட்டரி ஆனது கேமிங் வாடிக்கையாளர்களுக்கு போதுமானதாக இருக்காது. அதாவது விரைவில் சார்ஜ் தீர்ந்துவிடும்.

5ஜி, 4ஜி

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் பேட்டரியும் அவ்வளவு சிறப்பு இல்லை. மேலும் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்கள் ஆகியவை இந்த போனில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று உயர்வான விலை

சற்று உயர்வான விலை

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எஃப்4 5ஜி போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. கடைசியாக இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின்விலை ரூ.33,999-ஆக உள்ளது.

நம்பி வாங்கலாமா? வேண்டாமா

நம்பி வாங்கலாமா? வேண்டாமா

நல்ல கேமரா போன் வேண்டும் என்று நினைக்கும் பயனர்கள் இதை தவிர்ப்பது நல்லது. மற்றபடி நல்ல சிப்செட், அருமையான டிஸ்பிளே அம்சங்களுடன் வெளிவந்துள்ளது போக்கோ எஃப்4 5ஜி. அதேபோல் இந்த விலையில் 120W பாஸ்ட் சார்ஜிங், 108எம்பி ரியர் கேமரா போன்ற வசதிகள் இந்த போனில் இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

போக்கோ எஃப்4 5ஜி போனை விட ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்53, சியோமி 11ஐ போன்ற போன்கள் சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மற்றபடி நல்ல சிப்செட் எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த போக்கோ எஃப்4 5ஜி மாடலை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Poco F4 5G Review in Tamil: Camera, Battery, Price, Availability Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X