ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!

|
ஃபர்ஸ்ட் லுக்: ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போன்!

உலக அளவில் முன்னணி ஸ்மார்ட்-டிவைஸ் பிராண்ட் ஆன ஒப்போ, அதன் ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தின் மூலம், ஒப்போ ரெனோ சீரீஸை விரிவுபடுத்தியுள்ளது. தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக கடந்த பல ஆண்டுகளாக நன்கு அறியப்படும் ஒப்போவின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன், அதன் கிரீடத்தில் மற்றொரு வைரமாகும். ஒப்போ ரெனோ8 மற்றும் ஒப்போ ரெனோ8 ப்ரோ 5ஜி ஆகியவற்றுடன் இணையும் இந்த ஸ்மார்ட்போன், பயனர்களுக்கு கலப்படமற்ற தனித்துவமான அனுபவத்தை உறுதியளிக்கிறது. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது, அற்புதமான வடிவமைப்பை பெற்றுள்ளது, மேலும் பிரீமியம் அனுபவத்தை எதிர்பார்க்கும் ஒவ்வொரு ரெனோ ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் ஏற்ற தரமான அம்சங்களையும் தன்வசம் கொண்டுள்ளது. மொத்தத்தில் ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களானது சரியான கலவையை உறுதியளிக்கிறது.

ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போனை ஒரு சிறந்த போனாக, ஒரு மதிப்புமிக்க போனாக மாற்றுவது எது? ஏன் இந்த ஸ்மார்ட்போனை உங்கள் ஷாப்பிங் பட்டியலில் முதலிடத்தில் வைக்க வேண்டும்? என்கிற காரணங்கள் இதோ:

மேற்கூறிய காரணங்களை கண்டறிய, நாங்கள் இந்த ஸ்மார்ட்போனை சில நாட்கள் பயன்படுத்தி பார்த்தோம்; ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போனின் எல்லைகளையும் கண்டறிந்தோம்!

ஃபர்ஸ்ட் லுக்: ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போன்!

வடிவமைப்பு: சூழ்நிலைகளை பொருட்படுத்தாத அழகியல்!

அழகு பார்ப்பவரின் கண்களில் உள்ளது என்று கூறுவார்கள், ஆனால் ஒப்போ ரெனோ8 டி 5ஜி எங்கள் கைகளில் கிடைத்ததும் அந்த கூற்று பொய்யாகிப்போனது. ஏனென்றால் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் எங்களுக்கு கிடைத்த சன்ரைஸ் கோல்ட் வேரியண்ட் ஆனது கிட்டத்தட்ட அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது. இந்த ஸ்மார்ட்போன் எங்களிடம் சில நாட்களுக்கு மட்டுமே இருந்தது, ஆனால் அதன் டூயல் மைக்ரோ கர்வ்டு பெவல்களும், மிகவும் ரம்மியமான ஒப்போவின் க்ளோ டிசைனும் எங்களுடைய நினைவை விட்டு இன்னமும் நீங்கவில்லை. அதை பற்றி விசாரிக்காத ஆட்களே இல்லை எனலாம். இந்த ஸ்மார்ட்போன் முற்றிலும் புதிய ரியர் பேனல் வடிவமைப்பு, வட்டமான முனைகளுடன் கூடிய டெக்கரேட்டிவ் ஸ்ட்ரைப்ஸ், செங்குத்தான நிலையில் சற்றே உயர்த்தப்பட்ட டூயல் கேமரா மாட்யூல் போன்றவைகளை பெற்றுள்ளது.

இதே ஸ்மார்ட்போனின் மிட்நைட் பிளாக் கலர் ஆப்ஷனை நேரில் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை, ஆனால் மிகவும் நுட்பமாக கட்டமைக்கப்பட்ட சன்ரைஸ் கோல்ட் கலர் ஆப்ஷனானது, அதன் மேற்பரப்பில் விழும் சுற்றுப்புற ஒளியை ஆயிரக்கணக்கான பிரமிட் வடிவ படிகங்களாக துள்ளவிட்டு, பார்ப்பவர்களை திகைப்பூட்ட வைக்கிறது. இந்த வடிவமைப்பு, ஒரு ஆப்டிகல் எஃபெக்ட்டை உருவாக்குகிறது, அதை வார்த்தைகளில் சொல்வது கடினம். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ஃபினிஷ் ஆனது கறை படுவதையும், கைரேகைகள் பதிவதையம் கூட எதிர்க்கிறது!

ஆக மொத்தம் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை அழகியல் மற்றும் பணிச்சூழலியல் ஆகியவற்றின் அரிய சங்கமம் என்றே கூறலாம். உறுதியான கட்டுமானத்தை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போனின் எடை 171 கிராம் ஆகும். மேலும் இது வெறும் 7.7 மிமீ என்கிற தடிமனை மட்டுமே கொண்டுள்ளதால் இதைவொரு சூப்பர்-ஸ்லிம் ஸ்மார்ட்போன் என்றும் கூறலாம். ஒட்டுமொத்தமாக இது உங்கள் கையில் இருப்பதை நீங்கள் உணரவே மாட்டீர்கள். ரெனோ8 டி 5ஜி என்பது நாம் இன்றுவரை பயன்படுத்திய மிகவும் காம்பாக்ட் ஆன ஸ்மார்ட்போன்களில் ஒன்று மட்டுமல்ல, இது மெலிதான மற்றும் இலகுவான ஸ்மார்ட்போனும் கூட, இதை மிகவும் எளிமையாக மற்றும் வசதியாக ஒரு நாள் முழுவதும் கூட பயன்படுத்தலாம்!

ஃபர்ஸ்ட் லுக்: ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போன்!

டிஸ்பிளே: மகிழ்ச்சிமிக்க மல்டி-டாஸ்கிங்!

மந்தமான 2டி பேனல்களை கொண்ட சுமாரான ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியில் ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் டஃப்பன்டு மைக்ரோ-கர்வ்டு டிராகன்ட்ரெயில்-ஸ்டார்2 அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இதன் கர்வ்டு டிஸ்பிளேவானது மல்டி டாஸ்கிங்கை மட்டுமின்றி, ஒட்டுமொத்த வடிவமைப்பிற்கும் கூடுதல் அழகையும், அதன் பயன்படுத்தும் போது மகிழ்ச்சியையும் சேர்க்கிறது. இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை சுற்றியுள்ள பெசல்கள் மிகவும் மெலிதாக உள்ளன, இதன் விளைவாக இந்த ஸ்மார்ட்போன் 93 சதவிகிதம் என்கிற ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோவை வழங்குகிறது.

ஃபர்ஸ்ட் லுக்: ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போன்!

மேலும், இந்த டிஸ்பிளே 10-பிட் கலர் ஆதரவுடன் வருகிறது, இது பழைய 8-பிட் டிஸ்பிளே தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும்போது 64 மடங்கு சிறந்த வண்ணங்களை வழங்குவதாக கூறப்படுகிறது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் ரெனோ8டி 5ஜி ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 1.07 பில்லியன் வண்ணங்களை காண்பிக்கும், அதேசமயம் 8-பிட் பேனல்கள் ஆனது அதிகபட்சமாக வெறும் 16.7 மில்லியன் வண்ணங்களை மட்டுமே காண்பிக்கும. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?

ஒரு நெட்ஃபிளிக்ஸ் வீடியோவில் உள்ள அனைத்து வண்ணங்களையும் உங்களால் பார்க்க முடியாவிட்டால், அந்த டிஸ்பிளேவில் என்ன மகிமை இருந்துவிட போகிறது? அதிர்ஷ்டவசமாக, ஒப்போவின் இந்த ஸ்மார்ட்போன் ஃபுல் வைட்வைன் எல்1 சான்றிதழை பெற்றுள்ளது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், எந்தவிதமான கலப்படமும் இல்லாத ஃபுல் எச்டி+ ரெசல்யூஷனை வழங்கும். இதன் மூலம் அமேசான் ப்ரைம் வீடியோ போன்ற என்க்ரிப்ஷன் ஸ்டாண்டர்ட்டை ஆதரிக்கும் அனைத்து ஸ்ட்ரீமிங் சேவைகளுமே முன்னெப்போதும் இல்லாத அளவிலான அனுபவத்தை வழங்கும்.

ஃபர்ஸ்ட் லுக்: ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போன்!

இந்த டிஸ்பிளேவின் மகிமை இன்னும் முடியவில்லை. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே ஒப்போவின் ஏஐ-என்ஹான்ஸ்டு அடாப்டிவ் ஐ ப்ரொடெக்ஷன் சிஸ்டமையும் கொண்டுள்ளது. ஆக நீண்ட நேரம், இருட்டான இடத்தில் இருந்தபடியே திரைப்படங்களை பார்த்தால் கூட உங்கள் கண்களுக்கு எந்தவிதமான அழுத்தமும் இருக்காது. நாங்கள் இரவு முழுவதும் ஒரு முழு வெப் சீரிஸையும் பார்த்தோம்; விடியற்காலையில் எழுந்து கேமிங்கும் செய்தோம், இருந்தாலும் கூட நீண்ட நேரம் மொபைல் ஸ்க்ரீனையே பார்ப்பது எங்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இல்லை. இந்த டிஸ்பிளே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது என்பதை நாங்கள் குறிப்பிட்டுள்ளோமா? இல்லையென்றால் தெரிந்துகொள்ளுங்கள், இது 120ஹெர்ட்ஸ் 3டி கர்வ்டு டிசைனுடன் வரும் ஒரு மெலிதான மற்றும் இலகுவான ஸ்மார்ட்போன் ஆகும். கேமிங் மற்றும் ப்ரவுஸிங் முதல் யூஐ வழியிலான ஸ்க்ரோலிங் வரை, இந்த டிஸ்பிளேவில் எல்லாமே சுவாரஸ்யம் தான்!

ஃபர்ஸ்ட் லுக்: ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போன்!

கேமரா: வன்பொருள், மென்பொருள் மற்றும் ஏஐ-யின் ஹோலி டிரினிட்டி!

சிறந்த புகைப்படங்களை சிரமமின்றி கைப்பற்றும் திறன் ஆனது, ஒரு நல்ல ஃபிளாக்ஷிப் கிரேடு ஸ்மார்ட்போனுக்கும், சிறந்த ஸ்மார்ட்போனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் குறிக்கிறது. ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதன் தனித்துவமான ஏஐ -மேம்பாடுகள் மற்றும் புத்திசாலித்தனமான பிக்சல்-பின்னிங் தொழில்நுட்பத்தின் காரணமாகவும் மொபைல் போட்டோகிராஃபியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இதில் உள்ள 108எம்பி பிரைமரி கேமரா சென்சார் ஆனது நிஜத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை எடுப்பதில் ஒரு கில்லாடி ஆகும். இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், இதன் நோனாபிக்சல் பிளஸ் பின்னிங் தொழில்நுட்பமாகும்.

இந்த ஸ்மார்ட்போனின் லோ-லைட் புகைப்படங்களை பார்த்து நாங்கள் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டோம். ஒப்போவின் பிக்சல்-பின்னிங் தொழில்நுட்பமானது, தெளிவான காட்சிகளுக்காக ஒளியின் உணர்திறனை 37 சதவீதம் வரை அதிகரிக்கிறது. ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போனை கையில் வைத்து இருந்தால், ஒளிநிலமைகளை பற்றிய எந்த கவலையயும் இல்லாமல் அட்டகாசமான புகைப்படங்களை பதிவு செய்யலாம்.

இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாம் நிலை கேமராவானது 2எம்பி டெப்த் சென்சார் ஆகும். இது மேம்படுத்தப்பட்ட போர்ட்ரெய்ட் பொக்கே ஃபிளேர் எஃபெக்ட், போர்ட்ரெய்ட் மேட்டிங் மற்றும் லென்ஸ் ஃப்ளேர் ரெண்டரிங் எஃபெக்ட்களை வழங்க ஒப்போவின் சிறந்த சாஃப்ட்வேர் அல்காரிதத்துடன் இணைந்து செயல்படுகிறது. இதில் 40எக்ஸ் மைக்ரோலென்ஸும் உள்ளது. இது சிறந்த மேக்ரோ புகைப்படங்களை எடுப்பதற்கு கைகொடுக்கிறது!

ஃபர்ஸ்ட் லுக்: ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போன்!

எல்லோருடைய கவனமும் ரியர் கேமரா செட்டப்பில் மட்டுமே இருக்காது; சிலரின் கவனம் செல்பீ கேமரா மீதும் இருக்கும். அப்படியாக, இந்த ஸ்மார்ட்போனில் 32எம்பி ஹை-ரெசல்யூஷன் செல்பீ கேமரா உள்ளது. சிறந்த செல்பீக்களை வழங்குவதற்காக இது ஒப்போவின் கேமரா ஹார்ட்வேர் மற்றும் செல்பீ எச்டிஆர் மோட் உடன் இணைந்து செயல்படுகிறது, இது நம்பமுடியாத டைனமிக் வரம்பிலான மற்றும் ஈர்க்கக்கூடிய செல்பீக்களை வழங்குகிறது.

இதிலுள்ள டூயல் வியூ வீடியோ அம்சம் வ்லாகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும், அதேசமயம் இதன் பொக்கே ஃப்ளேர் போர்ட்ரெய்ட் அம்சமானது, தனித்துவமான கலை கண்ணோட்டத்துடன் புகைப்படங்களை கிளிக் செய்ய அனுமதிக்கிறது. இதற்கிடையில், ஏஐ கலர் போர்ட்ரெய்ட் மற்றும் ஒப்போ ஏஐ ரீடச்சிங் போன்ற மற்ற குறிப்பிடத்தக்க கேமரா அம்சங்கள் நாம் கண்களால் பார்ப்பதை புகைப்படங்களாக மாற்றுகின்றன என்றே கூறலாம்!

செயல்திறன்: வருங்காலத்திற்குத் தகுந்த போன்!

இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருங்காலத்திற்கு தகுந்த பல அசத்தலான சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியை கொண்டுள்ளது. அதாவது 6என்எம் சிப்செட் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட வேகத்தை கொடுக்கும். குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இதில் உள்ள ஆக்டோ-கோர் எஸ்ஒஎஸ் ஆனது ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தவும் உதவுகிறது.

இந்தியாவில் 5ஜி சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர். குறிப்பாக இப்போது அறிமுகமாகும் அனைத்து வகையான 5ஜி போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் ஒப்போ ரெனோ 8டி போன் கூட 5ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த இணைய வேகத்தை வழங்கும். யூடியூப் சேனலில் வீடியோக்களை பதிவேற்றவும், பெரிய கேம்களை பதிவிறக்கம் செய்யும் இந்த போன் அருமையாக பயன்படும். குறிப்பாக இந்த போன் 5ஜி வசதிக்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டு வெளிவந்துள்ளது.

மல்டி டாஸ்கிங் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த சாதனம் 8ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் 16 ஜிபி ரேம் எக்ஸ்பான்ஷன் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ போன். குறிப்பாக இது தடையற்ற அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் கலர்ஓஎஸ்13 யுஐ மூலம் இயங்குகிறது இந்த அட்டகாசமான ஒப்போ ரெனோ 8டி 5ஜி. குறிப்பாக இதில் டைனமிக் கம்ப்யூட்டிங் எஞ்சின் ஆதரவு உள்ளதால் 18 ஆப்ஸ்களை அசால்ட்டாக பயன்படுத்த முடியும்.

முன்பு கூறியது போல் இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான கலர்ஐஸ்13 மூலம் இயங்குகிறது. மேலும் இந்த போனுக்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்களும், நான்கு வருடங்களுக்கு செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கலர்ஓஎஸ் 13 ஆனது மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. இதுதவிர ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, மீட்டிங் அசிஸ்டண்ட் மற்றும் ஆட்டோ பிக்சலேட் ஆகிய அசத்தலான அம்சங்களை வழங்குகிறது இந்த தனித்துவமான இயங்குதளம். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், ஒப்போ நிறுவனம் பாதுகாப்பு அம்சத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மேலும் இந்த போன் பயனர்களின் தகவல் கசிவதைத் தடுக்க குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கிளிப்போர்டு உள்ளடக்கங்களைத் தானாகவே நீக்குகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டிராக் சரவுண்ட் சவுண்ட்-ஆடியோ ஆதரவை வழங்குகிறது. கண்டிப்பாக இந்த ஆடியோ வசதி அனைத்து பயனர்களுக்கு பிடிக்கும். மேலும் இந்த போனில் அல்ட்ரா வால்யூம் மோட் கூட உள்ளது. இது ஸ்பீக்கரின் ஒலியளவை 200 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

ஃபர்ஸ்ட் லுக்: ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போன்!

பேட்டரி: ஐந்து அடுக்கு சார்ஜிங் பாதுகாப்பு!

ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஹூட்டின் கீழ் 4,800 எம்ஏஎச் பேட்டரி வசதியை வழங்குகிறது. ஸ்ட்ரீமிங் வீடியோக்கள். ஹெவி வெப் பிரௌவுசிங், மியூசிக் பிளேபேக், கேமிங் போன்ற அனைத்து பயன்பாடுகளையும் பயன்படுத்திய பின்னர் இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி ஆயுளை வழங்குகிறது. அதாவது இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்குகிறது. குறிப்பாக கலர்ஓஎஸ் 13 உடன் இணைந்து ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்குகிறது.

இந்த போனில் பேட்டரிக்கு தகுந்தபடி சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது 67 வாட்ஸ் சூப்பர்வூக்டிஎம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி போன் வெளிவந்துள்ளது. 45 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனை 100 சதவீதம் சாரஜ் செய்ய முடியும்.

பொதுவாக வேகமான சார்ஜிங் வசதி பேட்டரி ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகக் கருதப்பட்டாலும், ரெனோ 8டி 5ஜி போனுக்கு பிரச்சனை இருக்காது. ஏனெனில் ஒப்போ ரெனோ 8டி 5ஜி போனுக்கு பேட்டரி ஹெல்த் எஞ்சின், ஐந்து அடுக்கு சார்ஜிங் பாதுகாப்பை 1600 பேட்டரி சார்ஜிங் சுழற்சிகளை வழங்குவதாகக் கூறுகிறது ஒப்போ நிறுவனம். இவை பேட்டரிக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்கும்.

குறிப்பாக இந்த போனுக்கு மூன்று வருடங்களுக்கான உத்தரவாதம் கொடுக்கிறது ஒப்போ நிறுவனம். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒப்போ நிறுவனம்.

ஃபர்ஸ்ட் லுக்: ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போன்!

எங்களுடைய ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்!

நீங்கள் ஒரு சரியான ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது. பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் செயல்திறன் வசதியுடன் இந்த ஒப்போ ஒப்போ ரெனோ 8டி 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் கேமரா அமைப்பு மற்றும் பேட்டரி வசதி அனைத்து பயனர்களுக்கும் பிடிக்கும். அதேபோல் இந்த போன் குறைந்த எடை கொண்டது.

ஒப்போ ரெனோ 8டி 5ஜி ஆனது உண்மையான 5 ஸ்டார் ஸ்மார்ட்போன் அனுபவத்தைக் கொடுக்கும். பின்பு இந்த போன் ரூ.29,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 2023 பிப்ரவரி 10 ஆ ம் தேதி முதல் பிளிப்கார்ட், ஒப்போ ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த ஒப்போ ரெனோ 8டி 5ஜி விற்பனைக்கு வரும். அதேபோல் சன்ரைஸ் கோல்ட் மற்றும் மிட்நைட் பிளாக் இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்க முடியும். பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ ஸ்டோரில் இந்த போனுக்கு கிடைக்கும் சலுகைகளை பார்க்க தவற வேண்டாம்!

ஃபர்ஸ்ட் லுக்: ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போன்!

ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஸ்மார்ட்போனை மட்டுமின்றி, ஒப்போ நிறுவனம் அதன் லேட்டஸ்ட் என்கோ ஏர்3 டிடபுள்யூஎஸ் இயர்போஸையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இது அதிவேகமான மற்றும் முப்பரிமாண முறையிலான கேட்கும் அனுபவத்தை வழங்குகிறது. ஒப்போவின் இந்த வயர்லெஸ் இயர்போன்ஸ் முற்றிலும் புதிய டிரான்ஸ்பிரென்ட் லிட் டிசைனை கொண்டுள்ளது மற்றும் கம்பீரமான கேடென்ஸ் ஹைஃபை5 டிஎஸ்பி உடன் இணைக்கப்பட்ட சக்திவாய்ந்த 13.4மிமீ ட்ரைவர்களுடன் வருகிறது, இது ஒப்பிடமுடியாத சவுண்ட் குவாலிட்டியை வழங்குகிறது. மேலும், இதிலுள்ள ப்ளூடூத் வி5.2 ஆதரவானது என்கோ ஏர்3 டிடபுள்யூஎஸ் மற்றும் ரெனோ8 டி 5ஜி ஆகியவற்றுக்கு இடையே நிலையான இணைப்பை உறுதி செய்கிறது. இந்த இயர்போன்கள் தனித்தனியாக ஆறு மணிநேர பேட்டரி லைஃப்பை வழங்குகின்றன, மேலும் சார்ஜிங் கேஸுடன் இணைந்து மொத்தம் 25 மணிநேர பேட்டரி லைஃப்பை வழங்குகின்றன. ஐபி54 மதிப்பீட்டை பெற்றுள்ள ஒப்போ என்கோ ஏர்3 ஒவ்வொன்றும் 3.75 கிராம் எடையுடையது மற்றும் பிளிப்கார்ட், அமேசான், ஒப்போ ஸ்டோர் மற்றும் ,மெயின்லைன் ரீடெயில் கடைகள் வழியாக பிப்ரவரி 10, 2023 முதல் விற்பனைக்கு வரும், இதன் விலை வெறும் ரூ.2,999 மட்டுமே ஆகும்.

Best Mobiles in India

English summary
OPPO Reno8 T 5G First Look Reigniting The Segment With Power Packed Features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X