எதை வாங்குறதுன்னே தெரியாது.. March 2026-ல் அறிமுகமாகும் 22 புதிய Smartphone-கள்.. இதோ லிஸ்ட்!
2026 மார்ச் மாதமானது - ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு அதிரடியான மாதமாக இருக்க போகிறது. ஏனென்றால் இம்மாதம் மொத்தம் 20 க்கும் மேற்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஏற்கனவே பல பிராண்டுகள் தங்கள் புதிய ஸ்மார்ட்போன்களின் "வெளியீட்டு தேதிகளை" உறுதிப்படுத்தி உள்ளன.
மீதமுள்ள நிறுவனங்கள் "அது குறித்த" விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியாக முதலில் இந்தியாவில், இந்த மார்ச் 2026 இல் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் எந்தெந்த தேதிகளில் அறிமுகம் (Upcoming Smartphone Launches India March 2026) செய்யப்பட உள்ளன? இதோ விவரங்கள்:

மார்ச் 2 ஆம் தேதி - ஏஐ பிளஸ் பல்ஸ் 2 (Ai+ Pulse 2)
மார்ச் 4 ஆம் தேதி - டெக்னோ பாப் எக்ஸ் (Tecno Pop X)
மார்ச் 2 அல்லது மார்ச் 3 அல்லது மார்ச் 4 ஆம் தேதி - ஆப்பிள் ஐபோன் 17இ (Apple iPhone 17e)
மார்ச் 5 ஆம் தேதி - நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro)
மார்ச் 5 ஆம் தேதி - ரியல்மே நர்சோ பவர் (Realme Narzo Power)
மார்ச் 6 ஆம் தேதி - மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூஷன் (Motorola Edge 70 Fusion)
மார்ச் 7 ஆம் தேதி - ரியல்மே சி83 5ஜி (Realme C83 5G)
மார்ச் 11 ஆம் தேதி - ஷாவ்மீ 17 (Xiaomi 17), ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) மற்றும் ஷாவ்மீ பேட் 8 (Xiaomi Pad 8)
மேற்கண்ட உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் மற்றும் அறிமுகங்களுக்கும் அப்பால், இன்னும் பல ஸ்மார்ட்போன்கள் இந்த மாதம் (மார்ச் 2026) இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் அந்தந்த பிராண்டுகள் சரியான தேதிகளை அறிவிக்கவில்லை. அப்படியாக கீழ்வரும் ஸ்மார்ட்போன்களும் மார்ச் 2026 இல் இந்திய சந்தையில் அறிமுகத்தை காணலாம்:
- ஐக்யூ இஸட்11எக்ஸ் (iQOO Z11x)
- போக்கோ எக்ஸ்8 சீரீஸின் கீழ் போக்கோ எக்ஸ்8 ப்ரோ (Poco X8 Pro), போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (Poco X8 Pro Max)
- போக்கோ சி81 சீரீஸின் கீழ் போக்கோ சி81 (POCO C81) மற்றும் போக்கோ சி81 ப்ரோ (POCO C81 Pro)
- சாம்சங் கேலக்ஸி ஏ37 (Samsung Galaxy A37) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 (Samsung Galaxy A57)
மார்ச் 2026 இல் சீனாவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் விவரங்கள்: சீனாவில், ஒப்போ பைண்ட் என்6 (Oppo Find N6) ஸ்மார்ட்போன் ஆனது மார்ச் 17 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஹூவாய் புரா எக்ஸ்2 (Huawei Pura X2) ஸ்மார்ட்போன் மார்ச் 20 ஆம் தேதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவோ நிறுவனம் அதன் விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra), விவோ எக்ஸ்300 மேக்ஸ் (Vivo X300 Max) மற்றும் விவோ பேட் 6 ப்ரோ (Vivo Pad 6 Pro) ஆகியவற்றை மார்ச் மாத வெளியீட்டிற்காக தயார் செய்து வருகிறது. இந்த பட்டியலில் ஒன்பிளஸ் நிறுவனமும் உள்ளது. ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) இந்த மாதம் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக - 2026 மார்ச் மாதத்தை தொடர்ந்து - ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (Oppo Find X9 Ultra) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ (Oppo Find X9s Pro) ஆகிய மாடல்கள் 2026 ஏப்ரல் மாதத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








