அவரசப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. மட்ட ரேட்ல TECNO ஸ்மார்ட்போன்.. 120Hz டிஸ்பிளே.. 13MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அடிமட்ட பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களை களமிறக்கிவரும் டெக்னோ நிறுவனம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது, டெக்னோ பாப் எக்ஸ் (TECNO Pop X) ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் விற்பனை விவரங்களை உறுதி செய்துள்ளது. இந்த டெக்னோ பாப் எக்ஸ் ஸ்மார்ட்போன் குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வருகிற மார்ச் 4ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக உள்ளது. 120Hz டிஸ்பிளே மற்றும் சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒயிட் (White) கலரில் வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற விவரங்கள் வெளியாகவில்லை.

இருப்பினும், குளோபல் மார்கெட்டில் வெளியான டெக்னோ ஸ்பார்க் கோ 3 (Tecno Spark Go 3) ஸ்மார்ட்போனின் ரீபிராண்ட் வெர்ஷனாக இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் டிசைனும், அப்படியே டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போனை போலவே இருக்கிறது. ஆகவே, அதன் விவரங்களை பார்க்கலாம்.
டெக்னோ ஸ்பார்க் கோ 3 அம்சங்கள் (TECNO Spark GO 3 Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி7250 (Octa Core UNISOC T7250) சிப்செட்டை இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுத்துள்ளது.
6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டிலும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. மேலும், எல்லா ஏஐ (Ella AI) அசிஸ்டன்ட் கொண்ட மாடலாகவும் இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 இருக்கிறது.
நோ நெட்வொர்க் கம்யூனிகேஷன் 2.0 (No Network Communication 2.0) மற்றும் ப்ரீலிங்க் 2.0 (FreeLink 2.0) போன்ற பீச்சர்களுடன் ஹாய்ஓஎஸ் 15 (HiOS 15) கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ கால் நாய்ஸ் ரெடக்சன் (AI Call Noise Reduction), ஏஐ ஸ்கேன் டாகுமெண்ட் (AI Scan Document) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. 13 எம்பி மெயின் கேமரா கொண்ட சிங்கிள் ரியர் கேமரா கிடைக்கிறது.
மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட்கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டெக்னோ ஸ்பார்க் கோ ஸ்மார்ட்போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.
இன்க் பிளாக் (Ink Black), அரோரா பர்பிள் (Aurora Purple), கேலக்ஸி ப்ளூ (Galaxy Blue) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த டெக்னோ ஸ்பார்க் கோ 3 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,999ஆக இருக்கிறது. ஆகவே, டெக்னோ பாப் எக்ஸ் ஸ்மார்ட்போனை அதே பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications