செஞ்சிட்டான் Xiaomi.. 200MP டெலிபோட்டோ, 6000mAh பேட்டரி, 16GB ரேம் புது போன் அறிமுகம்.. எந்த மாடல்?
ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போன் உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவில் ஏற்கனவே அறிமுகமாகி விட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஷாவ்மீ 17 மாடலுடன் சேர்ந்து உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
என்ன விலை? 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வரும் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,61,264 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளாக் , ஸ்டார்லைட் க்ரீன் மற்றும் ஒயிட் கலர்களில் வருகிறது.

மேலும் வாடிக்கையாளர்கள் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் போட்டோகிராபி கிட் மற்றும் போட்டோகிராஃபி கிட் ப்ரோ ஆகியவைகளையும் வாங்கலாம். இவைகளின் விலை நிர்ணயம் முறையே இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.10,757 மற்றும் தோராயமாக ரூ. 21,515 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் அதன் முன்னோடியை விட பேட்டரி, சிப்செட், செயல்திறன் மற்றும் கேமராக்கள் என கிட்டத்தட்ட எல்லா டிப்பார்ட்மென்ட்களிலுமே மேம்படுத்தல்களை வழங்குகிறது. அப்படி ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:
ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- Android 16 ஓஎஸ் அடிப்படையிலான HyperOS 3 ஓஎஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 GPU
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்
- Leica-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,000mAh பேட்டரி
- 5G, 4G LTE, USB டைப்-சி போர்ட், NFC, Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்


Click it and Unblock the Notifications