Home
Mobile

அடுத்த Honor போன் ரெடி.. 200எம்பி கேமரா.. 9000mAh பேட்டரி.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்?

ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் 600 (Honor 600) ஸ்மார்ட்போனை விரைவில் உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் ஹானர் 600 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஹானர் 600 அம்சங்கள் (Honor 600 Specifications): 6.57-இன்ச் எல்பிடிஎஸ் டிஸ்பிளே உடன் புதிய ஹானர் 600 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

அடுத்த Honor போன் ரெடி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm's Snapdragon 8 Elite) சிப்செட் உடன் ஹானர் 600 ஸ்மார்ட்போன் வெளியாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுதத் முடியும். அதாவது ஸ்மார்ட்போனுககு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

200எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் ஹானர் 600 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமாக படங்கள் மற்றும் வீடியோக்களையும் எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor)வசதியுடன் புதிய ஹானர் 600 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் புதிய ஹானர் 600 போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகள் ஹானர் 600 ஸ்மார்ட்போனில் உள்ளதாக கூறப்படுகிறது. 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதவுடன் இந்த புதிய ஹானர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அடுத்த Honor போன் ரெடி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஹானர் 600 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

9000எம்ஏஎச் பேட்டரி உடன் ஹானர் 600 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஹானர் 600 ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor 600 Specifications Leaked Online: all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X