வாங்குனா இப்படி ஒன்னு வாங்கனும்.. 6660mAh பேட்டரி.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. புது HONOR ஸ்மார்ட்போன்!
ஹானர் நிறுவனத்தின் அடுத்த போல்டபிள் ஸ்மார்ட்போன் மாடலான ஹானர் மேஜிக் வி6 (HONOR Magic V6) ஸ்மார்ட்போனானது மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2026 நிகழ்வில் வெளியாகி இருக்கிறது. ஹானர் மேஜிக் வி5 ஸ்மார்ட்போனை விட அதிக பேட்டரி கேபாசிட்டி கொடுத்துள்ளது. இந்த ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.
சாம்சங், மோட்டோரோலா நிறுவனங்களுக்கு நிகராக போல்டபிள் ஸ்மார்ட்போன்களை ஹானர் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இதில் ஹானர் மேஜிக் வி5 ஸ்மார்ட்போன் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த மேஜிக் சீரிஸில் அடுத்த வெர்ஷனாக ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போன் அப்கிரேடட் பீச்சர்களுடன் களமிறங்கி இருக்கிறது.

ஹானர் மேஜிக் வி6 அம்சங்கள் (HONOR Magic V6 Specifications): 7.95 இன்ச் (2352 x 2172 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 403 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 6.5 இன்ச் (2420 x 1080 பிக்சல்கள்) கவர் டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதில் 406 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது.
மேலும், 64 எம்பி டெலிபோட்டோ கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த ஹானர் மேஜிக் 6 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஏஐமேஜ் கலர் என்ஜின் (AiMAGE Color Engine), ஏஐ சினிமா கலர் (AI Cinema Color) போன்ற கேமரா பீச்சர்களையும் கொண்டுள்ளது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுத்துள்ளது.
ஹானர் ஆன்டி ஸ்க்ராட்ச் நானோகிரிஸ்டல் ஷீல்டு (HONOR Anti-scratch NanoCrystal Shield) கொடுத்து உள்ளது. 6660mAh பேட்டரியை இந்த ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 8.75 எம்எம் தடிமன் வருகிறது. இது போல்டு செய்தாலும் கிடைக்கும் தடிமனாக இருப்பதால், அன்போல்டின் போது அல்ட்ரா ஸ்லிம் மாடலாக இருக்கிறது.
ஒயிட் (White), ரெட் (Red), பிளாக் (Black) மற்றும் கோல்டு (Gold) கலர்களில் வெளியாகி இருக்கிறது. மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2026 (Mobile World Congress 2026) நிகழ்வில் வெளியாகி இருக்கிறது. சீன மார்கெட்டில் அடுத்து வெளியாகும். பிறகு மற்ற மார்கெட்களில் எதிர்பார்க்கலாம். விலை விவரங்கள் வெளியாகவில்லை. ஹானர் மேஜிக் வி5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1 லட்சம் மேல் உள்ளது.
ஆகவே, இந்த ஹானர் மேஜிக் வி6 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலையிலும் ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும். ஹானர் மேஜிக் வி5 ஸ்மார்ட்போனில் 6100mAh பேட்டரி கிடைத்தது. ஆனால், இதில் 6660mAh பேட்டரி கிடைத்துள்ளது. அதேபோல சிப்செட்டிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. ஆகவே, ஹானர் மட்டுமல்லாமல், போல்டபிள் பிரியர்களிடையேயும் வரவேற்பு பெறலாம்.


Click it and Unblock the Notifications








