வந்துட்டான்யா எங்க பட்ஜெட் ராஜா Realme.. 5ஜி, 7000mAh பேட்டரி, 50MP கேமரா, 4GB ரேம் உடன் புதிய போன்!
நீண்ட நாட்கள் கழித்து - ரியல்மி (Realme) நிறுவனம் அதன் "பட்ஜெட் விலை" சி-சீரிஸின் கீழ். ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை, கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது. நினைவூட்டும் வண்ணம் கடைசியாக ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்த சி-சீரீஸ் ஸ்மார்ட்போன் ரியல்மி சி85 5ஜி (Realme C85 5G) மாடல் ஆகும்.
இது கடந்த 2025 ஆம் ஆண்டு ஆண்டு நவம்பரில் இந்தியாவில் அதன் லேட்டஸ்ட் சி-சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகமானது. இது 7000mAh பேட்டரி மற்றும் டைமன்சிட்டி 6000 சீரீஸ் சிப்செட் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இப்போது இதன் தொடர்ச்சியாக இந்நிறுவனம் ரியல்மி சி100 5ஜி (Realme C100 5G) என்கிற மாடலை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? 91மொபைல்ஸ் (91Mobiles) வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி - இந்த ஸ்மார்ட்போன் 6.75-இன்ச் டிஸ்பிளேவுடன் வரலாம். இது குறைந்தபட்சம் 4ஜிபி ரேம் + 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 50-மெகாபிக்சல் டூயல் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம்.
வடிவமைப்பை பொறுத்தவரை, ரியர் பேனலில் செவ்வக கேமரா மாட்யூலுக்குள் வைக்கப்பட்டுள்ள LED ஃபிளாஷ் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப் டிசைன் இடம்பெறலாம். முன்பக்கத்தில் ஒரு வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச்சை கொண்டிருக்கலாம், அதில் செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கான கேமரா உட்பொதிக்கப்படலாம்
ரியல்மி (Realme) பிராண்டிங் ஆனது ரியர் பேனலின் கீழ்-இடது மூலையில் இடம்பெறலாம். ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் ஒரு பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோலர் வைக்கப்படலாம்; ஸ்மார்ட்போனின் இடது பக்கம் க்ளீன் ஆக இருக்கலாம். பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் குறித்த விவரங்கள் இல்லை. ஆனாலும் "கடந்த ஆண்டே" வெளியான ரியல்மி சி85 5ஜி ஆனது 7000mAh பேட்டரியை கொண்டிருக்கும் போது, "இந்த ஆண்டு" வரும் மாடலில் அதே அளவு அல்லது அதைவிட அதிகமான பேட்டரி கெப்பாசிட்டி இடம்பெறும் என்று எதிர்பார்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
எப்போது அறிமுகம்? தாய்லாந்தில் உள்ள NBTC சான்றிதழ் தரவுத்தளத்தில் உள்ள லிஸ்டிங் ஆனது ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தி உள்ளது. இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்தும் ஒப்புதலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இத்தாலியில் உள்ள அமேசானின் வலைத்தளத்திலும் ரியல்மி சி100 5ஜி ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆக இது தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அறிமுகமான ரியல்மி சி85 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள்: தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது பிளிப்கார்ட் வழியாக ரூ.16,497 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது இது கடந்த நவம்பர் 2025 இல் ரூ.16,499 என்கிற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி இது 7,000mAh பேட்டரியுடன் வருகிறது. இது கார்னிங் கிளாஸ் பாதுகாப்பு மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8-இன்ச் எச்டி பிளஸ் (720x1,570 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications